உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Sunday, 13 April 2014

பித்ரு தோஷம், பித்ரு சாபம்

நம்மில் பலரது வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது.ஆனால்,ஜோதிடர்கள் பலரிடம் நமது ஜாதகத்தைக் காட்டியிருப்போம்;எல்லோருமே சொல்லி வைத்தாற்போல,உங்களுக்கு அந்த யோகம் இருக்குது;நீங்கள் கோடீஸ்வரன் தான் என்று புகழ்ந்து தள்ளியிருப்பர்.இருப்பினும் நமது கஷ்டங்கள்,சிரமங்கள்,வேதனைகள் நமக்கு மட்டும் தானே தெரியும்?
 
நம்மில் பலர் யாருக்கும் தீமை செய்யாதவராகவே இருக்கிறோம்.நாம் உண்டு;நமது வேலை உண்டு என்றுதான் இருக்கிறோம்.காதலில் கூட ஒரே ஒருத்திகூட வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறோம்.நிம்மதியும்,செல்வ வளமும் நமது லட்சியங்களாக இருப்பினும் ,பல கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக்கியிருந்தாலும்,பல அன்னதானங்களை செய்திருந்தாலும்,ஏதாவது ஒரு மந்திரத்தை தினமும் ஜபித்துக்கொண்டிருந்தாலும் வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே சென்று கொண்டிருக்கிறது.இதற்கான காரணத்தை ஒரு சில திறமையான ஜோதிடர்கள் மட்டுமே கணித்துச் சொல்ல முடியும்.
 
ஒருவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்,அவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்றே அர்த்தம்.இராகு என்பது அப்பாவழி முன்னோர்களைப் பற்றியும்,கேது என்பது அம்மாவழி முன்னோர்களையும் விவரிக்கும் கிரகங்கள் ஆகும்.
 
ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராகு ஐந்தாமிடத்தில் இருந்தால்,அவர் தன்னலம் கருதாதவராக இருப்பார்;ஆனால்,இவரது உதவியால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் இவரை சிறிது கூட சீண்டமாட்டார்கள்;அதே ஐந்தாமிடத்தில் கேது இருந்தால்,இவர்கள் தனது குடும்பத்தாரினாலேயே புறக்கணிக்கப்படுபவராக இருப்பார்;இவர் ஊருக்கு உபகாரியாக இருப்பார்;வீட்டில் இவருக்கென்று சிறிதும் மரியாதை இராது.நாம் ஏன் எல்லோருக்கும் நல்லது செய்தும் கூட நமக்கு எவரும் நல்லது ஒன்றுகூட செய்வதில்லை என்ற ஏக்கம் எப்போதும் இவர்களை வாட்டும்.
 
இதுவே லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் ராகு இருந்தால்,இவருக்கு அப்பாவழி முன்னோர்களின் பிள்ளைகள் விரோதிகளாக இருப்பர்;அல்லது அப்பாவழி பூர்வீக சொத்துக்கள் அழிந்து போயிருக்கும்;அல்லது பூர்வீக சொத்து தொடர்பாக வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.எவருக்கும் உரிய பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது;கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமான சொத்துக்கள் இருந்தாலும் இதே சூழ்நிலைதான்!
லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்,அந்த ஜாதகருக்கு அம்மா மற்றும் அப்பாவழி முன்னோர்களின் பித்ரு சாபம் இருப்பதாக அர்த்தம்.