உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Wednesday, 26 February 2014

மாந்திரீகத்தின் எட்டு வகை அஷ்ட கர்மம்


 அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு  கை இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும்.
அப்படி முறையாக கற்றவரே உண்மையான
மாந்திரீகவாதியாவார்.

அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர்.
அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய சல்லியம் என்னும்
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு,
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள்
பற்றிய தகவல்களை தந்துள்ளார்.


               அஷ்ட கர்மத்திற்குரிய நாட்கள்:              ஞாயிறு  -   வசியம்

             திங்கள் -    மோகனம்


            செவ்வாய் - வித்துவேஷணம்
            

            புதன்         - தம்பனம்

            வியாழன் - உச்சாடனம்---பேதனம்


            வெள்ளி      - ஆக்ருஷணம்


            சனி - மாரணம்


இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச்
செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய முனிவர்.

                          திசைகள்

                        கிழக்கு - வசியம்

                        தெற்கு - மோகனம்,மாரணம்


                        மேற்கு - உச்சாடனம்


                        வட்க்கு - பேதனம்


                        தென்மேற்கு - வித்துவேஷ்ணம்


                        தென்கிழக்கு - தம்பனம்


                        வடமேற்கு - ஆக்ருஷணம்


                       வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த திசையாகும்.


                                      வஸ்திரம்
                     

                      சிவந்த வஸ்திரம் - வசியம்

                     மஞ்சள்வஸ்திரம் - மோகனம்


                     பச்சை வஸ்திரம் - தம்பனம்


                     வெள்ளை வஸ்திரம் - பேதனம்


                      பச்சைப்பட்டு - உச்சாடனம்


                      கருப்பு வஸ்திரம் - மாரணம்


                      செம்பட்டு-சகல கர்மத்திற்கும் உகந்த உடுப்புகளாகும்.





                            உலோகங்கள்

                           காரீயம்               - வசியம்

                           வங்கம்               - மோகனம்

 
                           பொன்               - ஆக்ருஷணம்

    
                            செம்பு              - தம்பனம்

      
                            வெள்ளீயம்      - உச்சாடனம்

 
                            குருத்தோலை   - வித்துவேஷணம்


                            இரும்பு            -  பேதனம்

     
                            வெள்ளி          - மாரணத்திற்கும்        


                                          எண்ணைகள்

                                      பசு நெய்                    -  வசியம்
   
                                     நல்லெண்ணை            - மோகனம்


                                     வேப்பெண்ணை         - மாரணம்


                                    புங்கெண்ணை             
- உச்சாடணம்


                                    புன்னை எண்ணை - பேதனம்


                                    ஆதளை எண்ணை - தம்பனம்


                                    கழுதை,ஆடு,பன்றிகளின் நெய் - வித்துவேஷணம்


                                    வன்னி,ஆல்,விளா,இவைகள் - சுபகர்மத்திற்கும்


                                    கள்ளி,எருக்கு,எட்டி


                                    அத்தி,இச்சி,விடத்தலை



இவைகள்} - அசுபகர்மத்திற்கும் உகந்த எண்ணை வகைகளாகும்
.




அதிதேவதைகள்:


ஈசன்                      -  வசியம்

அக்கினி               - மோகனம்


இந்திரன்             - தம்பனம்
நிருதி                    - உச்சாடனம்

வருணன்            - ஆக்ரூஷணம்

வாயுதேவன் - வித்துவேஷனம்

குபேரன்              - பேதனம்


எமன் - மாரணம்

 
முதலியன அஷ்டகர்மத்திற்குரிய திதேவதைகளாகும்.


மலர்கள்:

மல்லிகை   -  வசியம்

முல்லை -    மோகனம்


தாமரை -      தம்பனம்


தும்பை -       உச்சாடனம்


அரளி       -       ஆக்ரூஷணம்


காக்கண மலர் - வித்துவேஷணம்


ஊமத்தம் - பேதனம்


கடலை மலர் - மாரணம்


 முதலியன அஷ்டகர்மத்திற்குரிய மலர்களாகும்.

ஆசனங்கள்:

வில்வப்பலகை               -    வசியம்

மாம்பலகை                        -   மோகனம்


பலாப்பலகை                     -    தம்பனம்


நீலக்கம்பளம்                    -    உச்சாடனம்


வெள்ளாட்டுத்தோல் -   ஆக்ருசணம்


எட்டிப்பலகை                    -  வித்துவேஷனம்


மரத்தோலாடை              -பேதனம்


அத்திப்பலகை - மாரணம்


 முதலியன அஷ்டகர்மத்திற்குரிய ஆசனங்களாகும்.