உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Wednesday, 26 February 2014

அஷ்ட கர்மங்களில் முதலாவது வசியம்

வசியம் அதிதேவதை ஈசன்

                                               எட்டுவகை வசியம்

                                              1) சர்வவசியம்

                                              2)இராஜ வசியம்

 
                                              3)புருஷவசியம்

 
                                              4)ஸ்த்ரீ வசியம்


                                              5)மிருகவசியம்

 
                                              6)சர்ப்ப வசியம்

 
                                              7) சத்துரு வசியம்

 
                                              8) லோகவசியம்


                                                 வசிய  மந்திரம்


 ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் சிவப்பு நிற ஆடை அணிந்து கிழக்கு முகமாய் அமர்ந்து கொண்டு முறையான
பூசை வைத்து அதன் நடுவில்

ஒரு காரீயத்தகட்டில் முக்கோணம் போட்டு அதன் நடுவில்
ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் லங் என்று எழுதவும்

 இந்த யந்திரத்தை வைத்து 

 "ஓம் பிறீங் அங் அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா"

வசியமந்திரத்தை நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள்
செபித்தால் வசியம் எட்டும் சித்தியாகும். அப்படி சித்தியானால் நீ நினைப்பதெல்லாம் சித்தியாகும்.
மாணவனே உனக்காக இதை சொல்கிறேன் கைஅடக்கமாக
இருந்து இதன் பலனைப்பார்  



கேளடா வசியமென்ற யெட்டுக்குந்தான்
கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு
வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா வென்று
வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு
காலடா முக்கோணம் நடுவில்விந்து
கருவாக லங்கெனவே சந்திரபீஜம்
ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி
அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே.

செய்யடா தினம்நூறு உருவேசெய்தால்
செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும்
மெய்யடா வசியமது சித்தியானால்
மேன்மைபெற நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
அய்யனே புலத்தியனே உனக்காய்ச்சொன்னேன்
கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன
கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே.