உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Thursday, 27 February 2014

செய்வினை, ஏவல், பில்லி, சூனியம்,அழிந்தோட

 

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர்.  ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி.  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு.  பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான்.  சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை.  தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன.  அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார்.  அதன் பின்னரே சக்திபண்டாசூரனைவதம்செய்தாள்
.
மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள்.  அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.  இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர்.  ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்.  அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.
 
 
 
இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.  இதோ அதன் செய்முறை…!
 
 வ.எண்பொருட்கள்அளவு
1.வெண்கடுகு250 கிராம்
2.நாய்க்கடுகு250 கிராம்
3.மருதாணி விதை250 கிராம்
4.சாம்பிராணி250 கிராம்
5.அருகம்புல் பொடி50 கிராம்
6.வில்வ இலை பொடி50 கிராம்
7.வேப்ப இலை பொடி50 கிராம்
 
 
 
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.  எங்கும் தேடி அலைய வேண்டாம்.  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
 
 
 
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
 
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.  ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை.  யார் காலிலும் படக்கூடாது.  மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.