இது ஓர் இரகசிய மாந்திரீக முறை இருப்பினும் அனைவரும் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக இதை வெளியிடுகிறேன்.
எப்படிப்பட்ட மாந்திரீக பிரயோகம் செய்யப்பட்டு ஒருவர் பாதிக்கபட்டாலும் அவரை அப்பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பது நமது கடமை அல்லவா. அதற்கான முறையே இது.
காய் வெட்டி அட்சரம் கட்டி பின்னரும் அவரின் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் இதை முறையாக செய்து மேல் ஏவப்பட்ட எப்படிப்பட்ட மந்திர சக்தியையும் முறியடிக்க முடியும், அத்துடன் இது எதிரியின் மேல் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
முறைப்படி எலுமிச்சம் காய் வெட்டி பின்னர் அட்சரம் கட்டி அதற்கும் அடங்காவிடில் இதை செய்யவும். இந்த முறையை மாந்திரீகர் செய்ய முற்படும் போது அவரின் மாந்திரீக சக்தியின் பாதி பலம் அவரை விட்டு போய்விடும், பின்னர் 9 நாள் தனது வாலாய சக்தியை பிரணவம் செய்து சக்தியை எடுக்கவேண்டும்.
மந்திரம் ஒழுங்கு முறை
1. காய் எடுக்க
ஓம் ஸ்ரீயும் சிவ காயத்திரியே நம
2. அட்சரத்தில் காய் வைக்க
ஓம் மாரணாயா நம
3. தண்ணீர் தெளிக்க
ஓம் அஸ்திராயா நம
4. மஞ்சல் குங்குமம் பூச
ஓம் நிமாயி நம
5. காய் மீது திரி கொளுத்தி வைக்க
ஓம் அஸ்திராயா நம
6. காய் வெட்ட மந்திரம்
ஓம் ஏழு கடலுக்கப்பால் எழுந்த பேரொளி, பேரொளியின் கீழே குரு முனி தவசிருக்குறார் சிதரிடு சிதரிடு ஓங்கி பாங்கி பற்றிடு பற்றிடு இவர் மேல் வரப்பட்ட பேய் பசாசு பில்லி வஞ்சனை சூனியம் அங் அறு இங் அறு எடுத்தெறி எடுத்தெறி தகன மாரணாயா நம.
அட்சரம் காய் வைக்க
கிரிகை
முறைப்படி காய் வெட்டும் முறைக்கு அனைத்தும் செய்து குறிப்பிட்டவரை முன் நிருத்தி காய் மீது 3 திரிகளை கொளுத்தி மந்திரம் சொல்லி அவரை கடக்க விட்டு வெட்டவும். பின்னர் தண்ணீர் ஓதி அவருக்கு தெளித்து அட்சரம் கட்டவும். மந்திர உரு 21 தடவை க்கு மேல்.