இங்கே மூலஸ்தானத்தில் சிவலிங்கமோ, நடராசர் சிலையோ இல்லை கோவிலைச் சுற்றிலும் மாமரங்கள், இங்கே நான்கு வாயில்கள் மேற்கு வாயிலில் மட்டும் நந்தி தேவர் உள்ளார்.
கருவறை என்று சொல்லப்படும் இடத்தில் சிறிய பள்ளம் காணப்படுகிறது. இந்த பள்ளத்தை தான் சிவபெருமான் என்று கூறுகின்றனர்
இங்கேதான் பாதாள லிங்ககேஸ்வராக தன்னை வெளிகாட்டி கொள்ளாமால் அமர்ந்து அருள் பாலிக்கிறார்
இங்கே இந்த பாதாள லிங்ககேஸ்வரரை மனமுருக வேண்டி ஒன்பது முறை வலம் வந்தால் நம்மை சூழ்ந்து உள்ள கர்மங்கள் தீரும் இந்த ஸ்தலத்தில் பாதாள லிங்ககேஸ்வரரை மையமகா கொண்டு சூட்ச்சம முறையில் பஞ்ச லிங்கங்கள் பாதாளத்தில் பிரதிஷ்டை செய்யபட்டு உள்ளதாக தல வரலாறு இந்த பாதாள லிங்ககேஸ்வரரை தூய மனதுடன் மனமுருக வேண்ட சகல காரியங்களும் வெற்றி. செல்வ சூபிட்ச்சத்தை தரும்
மகாராஷ்டிராவில் கொங்கன் என்ற பகுதியை ஆட்சி செய்த சில்காரா அரச பரம்பரையில் வந்த சித்தராஜன் கடம்பவன அரசர்களைப் போர் செய்து வெற்றி பெற்றான். அந்த வெற்றிக்குக் காணிக்கையாக இந்த ஆலயத்தை கி.பி. 1060 -ல் அமைத்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.
மும்பை செல்வோர் வணங்கி வர வேண்டிய அதிசய கல்வெட்டுக் கோயில் இது.