உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Wednesday, 2 April 2014

கீழக்கரை ஏர்வாடி தர்கா அற்புதங்களும் தர்கா வரலாறும்


கீழக்கரை தர்கா
 
அலை புரளும் கடல் அருகே அருள் நிறைந்து அமைந்துள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு அடக்கமாகி உள்ள முஸ்லிம் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லாவின் அருளால் ஏர்வாடி தர்காவில் அன்றாடம் அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகிறது. இந்த தர்காவுக்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் பெருமளவு இந்துக்க ளும், பிற மதத்தினரும் திரண்டு வருகின்றனர். இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு வந்து குவியும் நோயாளி கள், குறிப்பாக மனநோயாளிகள் பில்லி, சூனியத் தால் பாதிக்கப்பட்டோர், திருமணம் தடைபடுவோர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் என அனைவரும் அதிசயதக்க வகையில் மகானின் அருளால் குறை நீங்கி செல்கின்றனர்.


      மகான் இபுராகீம் ஷகீது வரலாறு

மகான் இபுராகீம் ஷகீது கி.பி.1137ம் ஆண்டு நபிகள் நாயகத்தின் 18ம் வாரிசுகளான செய்யது முகமது-செய்யது பாத்திமா தம்பதியின ரின் புதல்வராக பிறந்தார். அரபு நாட்டில் மதினாவில் மன்னராக வாழ்ந்து வந்தவர் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா. தனது 13வது வயதினிலேயே திருக்குரானை மனதில் பதியம் போட்ட இவர் இறை வனின் நாட்டப்படி கி.பி.1163ல் அரச பதவியை துறந்தார். அதன் பின்னர் அவர் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய மார்க்கத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு ஈராக், ஈரான், பாகிஸ்தான் வழியாக சுமார் 3,000 தொண்டர்களுடன் இந்தியா வந்தார். அவர் தன் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்து மார்க்க பிரசாரம் செய்தார்.
இந்தியாவில் முசிறி துறைமுகத்தை அடைந்த பாதுஷா நாயகம் புன்னைகாயல் சென்றார். அதனை தொடர்ந்து இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிக்கு தன் அமைச்சர்கள், பிரதானிகள் மற்றும் படை பட்டாளத்தோடு வந்தார். ஏர்வாடியில் நடந்த போரில் ஒலியுல்லா வின் மகன் செய்யது அபுதாகீர் உள்பட பலர் மரணம் அடைந்தனர். இதன்பின் மகான் சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா இன்று ஏர்வாடி என்று அழைக்கப்படும் அன்றைய பவுத்திர மாணிக்க பட்டினத்தை தலைநகராக கொண்டு 12½ ஆண்டுகள் அரசாட்சி நடத் தினார். இதன் பின்னர் நடந்த போரில் அவர் தியாக மரணம் அடைந்தார். அவர் மற்றும் உடன் வந்த பலர் தியாக மரணம் அடைந்ததால் அவர்களின் சமாதிகள் தர்கா பகுதியில் உள்ளன. இதில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லாவின் சமாதி (மக்பாரா) பிரதான தர்காவாக உள்ளது. அன்று முதல் இன்று வரை இவரின் அருளால் ஏர்வாடி தர்கா ஆன்மிக அருள்நிறைந்த புண்ணிய பூமியாக உள்ளது.


                              சந்தனக்கூடு

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்த தர்காவில் இந்த ஆண்டு 841வது உரூஸ் எனப்படும் சந் தனக்கூடு திருவிழா  இரவு தொடங்கி அதிகாலை வரை சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் விழா என்பதற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூட்டை தாங்கும் அடித்தளம் ஆசாரி சமூகத்தினரால் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகிய கூடுகளை யாதவர்களும், ஆதிதிராவிடர்களும் தர்காவில் இருந்து தூக்கி வந்து அடுக்கடுக்காக வைத்து அலங்கரிப்பார்கள். முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மனமுவந்து  கொண்டு வரும் கடல் நீரை கொண்டு தர்கா சுத்தம் செய்யப்படும்.

சம்பிரதாயப்படி தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதி திராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி சந் தனக்கூடு வழிகாட்டியாக அமைத்து கூடு புறப்பட தயார் நிலையில் வைப்பார்கள். ஏர்வாடியில் இருந்து யானைகள், குதிரைகள் பவனி வர மேள தாளம், ஆடல்பாடல், வான வேடிக்கைகளுடன் ஊர்வலம் தர்காவை நோக்கி வரும். ஏர்வாடியில் இருந்து காட்டுப்பள்ளி தர்கா போகும் வழிவரை யாதவர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை தூக்கி வருவார்கள். அங்கிருந்து தர்கா வரை முத்தரையர் சமூகத்தினர் தூக்கிவருவார்கள். இவ்வாறு அனைத்து மதத்தினரும் ஒன்றாக இந்த விழாவை கொண்டாடுவது காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். தர்காவிற்கு கொண்டு வந்த சந்தன சொம்பை மார்க்க அறிஞர்கள் பாத்தியா ஓதிய பிறகு மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா மக்பாராவில் (சமாதி) சந்தனம் பூசுவார்கள். சந்தனக்கூடு திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அனைத்து மத பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.