உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Wednesday, 2 April 2014

இஸ்லாமிய புனிதத்தலம் நாகூர் தர்கா

                                                   நாகூர் தர்கா

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் நாகூர் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய புனிதத்தலம் நாகூர் தர்கா. இது 500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. இது ஹஸ்ரத் சய்த் ஷாகுல் ஹமீத் க்வாதீர் (நாகூர் ஆண்டவர்) என்ற இஸ்லாமிய புனிதரின் கல்லறை ஆகும். இந்த தர்கா ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது மேற்பகுதி தங்க கூரையையும், ஐந்து ஸ்தூபிகளையும் கொண்டு விளங்குகிறது.
 
                 இஸ்லாமிய புனிதரான ஹஸ்ரத் சய்த் ஷாகுல் ஹமீத் க்வாதீர் உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தியாவிற்கு அருகிலுள்ள மானிக்காபூர் என்ற இடத்தில் கி.பி. 1491 - இல் பிறந்தார். உலகம் முழுவதும் சென்று இஸ்லாமிய சமயத்தைப் பரப்பிய இவர் தன் இறுதி நாட்களை நாகூரில் கழித்தார். அப்போது தஞ்சாவூரை ஆண்டுவந்த அச்சுதப்பா நாயக்கன் என்ற மன்னனின் நோயை இவர் குணப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அம்மன்னன் சுமார் 30 ஏக்கர் நிலத்தை அளித்தார். அந்த இடத்தில் தான் தற்போது தர்காவும், பிற கட்டிடங்களும் அமைந்துள்ளன. கி.பி. 1559 - ஆம் ஆண்டு இறைபதம் சேர்ந்த புனிதரின் உடல் இந்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது மகன் மற்றும் மருமகளின் சமாதிகளும் அருகிலேயே உள்ளன. பின்னாளில் தஞ்சாவூரை ஆண்ட துளசி மகாராஜா என்ற மன்னர் இந்த தர்காவின் பராமரிப்பிற்காக 4000 ஏக்கர் நிலத்தை வழங்கினார்.
 
                 அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் அவரால் செய்யப்பட்டு வந்த அதிசயங்கள் அவருடன் நின்றுவிடாமல் இன்றும் தொடர்கிறது. இங்கு ஆண்டுதோறும் 14 நாட்கள் கொண்டாடப்படும் கந்தூரி விழா நாகூர் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இவ்விழாவில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்
 
 
                                           நாகூர் கந்தூரி விழா

தர்கா வரலாறு:

நாகூர் நாயகம் மறைந்ததும் அவரது புதல்வர் தனது மனைவி, மக்களுடன் அங்கு குடித்தனம்
நடத்தி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருந்ததோடு
நாயகத்தின் கஃப்ரை சுற்றி பலகையால் பள்ளி போல் அடைத்தார்கள். அந்தப்பள்ளியே இன்று
அழகிய ஐந்து மினாராக்களை( கோபுரம்) உடையதாய் விளங்குகிறது.
முதல் மினாராவை இப்ராஹீம் கான் என்பவர் ஹிஜ்ரி ஆயிரத்து ஐம்பத்தைந்தாம் வருடம்
கட்டினார். இதற்கு சாகிபு மினாராவென்று பெயர். இரண்டாம் மினாராவை செய்யது மரைக்காயர்
கட்டிக் கொடுத்தார். இம்மினாரா நாயகத்தின் தலைப் பக்கம் இருப்பதால் தலைமாட்டு மினாரா
எனப்படுகிறது. இந்த மினாராவில் இந்து அன்பர் ஒருவர் சின்ன தங்கக் கலசத்தை அமைத்துக்
கொடுத்துள்ளார்.
மூன்றாம் மினாரா( முதுபக்கு மினாரா) மலாக்காவை சேர்ந்த பீர் நெய்னா என்பவராலும்,
நான்காம் மினாரா (ஓட்டு மினாரா) பரங்கிப்பேட்டை நீதிபதி தாவுக்கான் என்பவராலும்,
ஐந்தாம் மினாரா(பெரிய மினாரா) தஞ்சையை ஆண்டுவந்த பிரதாபசிங்கு மன்னனாலும் கட்டிக்
கொடுக்கப்பட்டது. பெரிய மினாரா 131 அடி உயரம் கொண்டதாகும்.
நாகூர் தர்கா ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. சக்கரவர்த்தி சுல்தான் துல்கர்னைன்
கட்டிய முதுபக்கு(1). இந்த ஸ்தலத்தில் தான் நாயகம் மரணித்தார்கள். இந்த ஸ்தலத்தில் உள்ள
அற்புதக்கேணியின் தண்ணீரை புண்ணிய தீர்த்தம் என்று கருதி பக்தர்கள் எடுத்து செல்லுகின்றனர்.
நாயகத்தின் இறந்த உடலை குளிப்பாட்டி யாஹ§சைன் பள்ளி(2).இது முதுபக்குக்கு வெளியில்
தென்புறத்தில் இருக்கின்றது. நாயகத்தின் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் தேங்கி நின்ற சிறிய
குட்டை தான் தர்கா குளம்(3). குட்டை போலிருந்ததை அச்சை சுல்தான் பெருங்குளமாக வெட்டி
தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தான்
.
தர்காவில் இருக்கும் பீர்மண்டபம்(4). திருவிழாக்காலங்களில் பீர் சாயபு என அழைக்கப்படும்
தபோதனர்கள் 3 நாள் உபவாசம் இருந்து நோன்பு திறந்துவிட்டு பீர்மண்டபத்தில் வந்து அமர்வர்.
நாயகம் திருமுடியிறக்கிய கடற்கறை ஓரம் தான் சில்லடி(5) என்ற ஆலயம் இருந்து வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவும் நடந்து வருகிறது.
நாயகம் அவர்கள் 40 நாள் இறைதியானம் இருந்த புன்னிய ஸ்தலம் வாஞ்சூர் பள்ளிவாசல்(6). இது
நாகூரிலிருந்ஹ§ 21/2 மைல் தொலைவில் உள்ளது.
ஹஜ்ரத் ஷாஹ¨ல் ஹமீது பாதுஷா ஆண்டவர்களின் சன்னதி 7 வாயில்கள் கொண்டது. இவை
அனைத்தும் வெள்ளித்தகட்டால் வேயப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கான
குத்துவிளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்நிதிக்குள் எந்த மதத்தினரும் செல்லலாம்.
இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி கடைசி மூன்று வாசல்களை கடக்க மட்டும் பெண்களுக்கு
அனுமதியில்லை. நாகூர் ஆண்டவர், அவரது மகன் முகம்மது யூசுஃப், மருமகள் செய்யிதா சுல்தான்
பீவி அம்மாள் ஆகியோரின் சமாதிகள் உள்ளே அமைந்துள்ளது. நாகூர் ஆண்டவர் இடுப்பில்
கட்டியிருந்த இரும்புச்சங்கிலி, குமிழ்கள் இல்லாத காலணி, அதிசயம் நிகழ்த்திய கொம்புத்
தேங்காய ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அரபி மாதம் ஜமாத்துலாகிறு பிறை 1&ல் தர்காவில் கொடியேற்றத் திருவிழா நடக்கும் பிறை 10ம்
நாள் இரவு நாகையிலிருந்து அதி விமரிசையாக சந்தனக்கூடு புறப்பட்டு வந்து ஆண்டவர்கள்
சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பிறை 11&ல் பீர் ஏகுதல் நடைபெற்று 14&ம்
இரவு இறுதிக்கட்டம் அடையும். இந்த திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் கலந்து
கொள்கின்றனர். நாகூர் சமாதியில் போர்த்தப்படும் சால்வை, மலர்ப் போர்வை பழனியைச்
சேர்ந்த ஒரு இந்துக்குடும்பத்தாரால் இன்றளவும் கொண்டுவரப்படுகிறது. நாகூர் தர்காவை
நாயகத்தின் வாரிசுகளான சுமார் 640 குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர். தர்காவுக்கு வரும்
காணிக்கைகளே இவர்களுக்கு வருமானமாகும்.
அனைத்து மதத்தினருக்கும் அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார் நாகூர் ஆண்டவர்.