ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலை மற்றும் கொலை நடைபெறத்தான் செய்கிறது.இவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்களின் ஆத்மாக்களுக்கு மறுபிறவி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்;அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை இது பீடிக்கும்.பாட்டன் காலத்து சொத்தை மட்டுமா நாம் அனுபவிக்கிறோம்? இல்லை பாட்டன் காலத்து பாவங்களையும் சேர்த்துத் தான் அனுபவிக்கிறோம்.சுலபமாக விளக்கம் இதோ:
எனது அப்பாவின் தாத்தாவின் சகோதரி அவரதுபிறந்த ஜாதகப்படி 71 வயது வரை வாழ வேண்டியவர் என்று வைத்துக்கொள்வோம்;அவர் 17 ஆம் வயதில் குடும்ப கவுரவத்துக்காக கொலை செய்யப்பட்டாலோ/ குடும்ப விரோதத்தினால் வேற்று குடும்பத்தாரால் கொல்லப்பட்டாலோ,இறந்த அந்த தாத்தாவின் சகோதரி எங்கு கொல்லப்பட்டாரோ,அந்த இடத்தில் 71 ஆம் வயது வரை ஆவியாக இருப்பார்;முறைப்படி அவரது ஆயுள் முடிந்ததும்,எம லோகத்திற்கு ஓராண்டு வரை பயணிப்பார்;அங்கு அவர் 17 வயது முதல் 71 வயது வரையிலும் எந்த ஒரு நன்மை தீமைகளையும் அனுபவிக்க முடியாமல் இருந்தது கண்டு,அவர் விசாரணைக்கைதியாக ஒதுக்கி வைக்கப்படுவார்;இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு பரம்பரையில் ஐந்துபேர்களைத் தாண்டினால்,நான்காம்/ஐந்தாம் தலைமுறையில் இருந்து பித்ருதோஷம் வேலை செய்யும்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு ,லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ஒன்றில் இருந்தால் அப்பாவழி பித்ரு தோஷம் என்றும்,கேது இந்த இடங்களில் இருந்தால் அம்மாவழி பித்ரு தோஷம் என்றும் அறியலாம்.இந்த ஜாதகருக்கு அப்பா வழி பித்ரு தோஷம் இருக்கிறது எனில்,இவரது அப்பாவின் உடன் பிறந்த சகோதரசகோதரிகளின் குழந்தைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதே பித்ரு தோஷம் கண்டிப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.
இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது