நாம் பிறக்கிறோம்....
எங்கிருந்து வந்தோம் தெரியாது?
எங்கே போக போகபோகிறோம் அதுவும் தெரியாது. இடை பட்ட காலத்தில் இது ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் நடிகர்கள்.
யார் பெத்த பொண்ணுக்கோ கணவராக, யாரோ ஒருவருக்கு மனைவியாக, பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பனாக, பெற்ற தாய் தந்தையருக்கு மகனாக. மாமனாக, மச்சானாக, சகோதரனாக, சகோதரியாக இப்படி பல வேடங்களை போடுகிறோம்.
நாடகம் முடிந்ததும் போகிறோம். இந்த ரகசியம் அறிந்தது பிரம்மா என்கிறார்கள். அந்த ரகசியத்தை முன் பிறவி என்கிறோம்.
கன்னி தீவு கதை மாதிரி கண்டுபிடிக்க முடியாத ரகசியம் ... முன் பிறவி ரகசியம் என்பதே. அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, அக்கினி நீருற்றை கடந்தது சென்றால்..கிளியின் உடம்புக்குள் இருக்கும் மந்த்திரவாதி உயிர் மாதிரி, பல்வேறு மர்மங்கள் நிறைந்தது முன் பிறவி ரகசியம்.
இதை அகத்தியர் தீர்த்து வைகைக்காமல் இல்லை. தன் காலத்திலேயே ஓலை சுவடிகளில் இதை பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார்.
இப்போது பிறவி எடுத்திருக்கும் மனிதர்களில் யாருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே ஓலைகளில் எழுத பட்டு இருக்கிறது.
இது உண்மையே.
ஆனால் இதை ஒரு தொழிலாக கொண்டு பலர் செய்யும் தகிடு தித்தங்களை பற்றியும், இதை வைத்தே ஏமாற்றி பிழைப்பவர்களை பற்றியும் தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன்.
பொதுவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் கர்ம வினை கிரகம் என்கிற ராகு கேது முக்கியமானவர்கள். இதற்கு அடுத்த படியாக குரு முக்கியமானவர். முதலில் ராகு கேது.
இருப்பது ஒன்பது கிரகங்கள். இதில் ராகு கேது தவிர்த்து, ஏனைய ஏழு கிரகங்களும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர கிரகங்கள் என்று சொல்லபடுகிறது.
இவர்கள் 1 . 7 இல் இருந்தால் நாக தோஷம் என்றும், 5 . 9 இல் இருந்தால் பிரம்மகத்தி தோஷம் என்றும் சொல்ல படுகிறது.
அதாவது முன் பிறவியில் பாம்பு புற்றை உடைத்து, பாம்புகளை அடித்து கொன்ற பாவம் இந்த பிறவியில் நாக தோஷமாக வருகிறது என்பார்கள். இந்த நாக தோஷம் என்பது ஜோடி பாம்புகளை கொன்றவர்களுக்கும், ஜோடி பாம்புகளில் ஒன்றை கொன்றவர்களுக்கும் வருகிறது.
அதனால் தான் திருமண வாழ்க்கை அமைய தடை, மீறி அமையும் வாழ்க்கையில் குழப்பம், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள், பிரிவினை, விவகாரத்துகளையும் தந்து விடுகிறது.
அதே சமயம் 5 . 9 இல் இருக்கும் பொது பிரம்மகத்தி தோஷம் என்று சொல்ல பட்டாலும், புத்திர சோகத்தை தருகிறது. காரணம் குட்டி பாம்புகளை கொன்ற குற்றம்.
இப்பிறவில் குழந்தை பிறப்பில் தாமதம், பிறந்த பிள்ளைகளால் கவலை, பெற்றோரை மதிக்காத துர்குணம் கொண்ட பிள்ளைகள், பிறந்த பிள்ளைகள் அகால மரணம் என்று புத்திர சோகத்தில் ஆழ்த்துகிறது.
சரி.... அடுத்த தகவலுக்கு வருவோம்.
என்னதான் ரேகை கொண்டு சொன்னாலும், ஜாதகம் கொண்டுதான் பலன் சொல்லபடுகிறது. ஜோதிட சாஸ்த்திரத்தில் குருவும், சூரியனும் சிவனை குறிக்கும் கிரகங்கள்.
இந்த சூரியனோடும், குருவோடும் சனியோ, ராகுவோ, கேதுவோ பிறப்பு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால், அது ஒரு வகையான பிரம்மகத்தி தோஷம்.
அதாவது... முன் பிறவியில் சிவன் சொத்தை அழித்தவர்கள், சிவனடியார்களை வதைத்தவர்கள், சிவ நிந்தனை செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பிறவியில் பல துன்பங்களை சந்திக்க வேண்டி வருமாம்.
மேலும் இந்த பிறவி தொடர்பாக ஒரு தகவலும் உண்டு.
உதாரணமாக பரணி நட்சத்திரத்தில் ஒருவர் பிறப்பதாக வைத்து கொள்வோம். அவரின் ஆரம்ப திசை சுக்கிர திசையாக அமையும். சுக்கிர திசை என்பது ௨௦ வருடம் கொண்டது.
ஆனால் அவர் பிறக்கும் போது இருப்பு திசையாக 5 வருடம் 6 வருடம் அல்லது 10 வருடம் என்று குறைந்த அளவே தசையாக வருகிறது.
காரணம் என்ன?
முன் பிறவியில் பெற்ற ஜென்மாவில் அவரின் இறுதி காலத்தில் சுக்கிர திசை நடப்பில் இருந்த போது தான் இறந்து போனார். சுக்கிர திசையின் மொத்த வருடமான 20 வருடத்தில், இறக்கும் போது இருந்த மீதம் என்னவோ, அதையே இப்பிறவில் மீதமுள்ள திசையாக கொண்டு பிறந்த்திருப்பார் என்பது ஜோதிட ரகசியம்.
நாடி ஜோதிட பிரகாரம் குரு தான் அந்த ஜாதகரை குறிக்கும் கிரகம். இப்போது அவர் ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதற்கு முதல் வீட்டில் சென்ற பிறவியில் குரு இருந்திருப்பார். மற்ற கிரகங்கள் மாறாது.
ஒருவர் சென்ற பிறவியில் எந்த குலத்தில் பிறந்தார் என்பதை, இப்போதைய சந்திரன் இருக்கும் இடத்திற்கு 5 ம் இடமே சொல்லும்.
ஒருவர் மீன ராசியில் பிறந்தால், அவர் ராசி படி 5 ம் இடமாக கடகம் வருகிறது, அந்த வீட்டற்கு உரிய கிரகம் சந்திரன் வருகிறார்.
சந்திரன் கடல் கடந்த வாணிபத்தை குறிப்பவர். அதாவது வியாபாரம் செய்யும் குடும்பம். ஆக ஜாதகர் வைசிய குலத்தில் பிறந்திருப்பார்.
அந்த வகையில் கீழ்காணும் வகையில் அட்டவணை அமையும். இது நாடி ஜோதிட விதி.
நீங்கள் பிறந்த ராசிக்கு 5 ம் இடமாக .......
மேஷம், தனுசு - சத்திரிய குலம். அதாவது அரச வம்சம், ஜமீன் பரம்பரை, அரச நிர்வாக அதிகாரிகள் போன்ற குலத்தில் பிறந்தவர்.
ரிசபம், கடகம், கும்பம், மீனம், வைசிய குலம். அதாவது... வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.
மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் பிராமண குலம். அதாவது கோவில் பூஜை மற்றும் புரோகிதம் செய்யும் குலத்தில் பிறந்தவர்.
கன்னி துலாம் சூத்திர குலம்.
இங்கே சொல்லப்படும் சூத்திர குலம் என்பது, உழைப்பாளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும். அவரின் தாய் தந்தையர் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதும் புலனாகிறது.