உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Thursday, 24 April 2014

கோயில்களில் செய்யக்கூடாதவை

 
காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்கள்
கோயில்களின் கீழே அதுவும் இந்த கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும்  இது அந்த சக்தியை வீண் செய்யாமல் சக்தியை  பன்மடங்காக்கி வெளிக் கொண்டு வரும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு கிடைக்கச் செய்யும். கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்தியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்தி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித நேர்விசை மின்சார சக்தி சொர்ணாபிஷேகம் இந்த சக்தியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும்.
 
1.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

2.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

3.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

4.பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.

5.பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது.

6.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.

7.மூர்த்திகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.

8.சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

9.வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.

10.பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது

வீடுகளில் செய்யக்கூடாதவை

1.இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக் கூடாது.

2.அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.

3.சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது

4.தன்னுடைய ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது

5.ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.

6.தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.

7.இடது கையினால் ஜலம் அருந்தக்கூடாது

Saturday, 19 April 2014

அர்ச்சனை செய்யக் கூடாதது***



விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.
விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.
 (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் அர்ச்சனைசெய்யலாம்.)
பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.

தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.பரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.

Thursday, 17 April 2014

மோசடி ஆஸ்ரமங்களும் பலரை வாழ வைக்கும் ஆஸ்ரமங்களும்

 
இந்த பதிவு நம்மீல் பலர் ஆன்மீகம் என்ற பெயரில் பொருளை  இழந்து  மன நிம்மதி இழந்து மோசடி ஆஸ்ரம ஏமாற்று ஆன்மீகவாதிகளிடம்  சிக்கி சீரழியும்  அப்பாவி  நல்ல ஏமாரும்  இதயங்கலுக்கு  
 
பலரை வாழ வைக்கும் ஆஸ்ரமங்கள்;
 
நான் என் அனுபவத்தில் பல ஆஸ்ரமங்களை பார்த்து இருக்கிறேன்  அந்த ஆஸ்ரமத்தை நடத்தும் நல்ல இதயங்கள் தங்கள் வாழ்க்கையை முதியோர்,  ஊனமுற்றோர்,அனாதை, அனாதை குழந்தைகள்.என்று தங்கள்
வாழ்நாளை அற்பணித்து நேர்மையான முறையில் (நேர்மை" எங்கு, எவரிடம் காணப்படுகின்றதோ அவருக்கு மாந்தரிடையே என்றும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.) தன் சுய கவுரவம் பார்காமல் தனக்கு ஏற்படும் அவமானங்களையும் பொருட்படுத்தாமல் பிறர் நலமே தன் நலம் என்று வாழ்பவர்கள் மனிதரில் மாணிக்கம். பிறர்   செய்யும் பொருள் உதவி மற்றும்  அன்னதானம்  போன்றவற்றை  இயலாதவர்களுக்கு எந்த சுயநலமும்  இன்றி  கிடைக்க செய்கின்றனர் (இவர்கள்  நடமாடும் தெய்வங்கள் )  
 
 
மோசடி  ஆஸ்ரமங்கள்; ( ஏமாற்றி பிச்சை எடுப்பவர்கள்) 
 
தற்பொழுது திரும்பும் இடங்களில்  எல்லாம் ஆஸ்ரமங்கள் நேற்று தாய்யிடம்
பால் குடி  மறந்தவன்  எல்லாம் இன்று   ஸ்வாமிகள்,  வசிய மை, பாதாள மை, பெண்கள் பின்னால்.வரும் மை, முன்னால் போகும் மை,  தான். என்ன மனதில்
நினைக்கிறானோ அப்படியே இனய தளங்களில் எழுதுவது, பிரச்சனையில் 
உள்ளவர்கள் (எதை தின்றால்  பித்தம் தீரும் என்று இருப்பவர்கள்) இவர்களிடம்  
 தன்  குறைகளை  கூறினால் ஒரு   அரை மணி  நேரத்தில் எனக்கு போன் செய்யுங்கள்
தெய்வங்களிடம்  உத்தரவு  கேட்டு  சொல்கிறேன். சித்தரிடம்  கேட்டு  சொல்கிறேன்
என்று  புருடா விடுவது (இந்த பிரபஞ்சத்தில் தெய்வங்களுக்கும் , சித்தர்களுக்கும் 
எப்பொழுது  பால் குடி  மறந்தவன் நம்மை அழைப்பான் என்று காத்து கிடப்பதாக ஏமாற்றுக்காரர்களுக்கு
 நினைப்பு )  பிறகு தங்களுக்கு தோஸம் உள்ளது அதற்க்கு சில யாகங்கள்
 எங்கள்    ஆஸ்ரமத்தில்  செய்வேண்டும்  அதற்க்கு  இவ்வளவு  செலவாகும்   
 இந்த பணம்  ஆஸ்ரம நிதிக்கு   என்று   புருடா  விடுவது 
(தன்னுடைய  மனைவிக்கும்  பிள்ளைகளுக்கும் சொகுசாக இருப்பதற்க்கு  பிச்சை 
எடுப்பது )    இவர்கள்  ஒரு தர்மகாரியங்களும்  செய்யமாட்டார்கள்  இவர்களுக்கு
தாயத்து  பற்றியும் தெரியாது  எந்திர  தகடுகள் பற்றியும் தெரியாது   கடையில் 
விற்க்கும்  மந்திர தந்திர புஸ்தகங்களை  வாங்கி  வைத்து  கொண்டு கதை
விடுவது மொத்ததில் இவர்கள் நூதன பிச்சைகாரர்கள் . இனய  தளங்களில்
வெளியாகும்  மந்திர தந்திரங்கள்  அனைத்தும் உண்மை அல்ல  உண்மை தெரிந்தவர்கள் புனிதமான மந்திரங்களை  பொதிவில் பகிரமாட்டர்கள்
அஸ்ரமங்களை  நம்பி ஏமாறுவதை விட்டு விட்டு கோவில்களுக்கு
செல்லுங்கள்   உங்கள் கைகலால் அன்னதானம் செய்யுங்கள் மன நிம்மதி  
கிடைக்கும்  இது சத்தியமான  உண்மை.   பொய் கவர்ச்சியாக தான் இருக்கும்
 உண்மை மறைந்தே   இருக்கும்

Sunday, 13 April 2014

பித்ரு தோஷம், பித்ரு சாபம்

நம்மில் பலரது வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது.ஆனால்,ஜோதிடர்கள் பலரிடம் நமது ஜாதகத்தைக் காட்டியிருப்போம்;எல்லோருமே சொல்லி வைத்தாற்போல,உங்களுக்கு அந்த யோகம் இருக்குது;நீங்கள் கோடீஸ்வரன் தான் என்று புகழ்ந்து தள்ளியிருப்பர்.இருப்பினும் நமது கஷ்டங்கள்,சிரமங்கள்,வேதனைகள் நமக்கு மட்டும் தானே தெரியும்?
 
நம்மில் பலர் யாருக்கும் தீமை செய்யாதவராகவே இருக்கிறோம்.நாம் உண்டு;நமது வேலை உண்டு என்றுதான் இருக்கிறோம்.காதலில் கூட ஒரே ஒருத்திகூட வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறோம்.நிம்மதியும்,செல்வ வளமும் நமது லட்சியங்களாக இருப்பினும் ,பல கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக்கியிருந்தாலும்,பல அன்னதானங்களை செய்திருந்தாலும்,ஏதாவது ஒரு மந்திரத்தை தினமும் ஜபித்துக்கொண்டிருந்தாலும் வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே சென்று கொண்டிருக்கிறது.இதற்கான காரணத்தை ஒரு சில திறமையான ஜோதிடர்கள் மட்டுமே கணித்துச் சொல்ல முடியும்.
 
ஒருவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்,அவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்றே அர்த்தம்.இராகு என்பது அப்பாவழி முன்னோர்களைப் பற்றியும்,கேது என்பது அம்மாவழி முன்னோர்களையும் விவரிக்கும் கிரகங்கள் ஆகும்.
 
ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராகு ஐந்தாமிடத்தில் இருந்தால்,அவர் தன்னலம் கருதாதவராக இருப்பார்;ஆனால்,இவரது உதவியால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் இவரை சிறிது கூட சீண்டமாட்டார்கள்;அதே ஐந்தாமிடத்தில் கேது இருந்தால்,இவர்கள் தனது குடும்பத்தாரினாலேயே புறக்கணிக்கப்படுபவராக இருப்பார்;இவர் ஊருக்கு உபகாரியாக இருப்பார்;வீட்டில் இவருக்கென்று சிறிதும் மரியாதை இராது.நாம் ஏன் எல்லோருக்கும் நல்லது செய்தும் கூட நமக்கு எவரும் நல்லது ஒன்றுகூட செய்வதில்லை என்ற ஏக்கம் எப்போதும் இவர்களை வாட்டும்.
 
இதுவே லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் ராகு இருந்தால்,இவருக்கு அப்பாவழி முன்னோர்களின் பிள்ளைகள் விரோதிகளாக இருப்பர்;அல்லது அப்பாவழி பூர்வீக சொத்துக்கள் அழிந்து போயிருக்கும்;அல்லது பூர்வீக சொத்து தொடர்பாக வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.எவருக்கும் உரிய பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது;கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமான சொத்துக்கள் இருந்தாலும் இதே சூழ்நிலைதான்!
லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்,அந்த ஜாதகருக்கு அம்மா மற்றும் அப்பாவழி முன்னோர்களின் பித்ரு சாபம் இருப்பதாக அர்த்தம்.

பித்ரு சாபம் அல்லது ப்த்ரு தோஷம் எப்படி உண்டாகிறது

ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலை மற்றும் கொலை நடைபெறத்தான் செய்கிறது.இவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்களின் ஆத்மாக்களுக்கு மறுபிறவி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்;அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை இது பீடிக்கும்.பாட்டன் காலத்து சொத்தை மட்டுமா நாம் அனுபவிக்கிறோம்? இல்லை பாட்டன் காலத்து பாவங்களையும் சேர்த்துத் தான் அனுபவிக்கிறோம்.சுலபமாக விளக்கம் இதோ:
 
எனது அப்பாவின் தாத்தாவின் சகோதரி அவரதுபிறந்த ஜாதகப்படி 71 வயது வரை வாழ வேண்டியவர் என்று வைத்துக்கொள்வோம்;அவர் 17 ஆம் வயதில் குடும்ப கவுரவத்துக்காக கொலை செய்யப்பட்டாலோ/ குடும்ப விரோதத்தினால் வேற்று குடும்பத்தாரால் கொல்லப்பட்டாலோ,இறந்த அந்த தாத்தாவின் சகோதரி எங்கு கொல்லப்பட்டாரோ,அந்த இடத்தில் 71 ஆம் வயது வரை ஆவியாக இருப்பார்;முறைப்படி அவரது ஆயுள் முடிந்ததும்,எம லோகத்திற்கு ஓராண்டு வரை பயணிப்பார்;அங்கு அவர் 17 வயது முதல் 71 வயது வரையிலும் எந்த ஒரு நன்மை தீமைகளையும் அனுபவிக்க முடியாமல் இருந்தது கண்டு,அவர் விசாரணைக்கைதியாக ஒதுக்கி வைக்கப்படுவார்;இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு பரம்பரையில் ஐந்துபேர்களைத் தாண்டினால்,நான்காம்/ஐந்தாம் தலைமுறையில் இருந்து பித்ருதோஷம் வேலை செய்யும்.

 
ஒருவரின் ஜாதகத்தில் ராகு ,லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ஒன்றில் இருந்தால் அப்பாவழி பித்ரு தோஷம் என்றும்,கேது இந்த இடங்களில் இருந்தால் அம்மாவழி பித்ரு தோஷம் என்றும் அறியலாம்.இந்த ஜாதகருக்கு அப்பா வழி பித்ரு தோஷம் இருக்கிறது எனில்,இவரது அப்பாவின் உடன் பிறந்த சகோதரசகோதரிகளின் குழந்தைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதே பித்ரு தோஷம் கண்டிப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.
இந்த பித்ரு தோஷம் நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும் நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது
 

Friday, 11 April 2014

சோடேச பூஜை செய்யும் முறை


எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக,வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும்,கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது,வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.(எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

                   சோடேச பூஜை செய்யும் முறை
 
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களைஅதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன.சந்திரன் ஸ்தூல உடலையும்,சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள்,துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள்,சேட்டுகள்,மார்வாடிகள்  என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்.இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம்,மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார்.இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப்போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்

முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும்.அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.உதாரணமாக,அமாவாசை காலை மணி 10.20 வரை.பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப்பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும்(நாம் வாழும் மில்கி வே,அருகில் உள்ள அண்ட்ராமீடா),சகல உயிரினங்களும்(பாக்டீரியா,புல்,பூண்டு,மரம்,யானை,திமிங்கலம்,சிறுத்தை,கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன்,கடல்பசு,கடல் பாசிகள்,ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி,ஆந்தை,புறா,கிளி,காட்டெருமை,காண்டாமிருகம்,நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு,சுறா மீன் ),ஒவ்வொரு மனிதனும்  சூட்சுமமாக அதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும்.மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப்பொறுத்தது.மனவலிமையைப் பொறுத்தது.திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ,கோயிலிலோ இருக்க வேண்டும்.தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது.வயிறு காலியாக இருக்க வேண்டும்.சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும்.(அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்).நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக்கூடாது.மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம்,பணக்காரனாவது,நோய் தீர,கடன் தீர,எதிர்ப்புகள் விலக,நிலத்தகராறுதீர,பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர,வழக்கு வெற்றி எதுவானாலும்,ஏதாவது ஒன்று மட்டும்)நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.

தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது.இந்த தியானத்தை ஜாதி,மதம்,இனம்,மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் கஜலட்சுமி

அழகு மிகுந்த தேவியாகவும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் குணவதியாகவும், பக்தர்களின் மனக்குறை நீக்கும் அதிர்ஷ்ட தேவதையாகவும் விளங்குபவள் மகாலட்சுமி. சைவம், வைணவம் என இரு பிரிவு பக்தர்களாலும் மகாலட்சுமி கொண்டாடப்படுகிறாள்.
 
பாற்கடலில் திருமகள் தோன்றியபோது, எட்டு திசை யானைகளும் தம் மனைவியரோடு வந்து மகாலட்சுமியை மங்கள நீராடி வழிபட்டன. அதனாலே அவள் கஜலட்சுமி என போற்றப்படுகிறாள். வேதமந்திரமான ஸ்ரீ ஸூக்தம் அவள் யானைகளின் பிளிறல்களை கேட்டு மகிழ்பவள் என்று போற்றுகிறது.

நமது ஜாதகரீதியாக எத்தனை கொடிய ரித்திர யோகமிருந்தாலும்,சிலரின் சாபத்தாலோ,பலரின் வயிற்றெரிச்சலாலோ அல்லது கர்மவினை,செய்வினை மந்திரப்பிரயோகத்தாலோ எது எப்படியிருப்பினும் திட மனதுடன்,தளராத மன உறுதியுடன்,விடா முயற்சியால் இந்த கஜலட்சுமிபூஜை செய்தால் நமது தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது அனுபவ உண்மை.

வளர்பிறை வெள்ளிக்கிழமையும்,திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில் இந்த பூஜையை ஆரம்பித்து தொடர்ச்சியாக 24 வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும்.திருஓணம் வரும் வெள்ளியன்று நீராடி தூய உடை உடுத்தி,குலதெய்வத்தை மானசீகமாக வேண்டிட வேண்டும்.பிறகு விநாயகரை மனதார வேண்டி 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இந்த பூஜை நடைபெற உதவுமாறு வேண்டி வழிபட்டு, தியானிக்கவேண்டும்.

அதன்பிறகு இஷ்ட தெய்வத்தையும் பூஜித்து வழிபட்டு காலையில் சுக்கிர ஓரையில் இந்த தனம் தரும் கஜலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும்.

நுனி வாழையிலையில் நெல்பரப்பி,அதன் மீது மற்றொரு இலை வைத்து பச்சரிசி பரப்பி அதன்மீது புதுமண்கலசம் அல்லது புதுகலசச் சொம்பு வைத்து அதில் நூல் சுற்றி அதன் உள்ளே அஷ்டகந்தம் என்னும் எட்டுவிதமான வாசனைப் பொருட்கள்,
குண்டு மஞ்சள்,வெட்டிவேர்,பன்னீர்,வெள்ளிக்காசு முதலியனவற்றை விட்டு அதன் வாயில் மாவிலை வைத்து புதிய நல்ல தேங்காயை வைத்து,அத்துடன் கலசத்தில் பொட்டு வைத்து,பூவைத்து,சிகப்புப் பட்டு ஆடை சார்த்திவைக்க வேண்டும்.

கலசத்தின் முன்பு நெய்யால் தீபம் ஏற்றிட வேண்டும்.இலையில் தாம்பூலம்,தேங்காய்,பழம்,லட்டு,பாலில் செய்த இனிப்பு வகை ஒன்று, வெண் மொச்சை,சுண்டல் முதலியவற்றைப் படைக்க வேண்டும்.அந்த கலசத்தில் சவுபாக்கிய லட்சுமி எழுந்தருளும்படி வேண்டிட வேண்டும்.


அதன்பிறகு சோடேசபூஜை என்னும் பதினாறுவகை உபச்சாரங்கள் செய்யவும்.(புத்தகக் கடைகளில் சோடேச பூஜை செய்யும் முறை என்ற புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளவும்)சவுபாக்கியமகாலட்சுமியிடம் நமது தரித்திரம்,பணக்கஷ்டம்,பணப் பற்றாக்குறை நீங்கிட வேண்டவேண்டும்.

செல்வத்தை வாரி வழங்கும் ஸ்ரீகஜலட்சுமியை மனதார வேண்டியவாறு
ஓம் ஸ்ரீம் ச் ரீயை நம தனம் ஆகர்ஷய ஆகர்ஷய

என்ற மூல மந்திரத்தை 1008 முறை மெதுவாகவும்,நிதானமாகவும் ஜபிக்க வேண்டும்.
அதன்பிறகு,மல்லிகை இதழ்களால் அல்லது தாமரை இதழ்களால் ஓம்
ஸ்ரீமகாலக்ஷ்மி சவுபாக்கிய தாரண்யை நம
 என்று 108 முறை அர்ச்சிக்க வேண்டும்.அர்ச்சித்தப்பின்பு,தூபதீப நைவேத்தியம் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் இந்த கலசத்தைக் கலைக்காமல் அப்படியே வைத்திருந்து அடுத்தடுத்த வாரங்களில் கலசத்தில் சிறிது நீரும் வாசனைத் திரவியமும் சேர்த்து பூஜை செய்யவேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் வீதம் 24 வெள்ளிக்கிழமைகள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது காலை 6 முதல் 7 மணிக்குள் செய்துவரவேண்டும்.

இந்த பூஜையை தொடர்ந்து செய்யவிடாமல் நமது கர்ம வினைகள் தடுக்கலாம்;அதையும் மீறி பக்தி,வைராக்கியத்தால் தொடர்ந்து செய்து பெரும் செல்வ வளத்தை அடைவீர்களாக!

மந்திரங்கள் ஏழு கோடி


சைவ சமய நூல்களைச் சான்றோர் தோத்திரம், சாத்திரம் என இருவகையாகப் பகுத்துள்ளனர். தோத்திரம் அன்பின் அடிப்படையில் எழுவது. சாத்திரம் அறிவின் அடிப்படையில் எழுவது.
                                             
 
                                                         தோத்திரம்
 
இறைவனது கருணைப் பெருக்கால் நடைபெறும் ஐந்தொழிற் சிறப்புகளையெல்லாம் அன்பினால் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகப் புகழ்ந்து பாடுதல் தோத்திரம் எனப்படும்.
 
                                                   சாத்திரம்
 
சாத்திரம் என்பதும் அன்புடையார் அறிவு மிகுதிப்பாட்டால் இறைவன் பெருமைகளையும் உயிர்களின் சிறுமைகளையும் உலக இயல்புகளையும் திருவருள் வலிமையால் ஒக்க ஆய்ந்து மக்கள் கடைத்தேற அருளிச் செய்ததாகும்.
 
இவ்விரு வகையிலும் பல நூல்கள் இருப்பினும் சைவ உலகில் சமயாச்சாரியர் உள்ளிட்ட 27 ஆசிரியர்கள் அருளிய 12 திருமுறைகளே சிறப்பாகத் தோத்திரங்கள் எனப் போற்றப் பெறுவன.
 
இதேபோல் சந்தானாச்சாரியர் உள்ளிட்ட அறுவர் அருளிச் செய்த பதினான்கு நூல்களே சாத்திரங்கள்.
 
இந்த அடிப்படையில் பார்த்தால், திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் தோத்திரத்தை விட சாத்திரக்கூறுகளே அதிகம் உள்ளன. இது பத்தாம் திருமுறையாகப் போற்றப்பெறுவது.
 
மந்திரங்கள் எழுகோடி  என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.
 
                                 எழுகோடி மந்திரங்கள்
 
                                  நமஹா      -ஐஸ்வர்யம் அளிப்பது.
 
                                   சுவாஹா   -தேவதைகளைத் திருப்தி செய்வது.
 
                                   சுவதா         -தைரியம், வசீகரம் கொடுப்பது.
 
                                   பட்                 -விக்கினங்களைத் துரத்துவது.
 
                                   உம்பட்         -காமாதிகளைப் போக்குவது.
 
                                   வௌஷட்  -தேவதைகளை இழுப்பது.
 
                                    வஷட்          -தேவதைகளை வசம் செய்வது.
 
திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆகையினால் ஏழு   முடிவுகளை  வைத்தே மூவர் தேவாரங்களை 7 திருமுறைகளாக வகுத்தனர்.

Wednesday, 9 April 2014

பூஜையின் துவக்கத்திலும் பூஜையின் போதும் கூடாதவை


 விநாயகரை துளசியால் அர்ச்சனை  செய்யக் கூடாது.

பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.

தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.

வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.
செம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.


மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
துளசி, முகிழ்(மகிழம்), செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.

பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.

Tuesday, 8 April 2014

லிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள்

 
                                                ஆத்ம லிங்கம்

தூய மனத்துடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்மலிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.

1. மண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்
2. நீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்
3. நெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்
4. வாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்
5. ஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்


                                 இஷ்ட லிங்கம்

மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.

1. இந்திரன் ..... பத்மராக லிங்கம்
2. குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
3. யமன் ..... கோமேதக லிங்கம்
4. வருணன் ..... நீல லிங்கம்
5. விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
8. வாயு ..... பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
10. மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ..... முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
14. மயன் ..... சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
18. பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ..... விபூதி லிங்கம்
21. சாயா தேவி ..... மாவு லிங்கம்
22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்


                                 ஷணிக லிங்கம்


நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

1. புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்

 

பஞ்ச லிங்க பாதாள லிங்ககேஸ்வரர்

 
மும்பைக்கு புறநகராக விளங்கும் அம்பர்நாத் என்ற இடத்தில் பழங்கால சிவன் கோவில் ஒன்று உள்ளது. தலத்தின் பெயரும் அம்பர்நாத். அம்பர் என்றால் ஆகாயவெளி நாதர் என்றால் இறைவன்.

இங்கே மூலஸ்தானத்தில் சிவலிங்கமோ, நடராசர் சிலையோ  இல்லை கோவிலைச் சுற்றிலும் மாமரங்கள், இங்கே நான்கு வாயில்கள் மேற்கு வாயிலில் மட்டும் நந்தி தேவர் உள்ளார்.

கருவறை என்று சொல்லப்படும் இடத்தில் சிறிய பள்ளம் காணப்படுகிறது. இந்த பள்ளத்தை தான் சிவபெருமான் என்று கூறுகின்றனர்

இங்கேதான் பாதாள லிங்ககேஸ்வராக தன்னை வெளிகாட்டி கொள்ளாமால் அமர்ந்து அருள் பாலிக்கிறார்

இங்கே   இந்த பாதாள லிங்ககேஸ்வரரை மனமுருக வேண்டி ஒன்பது முறை வலம் வந்தால் நம்மை சூழ்ந்து உள்ள கர்மங்கள் தீரும் இந்த  ஸ்தலத்தில்  பாதாள லிங்ககேஸ்வரரை மையமகா கொண்டு சூட்ச்சம முறையில்    பஞ்ச லிங்கங்கள்  பாதாளத்தில் பிரதிஷ்டை செய்யபட்டு உள்ளதாக தல வரலாறு இந்த பாதாள லிங்ககேஸ்வரரை தூய மனதுடன்  மனமுருக வேண்ட சகல காரியங்களும்  வெற்றி. செல்வ சூபிட்ச்சத்தை தரும்

மகாராஷ்டிராவில் கொங்கன் என்ற பகுதியை ஆட்சி செய்த சில்காரா அரச பரம்பரையில் வந்த சித்தராஜன் கடம்பவன அரசர்களைப் போர் செய்து வெற்றி பெற்றான். அந்த வெற்றிக்குக் காணிக்கையாக இந்த ஆலயத்தை கி.பி. 1060 -ல் அமைத்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.

மும்பை செல்வோர் வணங்கி வர வேண்டிய அதிசய கல்வெட்டுக் கோயில் இது.

அறுபத்து நான்கு ஆயகலைகள்

 
ஆயகலைகள் அறுபத்து நான்கு கலைகள் என  நம் பயின்ற காலத்தில் நமக்கு கூறியுள்ளனர். ஆனால் அந்த 64 கலைகள் எது என நம்மில் பலருக்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை பற்றி சிலருக்கு தெரிந்திருக்க கூடும். அவை என்னென்ன என பார்ப்போம்.

1.    எழுத்திலக்கணம்    * அக்கரவிலக்கணம்

2.    
எழுத்தாற்றல்              * லிகிதம்

3.   
கணிதவியல்                  * கணித சாத்திரம்

4.   
மறை நூல்                         *வேத சாத்திரம்

5.   
தொன்மம்                           *புராணம்

6.   
இலக்கணவியல்          *வியாகரணம்

7.   
நய நூல்                               * நீதி சாத்திரம்

8.   
கணியக் கலை                *சோதிட சாத்திரம்

9.   
அறத்துப் பால்                    *தரும சாத்திரம்

10.   
ஓகக் கலை                       *யோக சாத்திரம்

11.   
மந்திரக் கலை                  *மந்திர சாத்திரம்

12.   
நிமித்தகக் கலை             *சகுன சாத்திரம்

13.   
கம்மியக் கலை                  *சிற்ப சாத்திரம்

14.   
மருத்துவக் கலை              *வைத்திய சாத்திரம்

15.   
உறுப்பமைவு                          *உருவ சாத்திரம்


16.   மறவனப்பு             *இதிகாசம்

17.   
வனப்பு                       *காவ்யம்

18.   
அணி இயல்            *அலங்காரம்

19.   
இனிதுமொழிதல்    *மதுரபாஷணம்

20.   
நாடகக் கலை           *நாடக சாத்திரம்

21.   
ஆடற் கலை                * நிருத்திய சாத்திரம்

22.   
ஒலிநுட்ப அறிவு        *சப்த ப்ரம்மம்

23.   
யாழ் இயல்                     *வீணையிலக்கணம்

24.   
குழலிசை                         *வேணு கானம்

25.   
மத்தள நூல்                     *மிருதங்க சாத்திரம்
 
26.   
தாள இயல்                         *தாள சாத்திரம்

27.   
வில்லாற்றல்                    *அஸ்திர ப்ரயோகம்

28.   
பொன் நோட்டம்              *கனகப் பரிட்சை

29.   
தேர்ப் பயிற்சி                      *இரதப் பயிற்சி

30.   
யானையேற்றம்                *கஜப் பரிட்சை


31.   குதிரையேற்றம்     *அசுவப் பரிட்சை

32.   
மணி நோட்டம்        *இரத்தினப் பரிட்சை

33.   
மண்ணியல்               * பூமிப் பரிட்சை

34.   
போர்ப் பயிற்சி           * சங்கிராமவிலக்கணம்

35.   
கைகலப்பு                      * மல்யுத்தம்

36.   
கவர்ச்சியியல்             *ஆகரூடணம்

37.   
ஓட்டுகை                           *உச்சாடணம்

38.   
நட்பு பிரிக்கை                 *வித்வேடணம்

39.   
மயக்குக் கலை               *மோகன சாத்திரம்

40.   
புணருங் கலை                *காம சாத்திரம்

41.   
வசியக் கலை                    *வசீகரணம்

42.   
இதளியக் கலை              *இரசவாதம்

43.   
இன்னிசைப் பயிற்சி     *காந்தருவ வாதம்

44.   
பிறவுயிர்மொழி        * பைபீல வாதம்

45.   
மகிழுறுத்தம்               *கவுத்துக வாதம்


46.   நாடிப் பயிற்சி                        * தாதுவாதம்

47.   
கலுழம்                                       *காருடம்

48.   
இழப்பறிகை                            * நஷ்டம்

49.   
மறைத்ததையறிதல்          *முஷ்டி

50.   
வான்புகுதல்                             *ஆகாய ப்ரவேசம்

51.   
வான் செல்கை                         *ஆகாய கமனம்

52.   
கூடுவிட்டு கூடுபாய்தல்    *பரகாய ப்ரவேசம்

53.   
தன்னுறு கரத்தல்              *அதிருசியம்

54.   
மாயம்                                 *இந்திரஜாலம்

55.   
பெருமாயம்                    *மகேந்திரஜாலம்

56.   
நீர்க் கட்டு   ஜல            * ஸ்தம்பனம்

57.   
அழற் கட்டு                       * அக்னி ஸ்தம்பனம்

58.   
வளிக் கட்டு                        *வாயு ஸ்தம்பனம்

59.   
கண் கட்டு   த்ருஷ்டி      *ஸ்தம்பனம்

60.   
நாவுக் கட்டு                       *வாக்கு ஸ்தம்பனம்


61.   விந்துக் கட்டு           *சுக்ல ஸ்தம்பனம்

62.   
புதையற் கட்டு       *கனன ஸ்தம்பனம்

63.   
வாட் கட்டு              *கட்க ஸ்தம்பனம்

64.   
சூனியம்                *அவஸ்தை ப்ரயோகம்