அறியாமை, இயலாமை, பய உணர்வுகள், பேராசை ஆகியவைகள் மனிதன் கடவுளைத் தேடும் காரணங்களாக அமைந்துள்ளது. இதேக் காரணங்கள் மாந்திரீகத்தின் மீதும் நாட்டம் அடையச் செய்கிறது. ஆன்மிகம் என்பது ஒரு சரியானத் தேர்வு. மாந்திரீகம் கூட ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்று கூறலாம். இத்தகைய மாந்திரீகத்தில் மூன்று வகையான வேண்டுதல்கள் உள்ளன.
1) ஒருவர் சுகமடைய வேண்டும் என்று வேண்டுதல். இது
நன்மையைச் சார்ந்த வேண்டுதல் ஆகும்.
2)ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும் அல்லது வறுமை
அடைய வேண்டும் என்ற தீமையான காரியங்களைச் சார்ந்த
வேண்டுதல் ஒரு வகையாகும்.
3) தான் விரும்பியதை அடைய வேண்டும் போன்ற
காரியங்களை அடைய விரும்புவது மூன்றாவது
வகையாகும் சுயநலம் காரியங்களைச் சார்ந்த வேண்டுதல்.
பொதுவாக மாந்திரீகம் என்பது ஒருவரின் விருப்பு வெறுப்பைச் சார்ந்தே இருக்கும்.
ஆன்மீகமும். மாந்திரீகமும் ஒரு மதத்தின் இரு பகுதிகள் ஆகும். எல்லா மதங்களிலும் மாந்திரீக பகுதி உள்ளது. மாந்திரீகம் என்றதும் மூன்று தன்மையை அடிப்படையாக கொண்டது.
1) மனதிரத்தால் செய்யப்படும் மந்திரங்கள் சார்ந்தது,
2) தனது திறத்தால் செய்யப்படும் தாந்திரம் கைப்
பிறட்டு வேலை,
3) எந்திரம் சார்ந்த தாந்திரீக வேலைகள்.
வாமசார தெய்வங்களுக்கு படைக்கப்படும் பூஜை, பூஜைப் பொருள்கள் ஆகியவைகள் வேண்டுதல் செய்பவரின் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு வைதீகக் கருமமாகும். வாமசார தெய்வங்கள் சக்தி உள்ளவை என்று கருதப்படுகிறது.
காளி, சாமுண்டி, துர்க்கை, முருகன் போன்ற எல்லா தெய்வங்களும் தீமை செய்யும் அரக்கர்களையும், அசூரர்களையும், சூரர்களையும், அழித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தத்துவத்தை மேல் நோட்டமாக பார்க்கக்கூடாது. அசூரர், அரக்கர், சூரர், எல்லோரும் மனிதனுக்குள்ளே இருக்கும் தீய குணங்களாம். இவற்றை ஒழிக்க வேண்டும் என்பதைத்தான் தத்துவார்த்தமாக கூறுகின்றனர்.
புரிந்து கொள்ளவேண்டும். மாந்திரீகத்தை விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.
ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு நன்மை செய்யும் கிரகங்களை செயல் படாதபடி ஆக்கி தனக்கும் எதிராளிக்கும் படுபச்சி நேரத்தை கணக்கிட்டு அஸ்டஅங்க இருதயத்தில் உள்ள பிரணவ சக்தியை எழுப்பி பஞ்ச காயம், பஞ்ச கவ்வியம், சுத்தி செய்து தனது பிராணனை கருவிற்கு கொடுத்து உயிரோட்டம் பெற வைத்து மந்திரங்களை உச்சாடனம் செய்து காரியத்தைச் சாதிக்கும் வாமசாரிகளாகிய மந்திரவாதிகளை இந்த யுகத்தில் காண்பது அரிதாகும்.