உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Monday, 10 March 2014

தடை விளகும் வெட்டு மந்திரம்

தடை வெட்டு மந்திரம்  இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி.  மாந்திரீக வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும் சரி.  எந்த காரியமாக இருந்தாலும் வெற்றியடைய முயற்சிக்கும் முறையாகும்


முதலில் வினாயகர் வெட்டு   மந்திரம் பயன் படுத்தி தேங்காய் வெட்டி பின்னரே மற்றய வெட்டு  மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.

                       வினாயகர்  வெட்டு மந்திரம்.
ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை சங்ஙரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கள்களையும் சங்ஙரி சங்ஙரி சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு அறு சுவாகா.

மூல மந்திரம்


ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம.


                            தேங்காய் வெட்ட
 
தேங்காய் எடுத்து மஞ்சல் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து (அட்சரத்தில்) வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும் அப்போது தேங்காய் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விளகியது என்று அர்த்தம், ஒரு பக்கம் கவுந்தாலும் அல்லது இரண்டும் கவுந்தாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விளகும் வரை தேங்காய் வெட்டவும்.