இந்த உலகில் கேடை விதைப்பவர்கள், கேடையே கூலியாக பெறுகிறார்கள். நன்மை செய்பவர்கள், நன்மையையே பெறுகிறார்கள். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இந்த கணக்கு நேர் செய்யப்படுகிறது. இதில் அரசன் முதல் ஆண்டி வரை வேறுபாடு கிடையாது.
இத்தகைய மகான்களின் புண்ணியங்களால் வாழ்வின் துன்பதுயரங்களில் இருந்து விடுப்பட்ட சாதாரண மானுடர்கள் மறைந்துவிட்ட மகானுக்கு கோயில் கட்டுவர். மகான்கள் யாரும் தங்களது ஆன்ம விடுதலைக்குப்பிறகு தங்களது அழிந்துபோன உடல்தோற்றத்தை வரைந்து வைத்து வழிபடச் சொல்வதில்லை. விரும்புவதும் இல்லை. மகானின் ஆசியைப்பெற்ற மானுடர்தான் நன்றிக்கடனாகவும், ஆசி தொடர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பிலும் அவ்வாறு நடந்துகொள்கின்றனர். அத்தகையச் செயல் நற்செயல்தான், எனினும் மிகுந்த பரிசுத்த உணர்வோடு நடந்துகொள்ளா நிலையில் சங்கடங்களைச் சந்திக்கவும் நேரிடும்.
பாவகூலிக்கு, புண்ணியம் சேர்க்கும் வரை மட்டைகள் தோன்றும். சந்ததிகள் தொடரும். மரம் வளரும். பாவம் முற்றிலும் அழிந்து, மீண்டும் புண்ணியம் சேர்வதற்கு முன்பாக பற்றில்லாநிலை ஒன்று தோன்றும். அதாவது வெற்றிட நிலை. அந்த நிலையில் குடும்பமரம் முழுமைப்பெறும். அந்த நிலையில் மறையும் ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுக்காது. நன்கு வைரம் பாய்ந்த மரம் சில வேலைகளுக்கு பயன்படுவதைப்போல புண்ணியப்பேறுகள் பலப்பெற்ற ஒரு குடும்ப மரத்தில் இருந்துதான் இத்தகைய ஆன்மாக்கள் பிறப்பெடுக்கும். அந்த ஆன்மாக்களைத்தான் நாம் மகான்களாக கண்டறிகிறோம். அவதார புருஷர் என அழைக்கிறோம்.
சந்ததிகளால் தொடர்ந்து பாவங்களே மிகுந்து சேர்ந்தால் குடும்ப மரம் என்னாகும்? இடி விழுந்து, குருத்து அழிந்த, மொட்டை மரத்தைப் பார்த்திருப்பீர்கள். அத்தகைய மரம்போல குடும்ப மரம் மொட்டையாகும். வாரிசுகள் குறை ஆயுளில் மடிவர். அதேபோல்,சிலருக்கு, ’ சாபம் சேரலாம்
ஒரு மனிதன் வாழ்க்கையில் சம்பாதிக்கவே கூடாதது பாவங்களும், சாபங்களும். இதைச் சம்பாதித்தவன் அரசனாக இருந்தாலும், அழிவையே பெறுவான்.
பாவத்தையும், சாபத்தையும் சாமானியர்களை விட பொறுப்பில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள்தான், எளிதில் சம்பாதிக்கும் வாய்ப்புக்கொண்டவர்கள்
உலக வரலாற்றை கூர்ந்து கவனியுங்கள். வானாளவிய அதிகாரங்களைச் சுவைத்த பலர், இறுதியில் மோசமான தண்டனைகளையும் பெற்று இருப்பார்கள்.
அறிவு பாவ,புண்ணியங்களை ஏற்றுக் கொள்ளாது. நாட்டில் பாவ புண்ணியங்கள் நடமாடுவதற்கு ஆதாரம் இருக்கா? சாட்சி இருக்கா? என வினா எழுப்பும். ஞானம் பாவ, புண்ணிய கணக்குகளையே அடிப்படை ஆதாரமாக எடுத்துக் கொள்ளும். அறிவு பிரார்த்தனைகளை, ஆசீர்வாதங்களை நம்பாது. ஞானம் பிரார்த்தனைகளை, ஆசீர்வாதங்களை மீறாது.