அரி சக்கர கட்டு மந்திரம்
திரி சக்கரம் சிவன் கொடுத்த சக்கரம் ஐம்பத்தோர் அட்ஷரத்துக்கும் உயிர்
கொடுத்த சக்கரம் பெருமாள் கையில் பேர் பிறந்த சக்கரம் ஓடாத பேய்களை
ஓட்டிவிக்கும் சக்கரம் ஆடாத பேய்களை ஆட்டுவிக்கும் சக்கரம் கல்லற
கருவற கருவாளன் தடையற வில்லற விசையற வேடன் சொல்லற சூலம்
அறச்சொன்னவன் நாவற கன்னி நூத்த நூலெடுத்து கருங்கொடியில் செய்து
வைத்தனாகிலும் ஓதி வைத்து உரத்த பார்வை செய்து வைத்தானாகிலும் ஓம்
ஆம் என்று ஆனை அடியிற் புதைத்தானாகிலும் அந்தியில் தடுத்தவன்
அசைவை முறி சிலையிற் தடுத்தவன் சிரசை அறு உச்சியில் தடுத்தவன்
உயிரைக்கொல்லு அருக்கன் முருக்கன் சந்தி வயிரவன் குமாரன் கரு
நாவுடையான் ஆணை கட்டு கட்டவே சிவாகா
என்று சொல்லி காய் வெட்டி நூல் கட்டவும்
கரு நாவுடையான் ஆணை அறு முறி தெறி படு அறுபட்டு தடையற முறியவே சிவாகா
சித்தி செய்ய 1008 முறை உரு செய்து பயன் படுத்தவும்