மந்திரம் என்பது ஏதோ பல வார்த்தைகளை போட்டு தொடர்ச்சியாக சொல்லக்கூடிய சொற்றொடர் அல்ல. அது, நமது எழுத்துக்கள் அல்லது அட்சரங்களில் உள்ள அதிர்வலைகளை பிரபஞ்சத்தில் உலாவ விட்டு நமக்கு தேவையான பலன்களை கொடுக்கும் ஒரு முறை .உச்சரிப்பு மாறினால் மந்திரமே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்
அதிர்வலைகள் நேர்மறை, எதிர்மறை என்று இரண்டு பிரிவுகளாக உள்ளது. நேர்மறை அதிர்வலைகள் என்பது நல்ல நோக்கத்தோடு, சரியான உச்சரிப்புகளுடன் ஜெபிக்க கூடிய முறையில் உருவாகும்.
எதிர்மறை அதிர்வலைகள் என்பது கெட்ட நோக்கத்தோடு ஜெபிக்க கூடிய முறையில் உருவாகும். (பல சமயங்களில் தவறான உச்சரிப்புகள் எதிர்மறை அதிர்வலைகள் ஏற்படுத்தும்). எனவே, தவறான உச்சரிப்புகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது பயக்கும்.
பொதுவாக மந்திரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று ஆபத்தானவை, மற்றொன்று ஆபத்தில்லாதவை. எல்லா பீஜ மந்திரங்களும் மிகவும் ஆபத்தானவை. அதன் உச்சரிப்புகள் மாறும் போது பலன்களும் மாறும். ஒவ்வொரு பீஜங்களும் ஒவ்வொரு சக்தியை குறிக்கும். எனவே அந்த சக்தியை கவர்ந்திழுக்க அதன் சரியான உச்சரிப்பை உபயோகிக்க வேண்டும். ஆபத்தில்லாத மந்திரங்கள் என்பது பொதுவாக அனைவரும் உச்சரிக்கும் "ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ராம ராம, கிருஷ்ணா கிருஷ்ணா" போன்றவைகள் ஆகும். இதற்கு எந்த விதிகளும் இல்லை.
குரு அவசியமா?
எந்த ஒரு கலைக்கும் குரு நிச்சயமாக தேவை. ஆனால் மந்திர யோகத்திற்கு குருவை தேடி, தீட்சை பெற்று பின் மந்திர பாராயணம் செய்வது என்பது இந்த காலத்திற்கு பொருந்தாது. ஆனால், குரு முகமாக ஒருவர் மந்திரங்களை அறிவதே சிறப்பு. எந்த மந்திரங்களை, எந்த அளவில், எந்த அழுத்ததில் உச்சரிக்க வேண்டும் என்பது அனுபவசாலிகளுக்கே தெரியும். அப்படி, குருமுகமாக கற்க இயலாதவர்கள், "குரு தட்சினாமுர்த்தி "யை மானசீக குருவாக ஏற்று மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பிக்கலாம்.
பிரமச்சரியம் அவசியமா?
நிச்சயமாக அவசியம் இல்லை. இல்லற வாசிகள், பிரம்மச்சாரிகள், சந்நியாசிகள் என்று யாராக இருப்பினும் மேலே சொன்ன ஒழுக்க முறைகளை கடைபிடிக்க வேண்டும்.