இந்த உலகில் கேடை விதைப்பவர்கள், கேடையே கூலியாக பெறுகிறார்கள். நன்மை செய்பவர்கள், நன்மையையே பெறுகிறார்கள். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இந்த கணக்கு நேர் செய்யப்படுகிறது. இதில் அரசன் முதல் ஆண்டி வரை வேறுபாடு கிடையாது.
மகான்கள், உலகப் பற்றுக்களைத் துறந்துவிடுவர். ஞான வலிமையால் சேர்ந்து விட்ட புண்ணியங்களைச் செலவு செய்ய, சில பாவிகளுக்கு விரும்பி ஆசீர்வாதம் செய்வர். பாவமும், புண்ணியமும் இல்லா வெற்றிட நிலைக்காகக் காத்திருப்பர். உரிய நேரம் வந்ததும், தன் உடலில் இருந்து ஆன்மாவை விடுவித்துக்கொள்வர். அந்த ஆன்மா பிரபஞ்ச ஆற்றலோடு அதாவது பரமாத்மாவோடு மீண்டும் இணைந்துவிடும்.
இத்தகைய மகான்களின் புண்ணியங்களால் வாழ்வின் துன்பதுயரங்களில் இருந்து விடுப்பட்ட சாதாரண மானுடர்கள் மறைந்துவிட்ட மகானுக்கு கோயில் கட்டுவர். மகான்கள் யாரும் தங்களது ஆன்ம விடுதலைக்குப்பிறகு தங்களது அழிந்துபோன உடல்தோற்றத்தை வரைந்து வைத்து வழிபடச் சொல்வதில்லை. விரும்புவதும் இல்லை. மகானின் ஆசியைப்பெற்ற மானுடர்தான் நன்றிக்கடனாகவும், ஆசி தொடர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பிலும் அவ்வாறு நடந்துகொள்கின்றனர். அத்தகையச் செயல் நற்செயல்தான், எனினும் மிகுந்த பரிசுத்த உணர்வோடு நடந்துகொள்ளா நிலையில் சங்கடங்களைச் சந்திக்கவும் நேரிடும்.
பாவகூலிக்கு, புண்ணியம் சேர்க்கும் வரை மட்டைகள் தோன்றும். சந்ததிகள் தொடரும். மரம் வளரும். பாவம் முற்றிலும் அழிந்து, மீண்டும் புண்ணியம் சேர்வதற்கு முன்பாக பற்றில்லாநிலை ஒன்று தோன்றும். அதாவது வெற்றிட நிலை. அந்த நிலையில் குடும்பமரம் முழுமைப்பெறும். அந்த நிலையில் மறையும் ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுக்காது. நன்கு வைரம் பாய்ந்த மரம் சில வேலைகளுக்கு பயன்படுவதைப்போல புண்ணியப்பேறுகள் பலப்பெற்ற ஒரு குடும்ப மரத்தில் இருந்துதான் இத்தகைய ஆன்மாக்கள் பிறப்பெடுக்கும். அந்த ஆன்மாக்களைத்தான் நாம் மகான்களாக கண்டறிகிறோம். அவதார புருஷர் என அழைக்கிறோம்.
சந்ததிகளால் தொடர்ந்து பாவங்களே மிகுந்து சேர்ந்தால் குடும்ப மரம் என்னாகும்? இடி விழுந்து, குருத்து அழிந்த, மொட்டை மரத்தைப் பார்த்திருப்பீர்கள். அத்தகைய மரம்போல குடும்ப மரம் மொட்டையாகும். வாரிசுகள் குறை ஆயுளில் மடிவர். அதேபோல்,சிலருக்கு, ’ சாபம் சேரலாம்
ஒரு மனிதன் வாழ்க்கையில் சம்பாதிக்கவே கூடாதது பாவங்களும், சாபங்களும். இதைச் சம்பாதித்தவன் அரசனாக இருந்தாலும், அழிவையே பெறுவான்.
வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய செல்வம் பணமல்ல, பொன்னல்ல, மனையல்ல, புண்ணியங்களே. புண்ணியங்களைச் சம்பாதிக்காத ஒருவர், எத்தகைய மதிப்பு வாய்ந்த செல்வங்களை சேர்த்திருந்தாலும் பின்வரும் தலைமுறைகளில் தண்ணீரில் சேமித்த உப்பு மூட்டைகளைப் போலதான். சம்பாதிக்கும் சொத்தை தலைமுறைகள் மட்டும் காத்துவிட இயலாது. அதை காக்க பெருமளவு புண்ணியங்கள் இருக்க வேண்டும்.
பாவத்தையும், சாபத்தையும் சாமானியர்களை விட பொறுப்பில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள்தான், எளிதில் சம்பாதிக்கும் வாய்ப்புக்கொண்டவர்கள்
உலக வரலாற்றை கூர்ந்து கவனியுங்கள். வானாளவிய அதிகாரங்களைச் சுவைத்த பலர், இறுதியில் மோசமான தண்டனைகளையும் பெற்று இருப்பார்கள்.
அறிவு பாவ,புண்ணியங்களை ஏற்றுக் கொள்ளாது. நாட்டில் பாவ புண்ணியங்கள் நடமாடுவதற்கு ஆதாரம் இருக்கா? சாட்சி இருக்கா? என வினா எழுப்பும். ஞானம் பாவ, புண்ணிய கணக்குகளையே அடிப்படை ஆதாரமாக எடுத்துக் கொள்ளும். அறிவு பிரார்த்தனைகளை, ஆசீர்வாதங்களை நம்பாது. ஞானம் பிரார்த்தனைகளை, ஆசீர்வாதங்களை மீறாது.
உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்)பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.
ஆப்பிரிக்காவில் ஹைடி என்னும் இடத்தில் பொகார் என்னும் மந்திரவாதிகள் இருக்கிறார்கள்.அவர்கள் இறந்து போன மனிதர்களின் பிணத்தை எடுத்து சில மூலிகைகள் மூலம் அவர்களை உயிர்ப்பித்து தங்கள் விருப்பப்படி இயக்குவார்கள்.
அந்த பிண மனிதர்களை கொண்டு தங்கள் விருப்பப்படி எல்லாம் மிக கடினமான காரியங்களை எல்லாம் செய்து கொள்வார்கள்.
அவர்கள் எப்படி பிணத்திற்கு உயிர் தருகிறார்கள்?எப்படி பிணத்தை இயக்குகிறார்கள்?என்றால் இந்த முறையில்தான்
இறந்துபோன மனிதர்களின் மூலாதாரத்தில் உள்ள பாஸ்பரஸ் ஆக்சைடை அதிகரிக்கும் வண்ணமாக பாஸ்பரஸ் தனிமம் அதிகம் உள்ள மூலிகைகளை கொண்டும்,பிராணன்(மின்காந்த சக்தி) அதிகம் உள்ள மூலிகைகள் கொண்டும் அரைத்து மூலாதாரத்தில் தடவுவார்கள்.
உடல் முழுக்க பிராணாசக்தி அதிகம் உள்ள மூலிகைகளை அரைத்து தடவுவர்.ஆனால் நெற்றிப்பொட்டில் மட்டும் பிட்யூட்டரி (புத்தி) இயங்ககூடாது என்று அங்கு மட்டும் மூலிகைகளை தடவ மாட்டார்கள்.பின் பிராணா சக்தியை கவர்ந்து இழுக்கக்கூடிய சில ஊடு மந்திரங்கள் மூலம் பிராணா சக்தியை கவர்ந்து இழுத்து பிண மனிதருக்கு செலுத்துவர்.
பிராணா சக்தியின் காரணமாகவும் ,பாஸ்பரஸ் மூலிகைகள் காரணமாகவும் இவரது ஆழ்மனம் விழிப்படையும்.அதாவது ஆவிகள் உலகில் குறைந்த பிராண உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆழ்மனம் (பாஸ்பரஸ் ஆக்சைடு)ஆனது இவர்களது செயலால் உடலில் ஈர்க்கப்பட்டு அடர் பாஸ்பரஸ் ஆக்சைடாக ஸ்தூல உடலில் வெளிப்பட்டு ஸ்தூல உடலில் இயங்கும்.
பிணத்தின் உடலில் பிராணனை அதிகரித்தால் ஆழ்மன மானது உடலுடன் ஒன்றிவிடும்.அதாவது ஆழ்மனம் ஆவி உடலுக்கும் பிணத்துக்கும் இடையே ஒரு மின்காந்த இணைப்பு சங்கிலி எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கும்.
மின்காந்த சங்கிலி இணைப்பு அறுபடுவது கிடையாது.பிணத்தை முழுமையாக
எரித்தால் தான் அந்த இணைப்பு போகும்,இணைப்பு அறுபடும்.
உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்)பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.
இந்த மின்காந்த இணைப்புகள் மிக மிக மெல்லியதாக ஆகிவிட்டதால்தான் அந்த ஜீவனால் உடலை இயக்க முடியவில்லை.உடலுக்குள் புக முடியவில்லை.அதுவே இந்த தாந்திரீக முறைகள் மூலம் அந்த பிராண இணைப்பை நல்ல வலுவாக ஆக்கிவிட்டால் அந்த ஆழ்மனம் ஜீவன் உடலில் ஈர்க்கப்பட்டு இயங்க ஆரம்பித்துவிடும்.அப்போது அவர்களது ஆழ்மனம் ஏற்கனவே பதிவாகி உள்ள எண்ணப்பதிவின் படி செயல்படுவர்.
ஆனால் மந்திரவாதிகள் அவர்களை கட்டளை மூலம் சஜக்ஷன் மூலம் தங்கள் விருப்பபடி செயல்பட வேண்டும் என்று அவர்களது மனதை ஹிப்னாடிஷம் செய்துவிடுவர்.அந்த பிண மனிதர்களும் மந்திரவாதிகளின் கட்டளைப்படி செயல்பட ஆரம்பிப்பர்.ஆனால் அந்த மனிதர்களுக்கு உணவில் உப்பு போட்டு கொடுத்தால் அந்த பிண மனித்ர்கள் செயல்பட மாட்டார்கள்.
காரணம் உப்பு தண்ணீரில் உள்ள எல்லாவிதமான தனிமங்களையும் வெளியேற்றும் அல்லது வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
அதனால் பிணமனிதர்களின் உடலில் இயங்கிகொண்டிருக்கும் பாஸ்பரஸ் தனிமத்தை அது குறைப்பதால் பிண மனிதர்கள் மந்திரவாதியின் கட்டுபாட்டை இழக்கிறார்கள்.மீண்டும் பிணமாகவே ஆகிவிடுவார்கள்.
இப்படி ஒரு மனிதனில் புத்தியாகிய அடர் நைட்ரஜன் ஆக்சைடை இயக்காமல் அவர்களது ஆழ்மனமான சாயா புத்தியை (நைட்ரஜன் ஆக்சைடுNO)இயக்கி அவர்களை பயன்படுத்த முடியும்.
கோமாவில் இருப்பவரை கூட இது போன்று பிண மனிதராக நடமாட வைக்க முடியும்.இது உண்மை
அருகம்புல் அர்ச்சனையால் ஞானம்,கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும். வினாயகரிற்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின் மணிமுடியே ஈடாகவில்லை என்ற ஒரு புராணக்கதையும் உள்ளது. முத்தியைத் தரவல்லது அருகம்புல் உபாசனை. அதாவது நமது சகல பாவங்களையும் களைய வல்லது.
அனலாசுரன் என்ற அசுரன் உலகத்து மக்களை, தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாறி தகித்து விடுவதனாலேயே அவனிற்கு அனலாசுரன் என்ற பெயர் வந்தது. அவனின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் தேவர்கள் சிவ-சக்தியிடம் முறையிட்டனர் சிவனும் வினாயகரிடம் அனலாசுரனை வதம் செய்யும்படி கூறினார். வினாயகரும் அனலாசுரனுடன் போரிட்டார். அனலாசுரனை வெற்றி கொள்ளமுடியாத வினாயகர் அவனை பிடித்து விழுங்கி விட்டார். வினாயகரின் வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் வயிற்றினுள்ளே வெப்பமடையச் செய்தான். பிள்ளையாரை அந்த வெப்பம் கடுமையாக தகித்தது. அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக கங்கை நீர் அபிசேகம் செய்யப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை. அப்போது ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து வினாயகரின் தலை மீது வைத்தார். அனலாசுரன் வினாயகர் வயிற்றினுள்ளே சீரணமாகிவிட்டான். வினாயகரின் எரிச்சலும் அடங்கியது. அன்று முதல் வினாயகர் தன்னை அருகம்புல்லால் அர்ச்சிப்பவர்களிற்கு தான் சகல நன்மைகளையும் செய்வேன். என அருள்பாலித்தார்.
நவக் கிரக ஹோமங்களில் கேது கிரகத்துக்கு சாந்தி செய்யும்போது அருகம் புல்லை ஹோமத் தீயில் இடுவர். கேது கிரகத்துக்குப் பிள்ளையார் அதி தேவதை.
அருகம் புல்லுக்கு வடமொழியில் தூர்வா என்று பெயர். இப் பெயர் கணபதி மந்திரங்களிலும் உபநிஷத்திலும் வருகிறது. பிள்ளையாரை தூர்வாப் ப்ரியாய நம: என்று சொல்லி வழிபடுவர்.
புல் வகைகளில் அரசு போன்றது.அருகம்புல். ஆகையால் ராஜாக்கள் பட்டாபிஷேக தினத்தன்று அருகம் புல்லை வைத்து ஒரு மந்திரம் சொல்லுவார்கள். ‘’அருகே, புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ அதே போன்று மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ என்று முடி சூடும்போது மன்னன் கூறவேண்டும் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன’
பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது.
சில அபூர்வ மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் - உங்களுக்கு அளப்பரிய ஆற்றல் கிடைக்க வாய்ப்புள்ளது.நம்பிக்கையுடன் , நீங்கள் செய்து வாருங்கள். செய்து வரும் காலத்திலேயே உங்களை சுற்றி நடக்கும் , மாற்றங்களை உணர முடியும்.
மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு.கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்கார ஒலியெழுப்பும். சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கும்.சங்கொலி துர் ஆவிகளை விரட்டும்.சங்குப்பக்கம் துர் ஆவிகள் வராது. அதனால், குழந்தைகளுக்குக் கூட சங்கில் பால் ஊற்றிப்புகட்டுவர்.
மனித மண்டை ஒட்டுப்பூஜையும்,சங்குப்பூஜையும் ஒன்றுதான்.மண்டைஓடு காளிக்குரியது.இது சத்ரு சம்ஹாரம் செய்யும். சங்கு லட்சுமிக்குரியது.சங்கு பூஜை செய்து வந்தால்,தன ஆகர்ஷணம் (பண வரவு பல மடங்கு அதிகரித்தல்) ஆகும்.
சங்கினைப் பயன்படுத்தாத நேரத்தில்,வெள்ளிப்பாத்திரத்தில்,சுத்தமான நீரில் மூழ்க வைத்திருக்க வேண்டும். உபயோகிக்கும்போது அதை எடுத்து, தூய துணியினால் நன்கு துடைத்துவிட்டு, அதற்கு சாம்பிராணி புகைக் காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் முற்காலத்தில் துறவிகள் கர்ண எட்சிணி மற்றும் கர்ண பைரவர் மந்திரங்களை ஜபித்துள்ளனர்.அது துறவிகளின் உடற்கூறைப்பொறுத்து வலது காதிலோ அல்லது இடது காதிலோ முக்காலமும் உரைக்கும்.
மனதால் கேள்வி கேட்க,கேட்க, பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.
வடநாட்டில் சப்தாகர்ஷிணி என்னும் பெண் தேவதை மந்திரம்சொல்லி அருள்வாக்கு,ஜோதிடம்,கைரேகை,பிரசன்னம் என பல தொழில் செய்கின்றனர். சப்தாகர்ஷிணிக்கு ரூபம் கிடையாது.மந்திரம் மட்டும் உண்டு. அடிக்கடி பால் சாதம் ,வாழைப்பழம் சாப்பிட்டு வர சித்தியாகும். காதில் கனகபுஷ்பராகம் கடுக்கண் அணிவது ஒரு பிளஸ்பாய்ண்ட், பழைய வித்வத்கள் அனைவரும் கடுக்கண் அணிவர் இதற்குத்தான்.
நமது உடலை மந்திர உடலாக மாற்றிட வேண்டும்.மனம் விருப்பு வெறுப்பின்றி இருந்தால்தான் செய்திகளை தூய மனதில் எளிதில் பெறலாம். ஒரு லட்சம் தடவை சப்தாகர்ஷிணி மந்திரம் ஜபிக்க வேண்டும்.பின்,உங்களின் கைக்கு அடக்கமான வெண்மையான சங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் குரு அம்சம் எனில் வலதுகாதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,நீங்கள் சுக்கிர அம்சம் எனில் இடது காதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 1008 முறையும்,அந்த ஒரு லட்சத்துக்கு மேல் ஜபித்து வர வேண்டும்.சங்கின் கீழ்ப்பகுதி காதின் கீழ் மடலில் பொருத்தப்பிடித்துக் கொள்ள வேண்டும்.சங்கில் நல்லதேவதை தான் பேசும்.
சப்தாகர்ஷிணி மந்திரம்:
ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய
சப்தாகர்ஷணி ஆகர்ஷய ஆகர்ஷய
வா வா ஸ்வாஹா
இந்தப் பயிற்சியை 21 வயது நிரம்பியவர்கள் தான் செய்ய வேண்டும்.எந்த மதத்தைச் சேர்ந்தவரும் செய்யலாம். பெண்கள் மாதஓய்வு நாட்களில் 5 நாட்கள் நிறுத்தவும். அனைவரும் அசைவம்,மது நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும். இந்தப்பயிற்சிக்கு தனி அறை அவசியம்.இயலாவிட்டால்,அந்த வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் மது,மாமிசம்,முட்டை தொடக்கூடாது.இது கட்டாயம்!!!
இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா ! ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ
என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.
லக்ஷ?மி ஹ்ருதயம் என்ற இதைக் குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி தினம் காலையில் 10 முறை; வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, அதில் லெட்சுமி பூஜை செய்து 108 முறை இப்படி ஜெபித்தால்
ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை புவனேஷ்வரி . வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லை புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம்
வாலை யந்திரம்
இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை நாளில், கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 1008 தடவைகள் செபித்திட வேண்டும்.
"ஓம் கிலி சிறி றீங்"
இவ்வாறு செபித்து முடிந்ததும் , தேவை உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டும். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன். அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள் நீங்கிவிடுவார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடும். அத்துடன் வாலை புவனேஷ்வரி அம்மனின் அருளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.
வசிய காப்புகளுக்கென மாந்திரிக நூல்களிலும் சித்தர்களின் நூல்களிலும் பல தகவல்கள் கிடைக்கின்றன அப்படியான ஒரு வசிய காப்பு பற்றி அகத்தியரும் கூறியிருக்கிறார்
கொடி அறுகம் புல்லை வேருடன் பிடிங்கிக் கொண்டு வந்து அதை பிரணவ மந்திரமான ஓம் என்பதுபோல் வளைத்து தேனில் போட்டு ஒரு மண்டல காலம் வைக்கவேண்டும். பின் அதை எடுத்தப் பார்க்க, நீரெல்லாம் வற்றிப் பதமாக இருக்கும்.
வெள்ளி, செம்பு, தங்கம் ஆகிய மூன்று உலோகங்களையும் சம எடையாக எடுத்து ஒனறாகச் சேர்த்து உருக்கி தகடாகத் தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தகட்டில் தேனில் உறவைத்து எடுக்கப் பட்ட பதமான அந்த கொடியறுகை வைத்து சுருட்டவேண்டும். பின்னர் சூரியனைப் போன்று வளையமாகச் செய்து கொண்டு இரு முனையையும் இணைத்து ஒட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த வளையத்தை சூரிய ஒளி படும்படியான இடத்தில் வைத்து வணங்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த வளையத்தினை வலது கையில் அணிந்து கொள்ளவேண்டும். அப்படி வளையத்தை அணிந்து கொண்டு சென்றால், பெண்கள் துவங்கி மன்னாதி மன்னர்கள், விலங்குகள் என அனைவரையும் வசியமாக்கும்.
விஷ்ணு கிரந்தியின் வேரினை கல்வத்தில் இட்டு அதனோடு தாய்ப்பால் சேர்த்து நன்கு அரைத்து உருண்டையாக செய்து கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை சூரிய ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு வரட்டிகளைக் கொண்டு புடமிட வேண்டும். இதனால் அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும் . இந்த திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "ஓம்கிலிறீ" என்று 10008 உரு ஓதி நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள வேண்டும் அப்போது எதிரிகளும் வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு செய்யும் விலங்குகளும் வசியமாகும்
இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று 10008 உரு செபித்து பின்னர் அதனை நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம் சென்றால் அரசர்கள் வசியமாவார்கள். இது இராஜவசியம் என்றும் அத்துடன் செக மோகமும் பெண்வசியமும் உண்டாகும் . விஷ்ணு மூலி ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக் கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற் கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே.
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச் செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும் வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை பலிக்காது. என்கிறார் அகத்தியர்.
அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர்.
திருநீற்றைக் கையில் எடுத்து மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று
உலகம் முழுதும் பல்வேறு சமுகம் மற்றும் சமயத்தார் காலம் காலமாய் தாயத்துகளை பயன் படுத்தி வருகின்றனர். சித்தர்களும் தங்களுக்கே உரிய தனித்துவமான முறையில் பல வகையான தாயத்துக்களை புழக்கத்தில் வைத்திருந்தனர்.
ஆனால் சித்தர்கள் அருளிய முறையில் உருவாக்கப் படும் தாயத்துக்கள் சக்தி வாய்ந்தவை
தற்போது வணிக ரீதியாக விற்கப் படும் தாயத்துகள் பலவும் போலியானவை.
சித்தர்கள் பல வகையான தாயத்துக்களை புழக்கத்தில் வைத்திருந்தனர்.
கொடிய வன விலங்குகள் அணுகாமல் இருக்கவும்,
உயிர் கொல்லும் விஷ ஜந்துக்களிடம் காப்பாற்றவும்,
மேலும் வைத்திய காரணங்களை முன்னிருத்தியும்
தங்களின் சீடர்களின் பயன்பாட்டிற்காகவும்.தாயத்துக்கள் உருவாக்கப் பட்டவை.
தாயத்துகளில் பயன் படும் யந்திரங்கள்
தாயத்துகளில் பயன் படுத்தப் படும் யந்திரங்கள் உருவத்தால் சிறியவை, மேலும் இதனுடன் வேர், புனுகு, ஜவ்வாது , திருநீறு, மேலும் சில எண்ணெய் வகைகள் சேர்த்து தாயத்தில் அடைப்பதுண்டு. தாயத்தில் அடைக்கப் படும் யந்திரங்கள் குறிப்பிட்ட சில மனிதர்களின் குனங்களுக்கேட்ப செயற் படுபவை,
ஓரிடத்தில் வைத்து வணங்கும் யந்திரங்கள் பெரும்பாலும் பரந்த சக்தியை உடையவை. இதனுடன் வேர் வகைகள் சேர்த்து சில மூலிகை சார் எடுத்து தடவி உருவாக்க படுகிறது தாயத்து எனப்படுவது, மந்திரத் தகடு ஆகும். இவை தனிப்பட்ட மனிதர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை
கருவற கருவாளன் தடையற வில்லற விசையற வேடன் சொல்லற சூலம் அறச்சொன்னவன் நாவற கன்னி நூத்த நூலெடுத்து கருங்கொடியில் செய்து வைத்தனாகிலும் ஓதி வைத்து உரத்த பார்வை செய்து வைத்தானாகிலும் ஓம் ஆம் என்று ஆனை அடியிற் புதைத்தானாகிலும் அந்தியில் தடுத்தவன்
அசைவை முறி சிலையிற் தடுத்தவன் சிரசை அறு உச்சியில் தடுத்தவன்
உயிரைக்கொல்லு அருக்கன் முருக்கன் சந்தி வயிரவன் குமாரன் கரு
நாவுடையான் ஆணை கட்டு கட்டவே சிவாகா
என்று சொல்லி காய் வெட்டி நூல் கட்டவும்
கரு நாவுடையான் ஆணை அறு முறி தெறி படு அறுபட்டு தடையற முறியவே சிவாகா
சித்தர்களால் பயன்படுத்தபட்ட ஓர் இரகசிய மந்திர முறை
இன்று கசினோக்களில் கூட இந்த முறையை பயன்படுத்தி வெற்றி பெருபவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. இம் முறைகள் பரம்பரை முறைகளாக வருபவர்களிடம் தான் இருக்கும். அவாறான ஓர் சிறு மந்திர முறையை மட்டும் இங்கு தருகிறேன்.
மந்திரத்தை முறைப்படி சித்தி செய்து பின்னர் விளையாடும் போது கண்டிப்பாக தேவையான போது மட்டும் 3 முறை உரு செய்து விளையாடும் போது நினைத்த இலக்கம் கிடைக்கும். கைகண்ட உண்மை.
இரகசியம் என்ன வென்றால் எந்த இலக்கத்தை உருட்டி எடுத்தால் நாம் வெற்றி யடையலாம் என்பதை தீர்மானித்து அந்த இலக்கத்தை உருல செய்வதே இந்த மந்திர பிரயோகத்தின் வேலை.
தடை வெட்டு மந்திரம் இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி. மாந்திரீக வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும் சரி. எந்த காரியமாக இருந்தாலும் வெற்றியடைய முயற்சிக்கும் முறையாகும்
முதலில் வினாயகர் வெட்டு மந்திரம் பயன் படுத்தி தேங்காய் வெட்டி பின்னரே மற்றய வெட்டு மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.
தேங்காய் எடுத்து மஞ்சல் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து (அட்சரத்தில்) வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும் அப்போது தேங்காய் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விளகியது என்று அர்த்தம், ஒரு பக்கம் கவுந்தாலும் அல்லது இரண்டும் கவுந்தாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விளகும் வரை தேங்காய் வெட்டவும்.
அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமாத் துறையிலுள்ளோர், வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோருக்கு இந்த சக்கரம் பாதுகாப்பையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கும். எதிரிகள் தொல்லை, திருமணத் தடை போன்ற சிரமத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். புத்ர பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும்.
தெய்வானுகூலம் கிடைக்கும். செல்வாக்கு பெருகும். தனம் விருத்தியாகும். சகல ஜனங்களும் வசியமாவர். புதுவீடு மற்றும் கட்டடங்களைக் கட்டுவோர் இந்த சக்கரத்தை வைத்து பூஜை செய்த பின்னர் கட்டடம் கட்டத் தொடங்கினால் எல்லா மனைக் குற்றங்களும் நீங்கும்.
பஞ்ச பூதங்களை ஆகர்ஷணம் செய்து ஒரு லக்ஷத்து எட்டு மூல மந்திரங்களால் உருவேற்றி அதிதேவதைகளாகிய பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியுடன் கூடிய முப்பத்து முக்கோடி ப்ரதி அதிதேவதைகளையும் வசீகரித்து ஆவாஹனம் செய்து உருவாக்கப்பட்டது. தான் கேட்டதைத் தரும்
ஸ்ரீ சக்கரத்தில் உள்ள லட்சுமி குபேர சஞ்சீவி வேர்
இதை முறையாக உபதேசம் வாங்கிய பின் ஜபம் செய்வதே நன்மையை விரைவாகப் பெற்றுத்தரும். அப்படியில்லாவிடினும் அருகிலுள்ள அம்பிகை சன்னிதியில் பூஜா கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் சிவாச்சாரிய சுவாமிகளிடம் அதன் ஜபா முறை நியதிகளை வேண்டிக்கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
முக்கியமாக ஆபிச்சாரப் பிரயோக முறைகளைச் செயலிழக்கச் செய்ய ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி மாதாவை பிரியமுடன் வழிபட்டு வருவது மிகச் சிறந்ததாகும். வீட்டில் அவளது படத்தை நமது பிரச்சினைகள் தீரும்வரை வைத்து வழிபட்டு விட்டு பிறகு பூஜை சம்பந்தமான அனைத்துப் பொருட்களையும் ஒரு நதியிலோ, கடலிலோ சேர்த்து விட வேண்டும். வீட்டில் மிக சுத்தமான ஒரு இடத்தில் வடக்கு நோக்கியபடி படத்தை வைத்து தூப, தீப, நைவேத்தியங்கள் செய்து கீழ்கண்ட மந்திரங்களால் அவளைப் போற்றித் துதிக்க வேண்டும். நைவேத்தியமாக பானகம், உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்.
மந்திரம்
‘புத்தி முக்தி பலப்ரதாயை நம:
ஸகல ஐஸ்வர்ய தாரிண்யை நம:
நவக்ரஹ ரூபிண்யை நம:
ஒரு வளர்பிறை செவ்வாய், வெள்ளி, அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் பூஜையை தொடங்கிச் செய்ய வேண்டும். அவ்வாறு ஏதாவதொரு நாளில் தொடங்கிவிட்டு, ஒவ்வொரு செவ்வாய், ஞாயிறு, வெள்ளி ஆகிய தினங்களில் வரும் ராகு காலங்களில் மேற்கூறிய மந்திரத்தை 48 அல்லது 108 முறைகள் உச்சாடணம் செய்த பின்பு பூஜையை நிறைவு செய்தல் வேண்டும். 48 முறையோ அல்லது 108 முறையோ பிரச்சினைக்குத் தக்கபடி செய்து வர வேண்டும். பாதிக்கப்பட்டவருக்காக வேறொருவர் கூட பூஜை செய்து பலனை அவர் பெறும்படியும் செய்யலாம். முறையாகச் செய்து வருவது மிக அவசியம். காரணம் அதர்வண பத்ரகாளியான அவளது தெய்வீக சான்னித்தியம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அந்த தெய்வீக அருள் யாவருக்கும் வாய்க்கட்டும்.
அன்னை ஸ்ரீ சாமுண்டேஸ்வரியை சரண் புகுந்து, வழிபட்டு நமது துயரங்களை நீக்கிக் கொள்வது இந்த முறையாகும். சாமுண்டேஸ்வரியை, அதற்குரிய ‘நவாக்ஷா’ மூலமந்திரம் கொண்டு ஜபம் செய்வதால் துன்பங்கள் விலகும். இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையன்றோ, அல்லது வளர்பிறை செவ்வாய்க்கிழமைஅன்றோ ராகு காலத்தில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். பிறகு தினமும் 108 முறை ஸ்படிக மாலை கொண்டு ஜபத்தை அந்தந்த நாளுக்குரிய ராகு காலங்களில் செய்து வர வேண்டும். அமர்வதற்கு ஒரு நல்ல மரத்தாலான ஆசனத்தைப் பயன்படுத்த வேண்டும். மஞ்சள் நிற ஆடையணிந்து கிழக்கு நோக்கி ஜபிப்பதே சிறந்ததாகும்.
இன்னொரு முறையானது ஸ்ரீ பைரவரின் வழிபாட்டு முறையாகும். நமக்கு உள்ளுணர்வில் ஏதோ முரண்பாடான உணர்வோ, தலை சுற்றலான உணர்வோ, அல்லது நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மாலேயே உணர முடியாமலிருப்பதோ, அல்லது காரணமற்ற ஒருவித பய உணர்வோ, நடுக்கமான உடல் செயல்பாடுகள் நமக்கு இருந்தாலோ (தகுந்த மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகும்) குடும்பத்தில் மிகச் சாதாரணமாக, அடிதடி விவகாரங்களால் ரத்தக் காயங்கள் உண்டாகிற நிலைமையோ இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட ஸ்ரீ பைரவ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பல சிரமங்களைத் தவிர்த்து விடலாம்.
சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ அல்லது செவ்வாய்க்கிழமைகளிலோ, மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ ஸ்ரீபைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியால் விளக்கேற்ற வேண்டும். பைரவர் சன்னிதிக்குச் சென்றது முதல் வீடு திரும்பும்வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். வழக்கம்போல அசைவ உணவுப் பக்கமே செல்வது கூடாது. பைரவருக்குரிய மந்திரங்கள் வருமாறு:
‘ஓம் பைரவாய நமஹ’
‘ஓம் ப்ராம் பைரவாய நமஹ’
‘ஓம் நமோ ருத்ராய கபாலியாய
பைரவாய த்ரைலோக் நாதாய
ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா’
இவை பைரவருக்கான பல மந்திரங்களில் மூன்று மட்டுமே. பைரவருக்குரிய கால நேரங்களில், நமக்குச் சரியென்று படும் மந்திரத்தை அந்தக் குறிப்பிட்ட நாளில் இருந்து, தினமும் பைரவர் சன்னிதியில் 48 முறை ஜபம் செய்து வந்தால், துன்பங்களுக்குத் துன்பம் தரும் தூய சக்தி பெற்றவர்களாவோம். முக்கியமாக சனிக்கிழமைகளில் மந்திர ஜபம் செய்து வந்தால் கை மேல் பலன் காணலாம்.
நமக்கு வரக்கூடிய துன்பங்களை உடனடியாகத் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தவற்றில் மகான்களின் ஜீவ சமாதிகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அத்தகைய ஜீவ சமாதிகளில் மகான்களின் உடல் நிலைகளை மட்டுமே சார்ந்திராத ‘ஜீவ காந்த சக்தியலைகளின் அதிர்வுகள்’ ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கும், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்டும் தம்மை நாடி வருபவர்களுக்கு அருளாசியை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அத்தகைய மகான்களின் சக்தியலைகள் பலம் பெறும் நாட்களான வியாழக்கிழமைகளிலோ, அல்லது அந்தக் குறிப்பிட்ட மகானின் ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ விரதமிருந்து, அங்கு தீபமேற்றி தரிசனம் செய்வதோடு, நமது பிரார்த்தனைகளையும் செலுத்தி வந்தால் நமது குறைகள் யாவும் நீங்கப் பெறும்.
அஷ்ட கர்மங்கள்
எல்லாவித தேவதா சக்திகளுக்கும் எட்டு விதமான சக்திநிலை வெளிப்பாடுகள் உள்ளன. அவை, அஷ்ட கர்மங்கள் (எண் தொழில்கள்) என்று வழங்கப்படுகின்றன. அவை:
* மோகனம் (ஒருவர் மீது நல்ல மதிப்பீடுகளை ஏற்படுத்துவது)