உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Tuesday 4 March 2014

சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கினால் குபேர சம்பத்து கிடைக்கும்

சொர்ண ஆகர்ஷண பைரவர்.
 
சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா?  அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.
இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும்.

மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.

அடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்திற்கு செல்லுங்கள் . இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி , குறைந்தது கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படையுங்கள், அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.

சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி


 ஓம் பைரவாய வித்மஹே
 ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி: 
 தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

  


ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்
வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்
ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்





ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மகா மந்திரம்




 ஓம் அஸ்ய ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ
மகா மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷிஹ பங்திஸ் சந்தஹ
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதாஹ்
ஸ்வர்ணாகர்ஷணாகர்ஷண பைரவ ப்ரசாத சித்யர்த்தே
ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோகஹ





சொர்ண ஆகர்ஷண பைரவர் நாமாக்கள்




 ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
ஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹ
ஓம் பக்தப்பிரிய நமஹ
ஓம் பக்த வச்ய நமஹ
ஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹ
ஓம் ஸித்தித நமஹ
ஓம் கருணாமூர்த்தி நமஹ
ஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹ
ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ
ஓம் ரசஸித்தித நமஹ


ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் 1




  ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய




 ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய
மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்





ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம் 2




  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹீம்பட் ஸ்வாஹா!
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா!





ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம் 3




  ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய
மமதாரித்ரய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!