உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Wednesday 12 March 2014

தீ வினைகளை கட்டும் எதிரேறு சக்கரம்

 
                                                                                                                                                              
 
 
அரி சக்கர கட்டு மந்திரம்
 
                                       
     ஓம் அரி அரி சக்கரம் அறவுளி சக்கரம் எரி எரி சக்கரம் எதிரேறு சக்கரம் திரி

    திரி சக்கரம் சிவன் கொடுத்த சக்கரம் ஐம்பத்தோர் அட்ஷரத்துக்கும் உயிர்

   கொடுத்த சக்கரம் பெருமாள் கையில் பேர் பிறந்த சக்கரம் ஓடாத பேய்களை

   ஓட்டிவிக்கும் சக்கரம் ஆடாத பேய்களை ஆட்டுவிக்கும் சக்கரம் கல்லற

   கருவற கருவாளன் தடையற வில்லற விசையற வேடன் சொல்லற சூலம்
  
  அறச்சொன்னவன் நாவற கன்னி நூத்த நூலெடுத்து கருங்கொடியில் செய்து
 
  வைத்தனாகிலும் ஓதி வைத்து உரத்த பார்வை செய்து வைத்தானாகிலும் ஓம் 
 
 ஆம் என்று ஆனை அடியிற் புதைத்தானாகிலும் அந்தியில் தடுத்தவன்

 அசைவை முறி சிலையிற் தடுத்தவன் சிரசை அறு உச்சியில் தடுத்தவன்

 உயிரைக்கொல்லு அருக்கன் முருக்கன் சந்தி வயிரவன் குமாரன் கரு

 நாவுடையான் ஆணை கட்டு கட்டவே சிவாகா


என்று சொல்லி  காய்  வெட்டி  நூல் கட்டவும்

கரு நாவுடையான் ஆணை  அறு முறி தெறி படு அறுபட்டு தடையற முறியவே சிவாகா

  சித்தி செய்ய  1008  முறை உரு செய்து பயன் படுத்தவும்