உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Friday 14 March 2014

சித்தர்கள் அருளிய தாயத்துக்கள்

உலகம் முழுதும் பல்வேறு சமுகம் மற்றும் சமயத்தார் காலம் காலமாய் தாயத்துகளை பயன் படுத்தி வருகின்றனர். சித்தர்களும் தங்களுக்கே உரிய தனித்துவமான முறையில் பல  வகையான தாயத்துக்களை புழக்கத்தில் வைத்திருந்தனர்.

 ஆனால் சித்தர்கள் அருளிய முறையில் உருவாக்கப் படும் தாயத்துக்கள் சக்தி வாய்ந்தவை

தற்போது வணிக ரீதியாக விற்கப் படும் தாயத்துகள் பலவும் போலியானவை.


சித்தர்கள்   பல  வகையான  தாயத்துக்களை  புழக்கத்தில் வைத்திருந்தனர்.


கொடிய வன விலங்குகள் அணுகாமல் இருக்கவும்,

உயிர் கொல்லும் விஷ ஜந்துக்களிடம் காப்பாற்றவும்,

மேலும் வைத்திய காரணங்களை முன்னிருத்தியும்

தங்களின் சீடர்களின் பயன்பாட்டிற்காகவும்.தாயத்துக்கள்  உருவாக்கப் பட்டவை.


                         தாயத்துகளில் பயன் படும் யந்திரங்கள்


தாயத்துகளில் பயன் படுத்தப் படும்  யந்திரங்கள் உருவத்தால் சிறியவை, மேலும் இதனுடன் வேர், புனுகு, ஜவ்வாது , திருநீறு, மேலும் சில எண்ணெய் வகைகள் சேர்த்து தாயத்தில் அடைப்பதுண்டு. தாயத்தில் அடைக்கப் படும் யந்திரங்கள் குறிப்பிட்ட சில மனிதர்களின் குனங்களுக்கேட்ப செயற் படுபவை,


ஓரிடத்தில் வைத்து வணங்கும் யந்திரங்கள் பெரும்பாலும் பரந்த சக்தியை உடையவை. இதனுடன் வேர்  வகைகள் சேர்த்து சில மூலிகை  சார் எடுத்து தடவி உருவாக்க படுகிறது
தாயத்து எனப்படுவது, மந்திரத் தகடு  ஆகும். இவை தனிப்பட்ட
 
மனிதர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை
 

பூர்த்தி செய்வதன்பொருட்டு உருவாக்கப் படுபவை.