உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Saturday 22 March 2014

வினாயகருக்கு அருகம்புல் வழிபாடு ரகசியம்

                                                    அருகம்புல்

   அருகம்புல் அர்ச்சனையால் ஞானம்,கல்விசெல்வம் அனைத்தும் கிட்டும். வினாயகரிற்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின் மணிமுடியே ஈடாகவில்லை என்ற ஒரு புராணக்கதையும் உள்ளது. முத்தியைத் தரவல்லது அருகம்புல் உபாசனை. அதாவது நமது சகல பாவங்களையும் களைய வல்லது.

   அனலாசுரன் என்ற அசுரன் உலகத்து மக்களை, தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாறி தகித்து விடுவதனாலேயே அவனிற்கு அனலாசுரன் என்ற பெயர் வந்தது. அவனின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் தேவர்கள் சிவ-சக்தியிடம் முறையிட்டனர் சிவனும் வினாயகரிடம் அனலாசுரனை வதம் செய்யும்படி கூறினார். வினாயகரும் அனலாசுரனுடன் போரிட்டார். அனலாசுரனை வெற்றி கொள்ளமுடியாத வினாயகர் அவனை பிடித்து விழுங்கி விட்டார். வினாயகரின் வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் வயிற்றினுள்ளே வெப்பமடையச் செய்தான். பிள்ளையாரை அந்த வெப்பம் கடுமையாக தகித்தது. அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக கங்கை நீர் அபிசேகம் செய்யப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை. அப்போது ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து வினாயகரின் தலை மீது வைத்தார். அனலாசுரன் வினாயகர் வயிற்றினுள்ளே சீரணமாகிவிட்டான். வினாயகரின் எரிச்சலும் அடங்கியது. அன்று முதல் வினாயகர் தன்னை அருகம்புல்லால் அர்ச்சிப்பவர்களிற்கு தான் சகல நன்மைகளையும் செய்வேன். என அருள்பாலித்தார். 

 நவக் கிரக ஹோமங்களில் கேது கிரகத்துக்கு சாந்தி செய்யும்போது அருகம் புல்லை ஹோமத் தீயில் இடுவர். கேது கிரகத்துக்குப் பிள்ளையார் அதி தேவதை.

அருகம் புல்லுக்கு வடமொழியில் தூர்வா என்று பெயர். இப் பெயர் கணபதி மந்திரங்களிலும் உபநிஷத்திலும் வருகிறது. பிள்ளையாரை தூர்வாப் ப்ரியாய நம: என்று சொல்லி வழிபடுவர்.
 புல் வகைகளில் அரசு போன்றது.அருகம்புல். ஆகையால் ராஜாக்கள் பட்டாபிஷேக தினத்தன்று அருகம் புல்லை வைத்து ஒரு மந்திரம் சொல்லுவார்கள். ‘’அருகே, புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ அதே போன்று மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ என்று முடி சூடும்போது மன்னன் கூறவேண்டும் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன’

பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது.