உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Tuesday, 8 April 2014

பூதப்பாண்டி பூதலிங்கர் பஞ்ச பூத தலங்களையும் வணங்கிய பலன் கிட்டும்


 இறைத் தன்மையின் சாட்சியாகவும் இன்றைக்கு விளங்கும் திருத்தலங்கள் தமிழகத்தில் எத்தனையோ! இறைவனே அடியாராக அவதரித்து, பக்தர்களை ஆட்கொண்ட ஆலயங்கள் அதிகம். இறையருள் பெற்ற அடியார்களே பக்தர்களுடன் வாழ்ந்து, பகவானை பூஜித்து அமரர் ஆன தலங்களும் அதிகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பூதப்பாண்டி. இங்கு பஞ்சபூத (நிலம், நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம்) நாயகனாகத் திகழ்கிறார் ஈசன். பஞ்ச பூதங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரு பெரும் மகாசக்தியாக வீற்றருள்கிறார் இந்த  பூதலிங்கர். இவரை வணங்கினால், பஞ்ச பூத தலங்களையும் (காஞ்சி, திருவானைக்கா, திருவண் ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்) வணங்கிய  பலன் கிட்டும் என்பது ஐதீகம். இத்தல இறைவி, சிவகாமி.

ஸ்ரீபூதலிங்க சுவாமி திருக்கோயில். பஞ்ச பூதங்களும் வழிபட்ட திருத்தலம் இது. பூதப்பாண்டியன் என்ற மன்னனின் நினைவாக 'பூதப்பாண்டி' எனும் பெயர் பெற்றதாம். கவி பாடுவதில் வல்லவனாகத் திகழ்ந்தவன் வழுதியர்கோன் பூதப்பாண்டியன். ஒரு முறை கொடுமையான நோய் ஒன்றினால் அவதிப்பட்ட இந்த மன்னன், நோயில் இருந்து தன்னைக் குணப்படுத்துமாறு மதுரை ஸ்ரீசொக்கநாதரை வேண்டினான். மன்னன் கனவில் தோன்றிய இறைவன், 'பழையாற்றங்கரையில், சோலையின் நடுவே தோன்றியுள்ள ஸ்ரீசுயம்பு லிங்கத்தை வணங்கினால் பிணி தீரும்!' என அருளி மறைந்தார். அதன்படி இங்கு வந்து, ஸ்ரீபூதலிங்கேஸ்வரரை வழிபட்டு பிணி நீங்கப் பெற்ற மன்னன், நன்றிக் கடனாக அந்த  அந்த இடத்தில் சிவாலயம் எழுப்பி, ஐந்துகால பூஜைக்கும் வழி செய்தான்.

மலையடிவாரத்தில், அழகுற அமைந்திருக்கும் திருக் கோயில், கிழக்கு நோக்கியது என்றாலும், மேற்கு வாயிலே பிரதானம். சுமார் 41 அடி உயரத்துடன் 41 சிற்பங்களைக் கொண்டு திகழும் மேற்கு ராஜ கோபுரம் மிக அழகு. நாம், கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைகிறோம். முதலில் கொடி மர மண்டபம். தொடர்ந்து துவார பாலகர்கள். இங்கு, பூத கணங்களே துவார பாலகர்களாக அமைந்துள்ளனர்
 

Friday, 4 April 2014

பொற்குவியலை தரும் 64 பைரவர் 64 யோகினி

முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார்.  ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது.  பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர்.  64 யோகினிகளே 64 பைரவர்களின் சக்திகளாக மாறினர்.  64 பைரவர்களும் அவர்தம் சக்திகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வ.எண்
பைரவர்
யோகினி
1.
நீலகண்ட பைரவர்
ஜயா
2.
விசாலாட்சி பைரவர்
விஜயா
3.
மார்த்தாண்ட பைரவர்
ஜயந்தி
4.
முன்டனப்பிரபு பைரவர்
அபராஜிதா
5.
ஸ்வஸ்சந்த் பைரவர்
திவ்யமோகினி
6.
அதிசந்துஷ்ட பைரவர்
மகாயோகினி
7.
கேசர பைரவர்ஸித்தமோகினி
8.
ஸம்ஹார பைரவர்கணேஸ்வர யோகினி
9.
விஸ்வரூப பைரவர்ப்ரேதாஸின்யை
10.
நானாரூப பைரவர்டாகினி
11.
பரம பைரவர்காளி
12.
தண்டகர்ண பைரவர்காளராத்ரி
13.
ஸீதாபத்ர பைரவர்நிசாசரி
14.
சிரீடன் பைரவர்டங்கார்ரீ
15.
உன்மத்த பைரவர்வேதாள்யா
16.
மேகநாத பைரவர்ஹும்காரி
17.
மனோவேக பைரவர்ஊர்த்துவகேசி
18.
ஷேத்ரபாலக பைரவர்விருபாட்சி
19.
விருபாஷ பைரவர்சுஷ்காங்கீ
20.
காரள பைரவர்நரபோஜினி
21.
நிர்பய பைரவர்பட்சார்ரி
22.
பிசித பைரவர்வீரபத்ரா
23.
ப்ரேஷ்த பைரவர்தூம்ராக்ஷி
24.
லோகபால பைரவர்கலகப்ரியா
25.
கதாதர பைரவர்கோர ரத்தாட்சி
26.
வஜ்ரஹஸ்த பைரவர்விச்வரூபி
27.
மகாகால பைரவர்அபயங்கிரி
28.
பிரகண்ட பைரவர்வீரகௌமாரி
29.
ப்ரளய பைரவர்சண்டிகை
30.
அந்தக பைரவர்வாராஹி
31.
பூமிகர்ப்ப பைரவர்முண்டதாரணி
32.
பீஷண பைரவர்ராக்க்ஷஸி
33.
ஸம்ஹார பைரவர்பைரவி
34.
குலபால பைரவர்த்வாங்க்ஷிணி
35.
ருண்டமாலா பைரவர்தூம்ராங்கி
36.
ரத்தாங்க பைரவர்பிரேதவாகினி
37.
பிங்களேஷ்ண பைரவர்கட்கினி
38.
அப்ரரூப பைரவர்தீர்க்கலம் போஷ்யா
39.
தராபாலன பைரவர்மாலினி
40.
ப்ரஜாபாலன பைரவர்மந்திரயோகினி
41.
குல பைரவர்காளி
42.
மந்திரநாயக பைரவர்சக்ரிணி
43.
ருத்ர பைரவர்கங்காளி
44.
பிதாமஹ பைரவர்புவனேஸ்வரி
45.
விஷ்ணு பைரவர்த்ரோடகீ
46.
வடுகநாத பைரவர்மகாமாரீ
47.
கபால பைரவர்யமதூதி
48.
பூதவேதாள பைரவர்காளி
49.
த்ரிநேத்ர பைரவர்கேசினி
50.
திரபுராந்தக பைரவர்மர்த்தினி
51.
வரத பைரவர்ரோமஜங்கே
52.
பர்வதவாகன பைரவர்நிர்வாணி
53.
சசிவாகன பைரவர்விசாலி
54.
கபாலபூஷன பைரவர்கார்முகி
55.
ஸர்வக்ஞ பைரவர்தோத்யமினம
56.
ஸர்வதேவ பைரவர்அதோமுக்யை
57.
ஈசான பைரவர்முண்டாக்ரதாரிணி
58.
ஸர்வபூத பைரவர்வியாக்ரிணி
59.
கோரநாத பைரவர்தூங்ஷிணி
60.
பயங்கர பைரவர்பிரேதரூபிணி
61.
புத்திமுக்திபலப்ரத பைரவர்தூர்ஜட்டை
62.
காலாக்னி பைரவர்கோர்யா
63.
மகாரௌத்தர பைரவர்கராளி
64.
தட்சிணாபிஸ்தித பைரவர்விஷலங்கர்யா

சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன  அவற்றில் 12 திருப்பெயர்கள் மிக முக்கியமானது
 
 ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ 
 
ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
 
ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
 
ஓம் பக்தப்ரிய நமஹ
 
ஓம் பக்த வச்ய நமஹ
 
ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ
 
ஓம் ஸித்தித நமஹ
 
ஓம் கருணாமூர்த்தி நமஹ
 
ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ
 
ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
 
ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ
 
ஓம் ரசஸித்தித நமஹ
 
 யார் ஒருவர் சொர்ண பைரவரை அனுதினமும் துதிக்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண பைரவ பெருமான் பொற்குவியலை தருவார். எனவே இந்த 12 பெயர்களை மனப்பாடம் செய்து அனுதினமும் சொர்ண பைரவரை துதிக்கவும் 
 
 
 
ஓம் சிவ சிவ ஓம்

சிவபுராணம் என்பது திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும்


சிவபுராணத்தின் சிறப்பு :
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.

சிவபுராணத்தின் நோக்கம்

முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.

சிவபுராணத்தின் அமைப்பு

உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.
நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.
பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.
இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.
50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும் தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.
மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.

சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்[தொகு]

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.

இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புக்கள் வருகின்றன.

இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை.

சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.
இறைவன்[தொகு]
சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே
அளவிலாப் பெம்மானே
தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய்

உயிரும், மலங்களும்

உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் கன்மம் என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் மாயை என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.
எஞ்ஞானம் இல்லாதேன்
பொல்லா வினையேன்
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்


பிறவிச் சுழல்

 உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்.
இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்.
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்.
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்.
அல்லல் பிறவி அறுப்பானே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

ராஜவிருட்சம்

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்

ராஜவிருட்சம்

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

போதிமரம்

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

விஞ்ஞான உண்மை

அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

‘அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் ’என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

பெண்களுக்கு கர்ப்பப்பை என்ற அமைப்பு உள்ளது. பெண்ணின் ‘ ஓவரி ‘க்கு சினை முட்டைகள் வந்து சேரமுடியாவண்ணம் ‘ ஃபிலோப்பியான் ட்யூப் ‘ போன்ற உள் உறுப்பில் ஏதாவது தடை அல்லது அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். இந்த ‘ஃபிலோப்பியான் ட்யூப் ‘க்கு அடியில் தசை வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் அடைப்பு ஏற்பட்டும் இருக்கலாம். இத் தடையை நிவர்த்திக்கவே, பெரியோர்கள் கூறிய ஒப்பற்ற வழி அரச மரப் பிரதட்சிணம். அரச பிரதபுத்திர பாக்கியம் அடைய வேண்டுமானால், பெண்கள் அரச மரத்தைச் சுற்ற வேண்டும் என்று நம் மூதாதையர் ட்சணம் 108 முறை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும்போது வெறுமனே சுற்றி வராமல், ஒவ்வொரு சுற்று முடிந்ததும் , மரத்தின் அடியில் வீற்றிருக்கும் வினாயகப் பெருமான் சிலை முன்போ , அல்லது நாகர் சிலை முன்போ குனிந்து வணங்கி பஞ்சாங்க நமஸ்காரம் செய்தாக வேண்டும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பெண் இப்படி செய்து நமஸ்கரிக்கும்போது பெண்ணின் அடிவயிறு அழுத்தப்படுகின்றது. இம்மாதிரி 108 முறை அழுத்தப்படும்போது அந்த அடைப்பானது சிறிது சிறிதாக நீங்கி விடக்கூடும். அதன்பிறகு பரிபூரணமாக தடை ஏற்படுத்தும் அடைப்பு நீங்கியவுடன், சினை முட்டைகள் இப்போது எளிதாக கருப்பையைச் சென்று எளிதாகச் சேர்ந்துவிட முடியும். பிறகு புத்திர பாக்கியம் சுலபமாக ஏற்பட்டு விடும்.

இப்படிப்பட்ட உடற்பயிற்சி யோகாவில்கூட சொல்லித் தரப்படும். ஆதலின், இப்பயிற்சியை வீட்டிலேயே செய்யலாம். அரச மரத்தை ஏன் நாடிச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அதற்கான காரணத்தையும் விஞ்ஞான ரீதியிலேயே நாம் தெளிந்தறியலாம்.

தாவரங்களில் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடும் தாவரம் அரச மரம்தான். அதற்கடுத்து வேப்பமரம். சூரிய உதயத்தில் அரச பிரதட்சிணம் செய்யும்போது இம்மரத்தடியில் ஆரோக்கியமான வகையில் காற்றோட்டம் அமைந்திருப்பதுதான். அதாவது சூரிய ஒளிக்கு முன் இம் மரத்திற்கு மேல், ‘ ஓஸோன் ‘ என்னும் காற்றழுத்த மண்டலம் ஒன்று அமையப்பெற்று , பிராண வாயுவை வெளியிடாமலும், சிதற விடாமலும், மரத்தடியில் உள்ளவர்க்கு அளிக்கின்றது. இந்த அமைப்பு சூரிய ஒளி ஏற்பட்டவுடன் சிதறி காற்றழுத்தத்தையும் சிதைத்துவிடுகின்றது.

ஆகையினால்தான் வீட்டில் கூடாது என்றும், அரச மரத்தை நாடிச் சென்று அதனைப் பிரதட்சிணம் செய்து 108 முறை முடியாவிட்டாலும், தம்மால் இயன்றவரை குனிந்து நமஸ்கரித்து வந்தால், நிச்சயம் மலட்டுத் தன்மை நீங்கப் பெற்று புத்திரப் பேற்றை அடையமுடியும் என்று நம் முன்னோர்கள் கூறிய அறிவுரை தற்கால விஞ்ஞானத்துடன் எந்த அளவுக்குப் பொருந்தி வருகிறது என்பதை நினக்கும்பொழுது வியப்படைவதுடன் , நம் முன்னோர்களின் அறிவாற்றலைக் கண்டு பூரிப்படைகிறோம். பிரதி வருடமும் ஐந்து திங்கட்கிழமைகளில் அமாவாசை வரும். இந்த தினங்கள் விஷேஷ பலனை அளிக்கும்.

அது சரி!. பிள்ளைப்பேறு பெறுவதற்கு அரசப் பிரதட்சிணம் என்றால், திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆகவேண்டும் என்று சுற்றுகிறார்களே , அதற்கு விளக்கம் என்ன என்று கேட்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கும் அரச மரத்தை வலம் வருவதால், நிச்சயம் பலன் உண்டு. ஆனால், அவர்கள் 108 முறை விழுந்து வணங்கி நமஸ்கரிக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இந்தப் பயிற்சி புத்திர ஸ்தானம் அடைய விரும்புபவர்களுக்கே. !

பெண்களின் திருமணத்துக்கு சில தோஷங்கள் தடையாக அமைந்துள்ளன. அவைகளுள் நாக தோஷம் ஒன்றாகும். அரச மரத்தடியில் பெரும்பாலும் வினாயகர் சிலையுடன், நாக தேவதைகளின் சிலைகளும் நிறுத்தப்பட்டிருக்கும். காலையில் ஸ்நானம் முடித்து , நம்பிக்கையோடு, மரத்தை பிரதட்சிணம் வரும்போது நாகதோஷத்தின் பாதிப்பும் விலகி, சுப காரியம் இனிது நிறைவேறும்.

கருப்பை கோளாறு

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.


அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.


பிராணவாயு

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

அரசமரமும், வார வழிபாடும்

ஞாயிறு: ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.

திங்கள்: திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

செவ்வாய்: செவ்வாய்க்கிழமை அன்னை உமா தேவியை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் எளிதில் அடையலாம்.

புதன்: புதன்கிழமை தேவகணங்களை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு விரும்பிய லாபங்கள் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு சுபிட்சம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன்: வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை அஞ்சலி செய்து அரச மரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்வி ஞானமும் கீர்த்தியும் பெற முடியும்.

வெள்ளி: வெள்ளிக்கிழமை லட்சுமியை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும்.

சனி: மகாவிஷ்ணுவைப் பணிந்து நைவேத்தியங்கள் செய்து அரச மரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.

7 முறை சுற்றினால் இஷ்ட சித்தி.

9 முறை சற்றினால் ஜயம்.

11 முறை சுற்றினால் சற்குணம் உண்டாகும்.

13 முறை சுற்றினால் புத்திர பிராப்தி.

15 முறை சுற்றினால் ஆயுள் அபிவிருத்தி.

108 முறை சுற்றினால் தன பிராப்தி, தன விருத்தி.

1008 முறை சுற்றினால் அஸ்வமேத யாக பலன்

சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சந்திர சேகரன் ஆனார்

                                        
நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு திருமணம் செய்வித்தார். சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி, அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி வைத்தார். சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகனும் மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே அவரை சரணடையிமாறு சொன்னார். அதன்படி சந்திரன் சிவபெருமானிடம் சரணடைய சிவனும் சந்திரனின் ஒரு கலையை எடுத்து தன் சடையில் வைத்து இனி உன் ஒருக்கலைக்கு அழிவில்லை ஆனாலும் தட்சனின் சாபத்தால் தினமொரு கலையாக அழிந்தும், என்னிடம் உள்ளதால் தினமொரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என அருளாசி கூறினார். சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சந்திர சேகரன் ஆனார். அவரது தலம் திருவாரூர்(புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது. இங்கு                              

கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் கோணபிரான் மற்றும் அக்னிபுரீஸ்வரர். இறைவி கருந்தாழ்குழலி யாகும். நல்லவனவற்றை மட்டுமேக் கொடுக்க கூடியவர் இங்குள்ள சந்திர சேகர மூர்த்தி. இவரை வழிபட பித்தளையும் வைரமாகும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், நெய்யன்ன நைவேத்தியமும் சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கொடுக்க அறிவு வளர்ச்சி மிகுவதோடு நினைவாற்றல் பெருகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ந்த சந்தனத்தால் அபிசேகம் செய்தால் நற்புகழ் அடையலாம்

சோமாஸ் கந்த மூர்த்தி தரிசிக்க உடல் வலிமை புத்தி வலுவடையும்

                                          
சூரபத்மனின் கொடுமைகள் எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் அனைவரும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். வல்லமைபெற்ற தங்கள் மகனால் அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள் விரும்பினர். சிவபெருமானும் அவர்களுக்காக மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள் அகிலமெல்லாம் பரவின. உடன் பார்வதி தேவியார் அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று மோதி சிதறும் படி அந்தப்புரம் நடந்தார். இதனால் தேவர்கள் சித்தம் கலங்கி, மனம் வருந்தினர். மகனைக் கேட்டால் இவர் நெருப்பு பொறிகளை கொடுக்கின்றாரென கலங்கினர். உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கொடுத்து கங்கையில் விடச் சொன்னார். கங்கையோ அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது.
ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும் பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் முன் செல்ல தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு ஆறு குழந்தைகளை பார்வதி ஒன்றாக தூக்குகையில் அவை ஒரேக் குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்கள் கொண்டதாகவும் விளங்கியது. ஆறு முகங்களைக் கொண்டதால் ஆறுமுகன் என்றும், கந்தன் என்றும் அழைத்தனர். பின்னர் மூவரும் வெள்ளிமலையை அடைந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி என்கிறோம்.                                   

சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் செல்ல வேண்டும். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே சுரக்கும் அமுத தீர்த்தத்தினால் சோமாஸ் கந்தரை அபிசேகம் செய்ய உடல் வலிமை, அறிவு விரத்தி, தந்தைக்கே உபதேசிக்கும் அளவு புத்தி வலுவடையும். மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில் வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும். எனவே எழுத்தாளர்கள் தொழ வேண்டியவர் இவர்.

உமேச மூர்த்தி இன்பமயமான வாழ்வு அமைய அருள்புரிவார்.

                                                            
                                                     உமேச மூர்த்தி

முன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை மேற்க்கொள்ளாமல் தவச்சாலையை நோக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் நான்முகன் விஷ்ணுவை கானச்சென்றார். அவர்தம் குறைகளைச் சொன்னார். இக் குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே, எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர்.

அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்களனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அப்பொழுது தனிமையில் இருந்த சிவபெருமான் தன் தோளைப்பார்க்க அவரது சக்தியே உமாதேவியாக வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன் உமாதேவியை தன் இடபுறமாக இருக்க செய்தார். பின்னர் எரிந்து சாம்பலானவர்களை முன் போலவே படைத்தார். அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார். உலகமே செழித்தது. உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து, காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை உமையவளாக இடது பாகத்தில் வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே சிவபெருமானது பெயர்களில் உமேச மூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது.

பொதுவாக சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே உமேசமூர்த்தி யானது என்றும் சொல்லலாம். இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டியத் தலம் திருஇடைமருதூர் ஆகும். கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக அமைய அருள்புரிவார்.