உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Tuesday 8 April 2014

பூதப்பாண்டி பூதலிங்கர் பஞ்ச பூத தலங்களையும் வணங்கிய பலன் கிட்டும்


 இறைத் தன்மையின் சாட்சியாகவும் இன்றைக்கு விளங்கும் திருத்தலங்கள் தமிழகத்தில் எத்தனையோ! இறைவனே அடியாராக அவதரித்து, பக்தர்களை ஆட்கொண்ட ஆலயங்கள் அதிகம். இறையருள் பெற்ற அடியார்களே பக்தர்களுடன் வாழ்ந்து, பகவானை பூஜித்து அமரர் ஆன தலங்களும் அதிகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது பூதப்பாண்டி. இங்கு பஞ்சபூத (நிலம், நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம்) நாயகனாகத் திகழ்கிறார் ஈசன். பஞ்ச பூதங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரு பெரும் மகாசக்தியாக வீற்றருள்கிறார் இந்த  பூதலிங்கர். இவரை வணங்கினால், பஞ்ச பூத தலங்களையும் (காஞ்சி, திருவானைக்கா, திருவண் ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்) வணங்கிய  பலன் கிட்டும் என்பது ஐதீகம். இத்தல இறைவி, சிவகாமி.

ஸ்ரீபூதலிங்க சுவாமி திருக்கோயில். பஞ்ச பூதங்களும் வழிபட்ட திருத்தலம் இது. பூதப்பாண்டியன் என்ற மன்னனின் நினைவாக 'பூதப்பாண்டி' எனும் பெயர் பெற்றதாம். கவி பாடுவதில் வல்லவனாகத் திகழ்ந்தவன் வழுதியர்கோன் பூதப்பாண்டியன். ஒரு முறை கொடுமையான நோய் ஒன்றினால் அவதிப்பட்ட இந்த மன்னன், நோயில் இருந்து தன்னைக் குணப்படுத்துமாறு மதுரை ஸ்ரீசொக்கநாதரை வேண்டினான். மன்னன் கனவில் தோன்றிய இறைவன், 'பழையாற்றங்கரையில், சோலையின் நடுவே தோன்றியுள்ள ஸ்ரீசுயம்பு லிங்கத்தை வணங்கினால் பிணி தீரும்!' என அருளி மறைந்தார். அதன்படி இங்கு வந்து, ஸ்ரீபூதலிங்கேஸ்வரரை வழிபட்டு பிணி நீங்கப் பெற்ற மன்னன், நன்றிக் கடனாக அந்த  அந்த இடத்தில் சிவாலயம் எழுப்பி, ஐந்துகால பூஜைக்கும் வழி செய்தான்.

மலையடிவாரத்தில், அழகுற அமைந்திருக்கும் திருக் கோயில், கிழக்கு நோக்கியது என்றாலும், மேற்கு வாயிலே பிரதானம். சுமார் 41 அடி உயரத்துடன் 41 சிற்பங்களைக் கொண்டு திகழும் மேற்கு ராஜ கோபுரம் மிக அழகு. நாம், கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைகிறோம். முதலில் கொடி மர மண்டபம். தொடர்ந்து துவார பாலகர்கள். இங்கு, பூத கணங்களே துவார பாலகர்களாக அமைந்துள்ளனர்