உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.
Showing posts with label sanjeevi ver. Show all posts
Showing posts with label sanjeevi ver. Show all posts

Friday, 4 April 2014

பொற்குவியலை தரும் 64 பைரவர் 64 யோகினி

முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார்.  ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது.  பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர்.  64 யோகினிகளே 64 பைரவர்களின் சக்திகளாக மாறினர்.  64 பைரவர்களும் அவர்தம் சக்திகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வ.எண்
பைரவர்
யோகினி
1.
நீலகண்ட பைரவர்
ஜயா
2.
விசாலாட்சி பைரவர்
விஜயா
3.
மார்த்தாண்ட பைரவர்
ஜயந்தி
4.
முன்டனப்பிரபு பைரவர்
அபராஜிதா
5.
ஸ்வஸ்சந்த் பைரவர்
திவ்யமோகினி
6.
அதிசந்துஷ்ட பைரவர்
மகாயோகினி
7.
கேசர பைரவர்ஸித்தமோகினி
8.
ஸம்ஹார பைரவர்கணேஸ்வர யோகினி
9.
விஸ்வரூப பைரவர்ப்ரேதாஸின்யை
10.
நானாரூப பைரவர்டாகினி
11.
பரம பைரவர்காளி
12.
தண்டகர்ண பைரவர்காளராத்ரி
13.
ஸீதாபத்ர பைரவர்நிசாசரி
14.
சிரீடன் பைரவர்டங்கார்ரீ
15.
உன்மத்த பைரவர்வேதாள்யா
16.
மேகநாத பைரவர்ஹும்காரி
17.
மனோவேக பைரவர்ஊர்த்துவகேசி
18.
ஷேத்ரபாலக பைரவர்விருபாட்சி
19.
விருபாஷ பைரவர்சுஷ்காங்கீ
20.
காரள பைரவர்நரபோஜினி
21.
நிர்பய பைரவர்பட்சார்ரி
22.
பிசித பைரவர்வீரபத்ரா
23.
ப்ரேஷ்த பைரவர்தூம்ராக்ஷி
24.
லோகபால பைரவர்கலகப்ரியா
25.
கதாதர பைரவர்கோர ரத்தாட்சி
26.
வஜ்ரஹஸ்த பைரவர்விச்வரூபி
27.
மகாகால பைரவர்அபயங்கிரி
28.
பிரகண்ட பைரவர்வீரகௌமாரி
29.
ப்ரளய பைரவர்சண்டிகை
30.
அந்தக பைரவர்வாராஹி
31.
பூமிகர்ப்ப பைரவர்முண்டதாரணி
32.
பீஷண பைரவர்ராக்க்ஷஸி
33.
ஸம்ஹார பைரவர்பைரவி
34.
குலபால பைரவர்த்வாங்க்ஷிணி
35.
ருண்டமாலா பைரவர்தூம்ராங்கி
36.
ரத்தாங்க பைரவர்பிரேதவாகினி
37.
பிங்களேஷ்ண பைரவர்கட்கினி
38.
அப்ரரூப பைரவர்தீர்க்கலம் போஷ்யா
39.
தராபாலன பைரவர்மாலினி
40.
ப்ரஜாபாலன பைரவர்மந்திரயோகினி
41.
குல பைரவர்காளி
42.
மந்திரநாயக பைரவர்சக்ரிணி
43.
ருத்ர பைரவர்கங்காளி
44.
பிதாமஹ பைரவர்புவனேஸ்வரி
45.
விஷ்ணு பைரவர்த்ரோடகீ
46.
வடுகநாத பைரவர்மகாமாரீ
47.
கபால பைரவர்யமதூதி
48.
பூதவேதாள பைரவர்காளி
49.
த்ரிநேத்ர பைரவர்கேசினி
50.
திரபுராந்தக பைரவர்மர்த்தினி
51.
வரத பைரவர்ரோமஜங்கே
52.
பர்வதவாகன பைரவர்நிர்வாணி
53.
சசிவாகன பைரவர்விசாலி
54.
கபாலபூஷன பைரவர்கார்முகி
55.
ஸர்வக்ஞ பைரவர்தோத்யமினம
56.
ஸர்வதேவ பைரவர்அதோமுக்யை
57.
ஈசான பைரவர்முண்டாக்ரதாரிணி
58.
ஸர்வபூத பைரவர்வியாக்ரிணி
59.
கோரநாத பைரவர்தூங்ஷிணி
60.
பயங்கர பைரவர்பிரேதரூபிணி
61.
புத்திமுக்திபலப்ரத பைரவர்தூர்ஜட்டை
62.
காலாக்னி பைரவர்கோர்யா
63.
மகாரௌத்தர பைரவர்கராளி
64.
தட்சிணாபிஸ்தித பைரவர்விஷலங்கர்யா

சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன  அவற்றில் 12 திருப்பெயர்கள் மிக முக்கியமானது
 
 ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ 
 
ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
 
ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
 
ஓம் பக்தப்ரிய நமஹ
 
ஓம் பக்த வச்ய நமஹ
 
ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ
 
ஓம் ஸித்தித நமஹ
 
ஓம் கருணாமூர்த்தி நமஹ
 
ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ
 
ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
 
ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ
 
ஓம் ரசஸித்தித நமஹ
 
 யார் ஒருவர் சொர்ண பைரவரை அனுதினமும் துதிக்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண பைரவ பெருமான் பொற்குவியலை தருவார். எனவே இந்த 12 பெயர்களை மனப்பாடம் செய்து அனுதினமும் சொர்ண பைரவரை துதிக்கவும் 
 
 
 
ஓம் சிவ சிவ ஓம்

சதாசிவ மூர்த்தி

சடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் கைகளைக் கொண்டவர். இவறுடைய வலக்கையில் சூலமும், மழுவும், கட்வங்கமும், வாளும், பீஜா பூரகமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டு காட்சியளிக்கும். இடக்கையில் நாகம், பாசம், நீலோற்பலம், அங்குசம், டமருகம், வரதம், மணிமாலை, பரிவட்டம் எனக்காணப்படும். இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர். மேலும் தியான பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர். இவரது இடைப்பாகத்தில் சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரமனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அடங்கியுள்ளனர். இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம். இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரணகர்த்தாவாவார். இந்த மூர்த்தி ஈசானம், தத்புருடம், வாமம், அகோரம், சத்யோஜாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருப்பவர். முனிவர் கௌசிகரின் பொருட்டு இவரது சத்யோகஜாத முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களை அருளினார்.

காசிபமுனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்ற ஆதமங்களை அருளினார். பரத்வாஜருக்காக அகோரமுகத்திலிருந்து விசயம், நீச்சுவாசம், சுவயம்புவம், ஆக்நேயம், வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார். கௌதம முனிவரின் பொருட்டு தத் புருட முகத்தினின்று ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார். முடிவில் அகத்தியருக்காக ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனும் எட்டு ஆகமங்களையும் அருளினார். இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சிதம்பரமாகும். இங்குள்ள கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன. இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார். இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தால் அபிசேகம் செய்து வில்வ இலை அர்ச்சிக்க அனைத்து மூர்த்திகளையும் வணங்கிய, அர்ச்சித்த பலன் கிடைக்கும். மேலும் சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நைவேத்தியம் செய்ய மறுபிறவியில்லை எனும் நிலையை அடையலாம். இங்குள்ள சிவபெருமானை திருநீரால் அபிசேகம் செய்ய சகல நன்மையும் உண்டாகும்

Thursday, 3 April 2014

பூஜை அறை ஆகம ரகசியம்

வீட்டிலேயே பூஜை அறை என்ற அமைப்பு முதலில் ஹிந்து மதத்தில் தான் வந்தது. 

அந்த பூஜை அறையை சுத்தமா வச்சுக்கணும்.  போற இடத்திலே கண்ணுல படுற சாமி படங்களை எல்லாம் வாங்கி கொண்டு வந்து அடுக்க கூடாது.   அப்பறம் பாரமரிக்க முடியாது.  ஒட்டடை பிடிக்கும். 

சரி.. வீட்டிலே எந்த மாதிரியான சாமி படங்களை வச்சுக்கலாம்? 

குடும்ப சகிதமா உள்ள சாமிகளைதான் வீட்டிலே வச்சுக்கணும்.   தனித்த முருகனை வீட்டிலே வைக்கிறது தப்பு.  வள்ளி தெய்வானையோடு வையுங்க. 

நெஞ்சை திறந்து காட்டுற ஆஞ்சநேயரை வீட்டிலே வைக்கவே கூடாது. 

சூலத்தால குத்துற காளியம்மன்,  ஆவேசமாக இருக்கிற துர்க்கை அம்மன்,  மண்டையோட்டை  போட்டு இருக்கிற மயான காளி இப்படி துர்குணமா இருக்கிற எந்த சாமி படத்தையும் வீட்டிலே வைக்க வேண்டாம்.

ஹால்ல மார்டன் ஓவியத்தை மாட்டி வைக்கிற மாதிரி லக்ஷ்மி, குபேரன், வெங்காடாசலபதி  படத்தை வைக்க வேண்டாம்.  இவங்க எல்லாம் செல்வம் தருகிற கடவுள்.  அதனால் பூஜை அறையில் தான் வைக்கணும்.  

அப்படியே வச்சாலும் வாசலை பார்த்து வைக்க கூடாது.  உள்பக்கம் பார்த்தபடிதான் வைக்கணும்.  
வீட்டிலே சாமி படங்கள் அந்து பூச்சி அறிச்சி பழசா போச்சு.  புது படம் பிரேம் போட்டு வாங்கி வந்து மாடாலாம்னு நினைக்கிறேன்.  பழைய படத்தை என்ன செய்றது? தூக்கி போட்டுடலாமா? 

நல்ல கதை போங்க.  நேத்து வரை சாமி.  இன்னைக்கு அது வேஸ்ட் பேப்பரா.  அந்த படத்தை புது படம் வாங்கி பிரேம் போடும் போது,  பின்னால வச்சு பிரேம் பண்ணுங்க.  அதுதான் நல்லது. 
 
எங்க அப்பா எனக்கு தெய்வம் மாதிரி.  அவர் இப்போ இல்லை.  அவர் படத்தை பூஜை அறையில் சாமி  படத்தோட மாட்டி வைக்கலாமா?

உங்க அன்பை பாராட்டுறேன்.  ஆனால் இது ஆகம ரீதியா தப்பு. இறந்தவங்க படத்தை தனியாதான் வைக்கணும்.  பூஜை அறையில் வைக்கவே கூடாது.
 
வீட்டிலே செல்வம் தங்க சில யோசனைகள்.

வெள்ளிகிழமை அன்று  மாலை நேரத்தில் ஒரு பாக்கெட்  உப்பு வாங்கி, உப்பு ஜாடியில் கொட்டுற  பழக்கத்தை கொண்டு வாங்க.  வீட்டுல காசு தங்கும்.

காலையில தூங்கி எழுந்ததும் கொல்லைபுற கதவை திறங்க. தூக்கம் என்பது முதேவியாம்.  இரவு  வீட்டிலே இருக்கிற முதேவியை கொல்லை புற வழியா அனுப்பிட்டு,  தெருவாசலை திறந்து மகாலக்ஷ்மியை அழைக்க வேண்டும்.

மாலையில் கொல்லைபுற வாசலை பூட்டிவிட்டு தெரு வாசலை திறந்து விளக்கு ஏற்ற வேண்டும்.

பொதுவா குடும்ப பொண்ணுங்க  வீட்டில் விளக்கேத்தி வச்ச பிறகு வெளியே போக கூடாது.

Tuesday, 25 March 2014

மூலிகை . பிண மனிதர்கள்





உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்)பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.

 ஆப்பிரிக்காவில் ஹைடி என்னும் இடத்தில் பொகார் என்னும் மந்திரவாதிகள் இருக்கிறார்கள்.அவர்கள் இறந்து போன மனிதர்களின் பிணத்தை எடுத்து சில மூலிகைகள் மூலம் அவர்களை உயிர்ப்பித்து தங்கள் விருப்பப்படி இயக்குவார்கள்.

அந்த பிண மனிதர்களை கொண்டு தங்கள் விருப்பப்படி எல்லாம் மிக கடினமான காரியங்களை எல்லாம் செய்து கொள்வார்கள்.
அவர்கள் எப்படி பிணத்திற்கு உயிர் தருகிறார்கள்?எப்படி பிணத்தை இயக்குகிறார்கள்?என்றால் இந்த முறையில்தான்

இறந்துபோன மனிதர்களின் மூலாதாரத்தில் உள்ள பாஸ்பரஸ் ஆக்சைடை அதிகரிக்கும் வண்ணமாக பாஸ்பரஸ் தனிமம் அதிகம் உள்ள மூலிகைகளை கொண்டும்,பிராணன்(மின்காந்த சக்தி) அதிகம் உள்ள மூலிகைகள் கொண்டும் அரைத்து மூலாதாரத்தில் தடவுவார்கள்.



உடல் முழுக்க பிராணாசக்தி அதிகம் உள்ள மூலிகைகளை அரைத்து தடவுவர்.ஆனால் நெற்றிப்பொட்டில் மட்டும் பிட்யூட்டரி (புத்தி) இயங்ககூடாது என்று அங்கு மட்டும் மூலிகைகளை தடவ மாட்டார்கள்.பின் பிராணா சக்தியை கவர்ந்து இழுக்கக்கூடிய சில ஊடு மந்திரங்கள் மூலம் பிராணா சக்தியை கவர்ந்து இழுத்து பிண மனிதருக்கு செலுத்துவர்.



பிராணா சக்தியின் காரணமாகவும் ,பாஸ்பரஸ் மூலிகைகள் காரணமாகவும் இவரது ஆழ்மனம் விழிப்படையும்.அதாவது ஆவிகள் உலகில் குறைந்த பிராண உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆழ்மனம் (பாஸ்பரஸ் ஆக்சைடு)ஆனது இவர்களது செயலால் உடலில் ஈர்க்கப்பட்டு அடர் பாஸ்பரஸ் ஆக்சைடாக ஸ்தூல உடலில் வெளிப்பட்டு ஸ்தூல உடலில் இயங்கும்.

பிணத்தின் உடலில் பிராணனை அதிகரித்தால் ஆழ்மன மானது உடலுடன் ஒன்றிவிடும்.அதாவது ஆழ்மனம் ஆவி உடலுக்கும் பிணத்துக்கும் இடையே ஒரு மின்காந்த இணைப்பு சங்கிலி எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கும்.



மின்காந்த சங்கிலி இணைப்பு அறுபடுவது கிடையாது.பிணத்தை முழுமையாக

எரித்தால் தான் அந்த இணைப்பு போகும்,இணைப்பு அறுபடும்.

உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்)பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.



இந்த மின்காந்த இணைப்புகள் மிக மிக மெல்லியதாக ஆகிவிட்டதால்தான் அந்த ஜீவனால் உடலை இயக்க முடியவில்லை.உடலுக்குள் புக முடியவில்லை.அதுவே இந்த தாந்திரீக முறைகள் மூலம் அந்த பிராண இணைப்பை நல்ல வலுவாக ஆக்கிவிட்டால் அந்த ஆழ்மனம் ஜீவன் உடலில் ஈர்க்கப்பட்டு இயங்க ஆரம்பித்துவிடும்.அப்போது அவர்களது ஆழ்மனம் ஏற்கனவே பதிவாகி உள்ள எண்ணப்பதிவின் படி செயல்படுவர்.



ஆனால் மந்திரவாதிகள் அவர்களை கட்டளை மூலம் சஜக்‌ஷன் மூலம் தங்கள் விருப்பபடி செயல்பட வேண்டும் என்று அவர்களது மனதை ஹிப்னாடிஷம் செய்துவிடுவர்.அந்த பிண மனிதர்களும் மந்திரவாதிகளின் கட்டளைப்படி செயல்பட ஆரம்பிப்பர்.ஆனால் அந்த மனிதர்களுக்கு உணவில் உப்பு போட்டு கொடுத்தால் அந்த பிண மனித்ர்கள் செயல்பட மாட்டார்கள்.



காரணம் உப்பு தண்ணீரில் உள்ள எல்லாவிதமான தனிமங்களையும் வெளியேற்றும் அல்லது வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

அதனால் பிணமனிதர்களின் உடலில் இயங்கிகொண்டிருக்கும் பாஸ்பரஸ் தனிமத்தை அது குறைப்பதால் பிண மனிதர்கள் மந்திரவாதியின் கட்டுபாட்டை இழக்கிறார்கள்.மீண்டும் பிணமாகவே ஆகிவிடுவார்கள்.

இப்படி ஒரு மனிதனில் புத்தியாகிய அடர் நைட்ரஜன் ஆக்சைடை இயக்காமல் அவர்களது ஆழ்மனமான சாயா புத்தியை (நைட்ரஜன் ஆக்சைடுNO)இயக்கி அவர்களை பயன்படுத்த முடியும்.



கோமாவில் இருப்பவரை கூட இது போன்று பிண மனிதராக நடமாட வைக்க முடியும்.இது உண்மை

Tuesday, 11 March 2014

குபேரயோகம் தரும், கந்தர்வ மூலிகை வேர்

                    கந்தர்வ மூலிகை வேர் 

           
                               கந்தர்வ  வேர் 
 
 
கந்தர்வ  வேர்  இது அரசர்கள் காலங்களில்
 
அரசர்கள்,ஜமீன்தார்கள்,அந்த காலங்களில் வாழ்ந்த  செல்வந்தர்கள், இரகசியமாக
 
பயன்படுத்திய  ஒரு அறிய வகை மூலிகைவேர்  இதன்  அற்புதம் என்ன
 
வென்றால் இந்த வேரை தங்களது பொக்கிஷங்கள்
 
இருக்கும்   பெட்டகத்தில் வைத்து  இருப்பார்கள்  இந்த வேர் இருக்கும்
 
இடத்திற்கு   செல்வங்களை  ஈர்க்கும் தன்மையுன்டு  குபேரயோகம் தரும்
 
இந்த மூலிகயை  அந்த கால முனிவர்கள் இரகசியமாக பாதுகாத்து வந்தனர்.
 
 
                    கந்தர்வ மூலிகையில்
 
 
இந்த மூலிகையில் இன்னுமொரு இரகசியமும் உள்ளது.  அந்த காலங்களில்
 
 
அரசர்கள் போரின் போதோ, போர் பயிற்ச்சி செய்யும். போதோ
   
 
 வெட்டு    காயங்கள் ஏற்பட்டால்  இந்த மூலிகையின் இலைகளை  பறித்து  வெட்டு
 
 
காயங்கள்  மேல் வைத்தால் வெட்டு    காயங்கள் பட்ட இடம் தெரியாது.
 
 
இதில் முக்கியம்  காயம் பட்டு இரண்டு நாழிகைக்குள் இந்த  மூலிகையின்
 
 
இலைகளை  பறித்து வெட்டு காயங்கள்  மேல் வைக்க வேண்டும்
 

Monday, 10 March 2014

ஸ்ரீ சக்கரத்தில், லட்சுமி குபேர சஞ்சீவி வேர்

ஸ்ரீ சக்கரத்தில்     லட்சுமி குபேர சஞ்சீவி வேர்
லட்சுமி குபேர சஞ்சீவி வேர்
 
 
 அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமாத் துறையிலுள்ளோர், வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோருக்கு இந்த சக்கரம் பாதுகாப்பையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கும். எதிரிகள் தொல்லை, திருமணத் தடை போன்ற சிரமத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். புத்ர பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும்.

தெய்வானுகூலம் கிடைக்கும். செல்வாக்கு பெருகும். தனம் விருத்தியாகும். சகல ஜனங்களும் வசியமாவர். புதுவீடு மற்றும் கட்டடங்களைக் கட்டுவோர் இந்த சக்கரத்தை வைத்து பூஜை செய்த பின்னர் கட்டடம் கட்டத் தொடங்கினால் எல்லா மனைக் குற்றங்களும் நீங்கும்.

பஞ்ச பூதங்களை ஆகர்ஷணம் செய்து ஒரு லக்ஷத்து எட்டு மூல மந்திரங்களால் உருவேற்றி அதிதேவதைகளாகிய பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியுடன் கூடிய முப்பத்து முக்கோடி ப்ரதி அதிதேவதைகளையும் வசீகரித்து ஆவாஹனம் செய்து உருவாக்கப்பட்டது. தான் கேட்டதைத் தரும்
 ஸ்ரீ சக்கரத்தில்  உள்ள    லட்சுமி குபேர சஞ்சீவி வேர்

                                     

Sunday, 9 March 2014

லட்சுமி குபேர சஞ்சீவி வேர், கரு மை ராஜவஸ்ய கல்

                         லட்சுமி குபேர   சஞ்சீவி வேர்

குபேர அந்தஸ்தை பெற வைக்கும்.  லட்சுமி குபேர   சஞ்சீவி வேர்

 குரு  சிஷ்ய  வழியாக   இரகசியமாக  பாதுகாக்கப்பட்டு

 வரும்அறிய ஒன்றாகும்.

      
கரு மை ராஜவஸ்ய கல் 
 
 
சித்தர்களால்  பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய கரு மை

ராஜவஸ்ய கல்  ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை  துஷ்ட

 ஆவிகள்  நம்மை விட்டு விலகும். பிரபஞ்ச  சக்திகள் வசியமாகும்

உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் அடைய முடியும்


 

Saturday, 8 March 2014

பில்லி, சூனியம்,தீர்வுகளுக்கான சில மந்திரம்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்’
                                        நவாக்ஷா மூல மந்திரம்

‘ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ஸ்வாஹா’

இதை முறையாக உபதேசம் வாங்கிய பின் ஜபம் செய்வதே நன்மையை விரைவாகப் பெற்றுத்தரும்.  அப்படியில்லாவிடினும் அருகிலுள்ள அம்பிகை சன்னிதியில் பூஜா கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் சிவாச்சாரிய சுவாமிகளிடம் அதன் ஜபா முறை நியதிகளை வேண்டிக்கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக ஆபிச்சாரப் பிரயோக முறைகளைச் செயலிழக்கச் செய்ய ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி மாதாவை பிரியமுடன் வழிபட்டு வருவது மிகச் சிறந்ததாகும். வீட்டில் அவளது படத்தை நமது பிரச்சினைகள் தீரும்வரை வைத்து வழிபட்டு விட்டு பிறகு பூஜை சம்பந்தமான அனைத்துப் பொருட்களையும் ஒரு நதியிலோ, கடலிலோ சேர்த்து விட வேண்டும். வீட்டில் மிக சுத்தமான ஒரு இடத்தில் வடக்கு நோக்கியபடி படத்தை வைத்து தூப, தீப, நைவேத்தியங்கள் செய்து கீழ்கண்ட மந்திரங்களால் அவளைப் போற்றித் துதிக்க வேண்டும். நைவேத்தியமாக பானகம், உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்.


                   மந்திரம்


‘புத்தி முக்தி பலப்ரதாயை நம:

ஸகல ஐஸ்வர்ய தாரிண்யை நம:

நவக்ரஹ ரூபிண்யை நம:

ஒரு வளர்பிறை செவ்வாய், வெள்ளி, அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் பூஜையை தொடங்கிச் செய்ய வேண்டும். அவ்வாறு ஏதாவதொரு நாளில் தொடங்கிவிட்டு, ஒவ்வொரு செவ்வாய், ஞாயிறு, வெள்ளி ஆகிய தினங்களில் வரும் ராகு காலங்களில் மேற்கூறிய மந்திரத்தை 48 அல்லது 108 முறைகள் உச்சாடணம் செய்த பின்பு பூஜையை நிறைவு செய்தல் வேண்டும். 48 முறையோ அல்லது 108 முறையோ பிரச்சினைக்குத் தக்கபடி செய்து வர வேண்டும். பாதிக்கப்பட்டவருக்காக வேறொருவர் கூட பூஜை செய்து பலனை அவர் பெறும்படியும் செய்யலாம். முறையாகச் செய்து வருவது மிக அவசியம். காரணம் அதர்வண பத்ரகாளியான அவளது தெய்வீக சான்னித்தியம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அந்த தெய்வீக அருள் யாவருக்கும் வாய்க்கட்டும்.

அன்னை ஸ்ரீ சாமுண்டேஸ்வரியை சரண் புகுந்து, வழிபட்டு நமது துயரங்களை நீக்கிக் கொள்வது  இந்த முறையாகும். சாமுண்டேஸ்வரியை, அதற்குரிய ‘நவாக்ஷா’ மூலமந்திரம் கொண்டு ஜபம் செய்வதால் துன்பங்கள் விலகும். இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையன்றோ, அல்லது வளர்பிறை செவ்வாய்க்கிழமைஅன்றோ ராகு காலத்தில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். பிறகு தினமும் 108 முறை ஸ்படிக மாலை கொண்டு ஜபத்தை அந்தந்த நாளுக்குரிய ராகு காலங்களில் செய்து வர வேண்டும். அமர்வதற்கு ஒரு நல்ல மரத்தாலான ஆசனத்தைப் பயன்படுத்த வேண்டும். மஞ்சள் நிற ஆடையணிந்து கிழக்கு நோக்கி ஜபிப்பதே சிறந்ததாகும்.


இன்னொரு முறையானது ஸ்ரீ பைரவரின் வழிபாட்டு முறையாகும். நமக்கு உள்ளுணர்வில் ஏதோ முரண்பாடான உணர்வோ, தலை சுற்றலான உணர்வோ, அல்லது நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மாலேயே உணர முடியாமலிருப்பதோ, அல்லது காரணமற்ற ஒருவித பய உணர்வோ, நடுக்கமான உடல் செயல்பாடுகள் நமக்கு இருந்தாலோ (தகுந்த மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகும்) குடும்பத்தில் மிகச் சாதாரணமாக, அடிதடி விவகாரங்களால் ரத்தக் காயங்கள் உண்டாகிற நிலைமையோ இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட ஸ்ரீ பைரவ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பல சிரமங்களைத் தவிர்த்து விடலாம்.
சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ அல்லது செவ்வாய்க்கிழமைகளிலோ, மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ ஸ்ரீபைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியால் விளக்கேற்ற வேண்டும். பைரவர் சன்னிதிக்குச் சென்றது முதல் வீடு திரும்பும்வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். வழக்கம்போல அசைவ உணவுப் பக்கமே செல்வது கூடாது. பைரவருக்குரிய மந்திரங்கள் வருமாறு:

‘ஓம் பைரவாய நமஹ’

‘ஓம் ப்ராம் பைரவாய நமஹ’

‘ஓம் நமோ ருத்ராய கபாலியாய

பைரவாய த்ரைலோக் நாதாய

ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா’

இவை பைரவருக்கான பல மந்திரங்களில்  மூன்று மட்டுமே. பைரவருக்குரிய கால நேரங்களில், நமக்குச் சரியென்று படும் மந்திரத்தை அந்தக் குறிப்பிட்ட நாளில் இருந்து, தினமும் பைரவர் சன்னிதியில் 48 முறை ஜபம் செய்து வந்தால், துன்பங்களுக்குத் துன்பம் தரும் தூய சக்தி பெற்றவர்களாவோம். முக்கியமாக சனிக்கிழமைகளில் மந்திர ஜபம் செய்து வந்தால் கை மேல் பலன் காணலாம்.

நமக்கு வரக்கூடிய துன்பங்களை உடனடியாகத் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தவற்றில் மகான்களின் ஜீவ சமாதிகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அத்தகைய ஜீவ சமாதிகளில் மகான்களின் உடல் நிலைகளை மட்டுமே சார்ந்திராத ‘ஜீவ காந்த சக்தியலைகளின் அதிர்வுகள்’ ஒரு  குறிப்பிட்ட தூரத்திற்கும், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்டும் தம்மை நாடி வருபவர்களுக்கு   அருளாசியை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அத்தகைய மகான்களின் சக்தியலைகள் பலம் பெறும் நாட்களான வியாழக்கிழமைகளிலோ, அல்லது அந்தக் குறிப்பிட்ட மகானின் ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ விரதமிருந்து, அங்கு தீபமேற்றி தரிசனம் செய்வதோடு, நமது பிரார்த்தனைகளையும் செலுத்தி வந்தால் நமது குறைகள் யாவும் நீங்கப் பெறும்.

அஷ்ட கர்மங்கள்

எல்லாவித தேவதா சக்திகளுக்கும் எட்டு விதமான சக்திநிலை வெளிப்பாடுகள் உள்ளன. அவை, அஷ்ட கர்மங்கள் (எண் தொழில்கள்) என்று வழங்கப்படுகின்றன. அவை:

* மோகனம் (ஒருவர் மீது நல்ல மதிப்பீடுகளை ஏற்படுத்துவது)

* வசியம் (ஒருவரது விருப்பப்படி இன்னொருவர் செயல்படுதல்)

* ஸ்தம்பனம் (ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை நிறுத்தி விடுதல்)

* ஆகர்ஷணம் (ஒரு பொருளையோ அல்லது ஆளையோ வரவழைத்தல்)

* உச்சாடணம் (ஒரு இடத்திலிருந்தோ அல்லது ஒரு ஆளிடமிருந்தோ ஒரு குறிப்பிட்ட விஷயத்தை  வெளியேறச் செய்தல்)

* பேதனம் (ஒருவரது மனநிலைகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது)

* வித்வேடனம் (ஒருவரின் மனநிலைகளில் கடும் பிரிவுணர்ச்சியை உண்டாக்கி அவரைப் பிறரிடமிருந்து பிரித்து விடுதல்)

* மாரணம் (ஒருவருக்கு மரணத்தையோ அல்லது அதற்குச் சமமான நிலைகளையோ உண்டாக்குவது)


                                       

Sunday, 2 March 2014

வசிய மூலிகை சாப நிவர்தி மந்திரம்



வசியம். தேவவசியம்
 
 நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள்
 
 "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா"
 
 என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள்
 
.
 மிருகவசியம்
 
வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க,
 "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்"
 என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும்
 
 .
 லோகவசியம்
 
 
 கோணான வானை எனும் (ஆனை வணங்கி) மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம்
 "றீங்ரீ"
 என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார். இன்னுமொரு முறை > விஷ்ணு கறந்தை செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன்.
 "சிம் சிம் சிம்" 
என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் .
 
 
 லோகவசியம்
 
 
 பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால்
 "தூ தூ "
 என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும்
லோக வசியம்
 
 
 லோக வசியம் மூலிகை பெயர்: மூக்கிரட்டை.{சிகப்பு சாரனை} மூலிகை படம் பூஷ நட்சத்திரம் வரும் நாள் பிரம்ம முகூர்த்தத்தில் காலை நேரம் 3.30 இல் இருந்து 5.30 நேரத்திர்குள் மஞ்சள் நூல் காப்பு கட்டி மூலிகை சாப நிவர்தி செய்து உயிர் கொடுத்து வேர் பிடுங்கி வலது கையில் கட்டிகொள்ள வசிகரசக்தி கிடய்க்கும் .
 
 
 மூலிகை சாப நிவர்தி மந்திரம்
 
 ஓம் மூலி ஓங்கார மூலி சர்வ மூலி சர்வ சாபம் நசி மசி உன் உயிர் உன் உடலில் நிர்க்க சுவாஹா
 உயிர் கொடுக்கும் மந்திரம்
 
  ஓம் நமோ சர்வலோக வசீகராயா குரு குரு சுவாஹா

                                                                                      
 

 

Saturday, 1 March 2014

வசிய மந்திர இரகசியங்கள்


மோகினி மந்திரம்

ஓம் மோக மோகினி விரும மோகினி விஷ்னு மோகினி ஈஸ்பர மோகினி ஈஸ்பரனை கண்டு மோகித்தாள் போலே என்னைக்கண்டவர்கள் அணைவரும் என் மோகத்திரளிள் சிக்கி என் வசமாகவே சுவாகா


மூல மந்திரம்

ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசியமாகவே சுவாகா

(பௌர்ணமிதிணத்திள் சந்திர ஒளி படும்படியா இருந்து இதை செய்யவேண்டும்)
 
 
 
இது மிகவும் முக்கியமான ஓர் மந்திரம் ஆகும். தனிப்பு செய்யும் மாந்திரீகர் கண்டிப்பாக சித்தி செய்ய வேண்டியது.

 குருவை மனதில் நினைத்து அவர் தன் முன் நிற்பதாக பாவனை செய்துகொண்டு இந்த மந்திரதை பிரயோகிக்கவும்.

மந்திரம்

ஓம் அன்று தாய் தலை அறுத்த அங்குச ராமன் பிறந்து தக்கன் தலை அறுத்து யாகம் அழித்து பின்னும் சிங்காசனத்தில் சினந்து பாய அகோரம் பொறுக்க மாட்டாமல் அங்குசம் கொண்டு கட்டி வந்த மந்திரத்தாள் உருவே தனிந்து அகோரம் அடங்கி சர்வ அங்குசமும் குளிர்ந்து தனி தனி சுவாகா   

 
கிரிகை

சலத்தில் (நீர்) 9 முறை உரு செய்து சாமி ஆடுபவரின் தலையில் மந்திரத்தை செபித்தவாரு ஊற்ற எப்படிப்பட்ட தேவதையும் தனியும். இது அனுபவ உன்மை


                                           பேய் விரட்டல்

குறிப்பிட்ட நபரை காய் வெட்டி கழிப்பு செய்து விட்டு திரும்பி வரும வழியில் உள்ள சந்திகள் அனைத்திலும் இந்த மந்திரத்தை பயன் படுத்தி பேய்கள் மற்றும் பின் தொடரும் பூத பிசாசுகளை நம்மை தொடராது நிறுத்துவது மிகவும் அவசியம்,


மாறாக நீங்கள் தனியாக இரவு நேரங்களில் வரும் போது உங்களை யாரேனும் பின் தொடர்வது போல் தோன்றினாலும் இதை பயன் படுத்தி உங்களை பாதுகாக்க முடியும்.

மந்திரம்

ஓம் எட்டுத்திக்கும் பதினாறு கோணமும் கட்டினேன் இராமரும் லட்சுமனனும் கடலை கட்டி மறித்தால் போலே நானும் இக் கோடு கட்டி மறிக்கிறேன். 
அரி நம சிவாயா நில் சிவாகா. 

கிரிகை

மந்திரம் செபித்த வாரு மூன்று கோடு குறுக்கால் கீரவும். திரும்பி பார்க்காமல் வரவும்

வினாயகர் துனை கொண்டு   அகோரம் தனிப்பது

அகோரம் தனிப்பது என்றால் இலகுவான விடயம் என்று என்னி அவசரப்பட்டு உங்கள் திறமையை காட்டி பேர் கெட்டு போகவேண்டாம்.
அனைத்து தேவதைகளும் ஒரே மந்திரத்துக்கு அடங்காது என்ற நினைவு உங்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டும்.
மந்திரம்ஓம் சரவணப்பொய்கையில் சண்முகன் தோன்றிய சத்தம் கேட்டு சதாசிவன் சிந்தை மகிழ்ந்திருக்க சூரன் விட்ட நெருப்பை உன் துதிக்கையால் அமிழ்த்தினால் போலே தனியப்பா தனி ஆதி விக்னேஸ்வரனாணை சர்வாங்குசம் அடங்க தனி தனி சுவாகா.

                                                                                      
 

Thursday, 27 February 2014

செய்வினை, ஏவல், பில்லி, சூனியம்,அழிந்தோட

 

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர்.  ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி.  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு.  பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான்.  சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை.  தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன.  அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார்.  அதன் பின்னரே சக்திபண்டாசூரனைவதம்செய்தாள்
.
மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள்.  அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.  இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர்.  ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்.  அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.
 
 
 
இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.  இதோ அதன் செய்முறை…!
 
 வ.எண்பொருட்கள்அளவு
1.வெண்கடுகு250 கிராம்
2.நாய்க்கடுகு250 கிராம்
3.மருதாணி விதை250 கிராம்
4.சாம்பிராணி250 கிராம்
5.அருகம்புல் பொடி50 கிராம்
6.வில்வ இலை பொடி50 கிராம்
7.வேப்ப இலை பொடி50 கிராம்
 
 
 
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.  எங்கும் தேடி அலைய வேண்டாம்.  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
 
 
 
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
 
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.  ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை.  யார் காலிலும் படக்கூடாது.  மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
 
                        

இரகசிய மாந்திரீக முறை



இது ஓர் இரகசிய மாந்திரீக முறை இருப்பினும் அனைவரும் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக இதை வெளியிடுகிறேன்.


எப்படிப்பட்ட மாந்திரீக பிரயோகம் செய்யப்பட்டு ஒருவர் பாதிக்கபட்டாலும் அவரை அப்பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பது நமது கடமை அல்லவா. அதற்கான முறையே இது.

காய் வெட்டி அட்சரம் கட்டி பின்னரும் அவரின் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் இதை முறையாக செய்து  மேல் ஏவப்பட்ட எப்படிப்பட்ட மந்திர சக்தியையும் முறியடிக்க முடியும், அத்துடன் இது எதிரியின் மேல் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

முறைப்படி எலுமிச்சம் காய் வெட்டி பின்னர் அட்சரம் கட்டி அதற்கும் அடங்காவிடில் இதை செய்யவும். இந்த முறையை மாந்திரீகர் செய்ய முற்படும் போது அவரின் மாந்திரீக சக்தியின் பாதி பலம் அவரை விட்டு போய்விடும், பின்னர் 9 நாள் தனது வாலாய சக்தியை பிரணவம் செய்து சக்தியை எடுக்கவேண்டும்.


மந்திரம் ஒழுங்கு முறை

1. காய் எடுக்க 

ஓம் ஸ்ரீயும் சிவ காயத்திரியே நம

2. அட்சரத்தில் காய் வைக்க

ஓம் மாரணாயா நம

3. தண்ணீர் தெளிக்க

ஓம் அஸ்திராயா நம

4. மஞ்சல் குங்குமம் பூச

ஓம் நிமாயி நம

5. காய் மீது திரி கொளுத்தி வைக்க

ஓம் அஸ்திராயா நம

6. காய் வெட்ட மந்திரம்

ஓம் ஏழு கடலுக்கப்பால் எழுந்த பேரொளி, பேரொளியின் கீழே குரு முனி தவசிருக்குறார் சிதரிடு சிதரிடு ஓங்கி பாங்கி பற்றிடு பற்றிடு இவர் மேல் வரப்பட்ட பேய் பசாசு பில்லி வஞ்சனை சூனியம் அங் அறு இங் அறு எடுத்தெறி எடுத்தெறி தகன மாரணாயா நம. 

அட்சரம் காய் வைக்க













கிரிகை

முறைப்படி காய் வெட்டும் முறைக்கு அனைத்தும் செய்து குறிப்பிட்டவரை முன் நிருத்தி காய் மீது 3 திரிகளை கொளுத்தி மந்திரம் சொல்லி அவரை கடக்க விட்டு வெட்டவும். பின்னர் தண்ணீர் ஓதி அவருக்கு தெளித்து அட்சரம் கட்டவும். மந்திர உரு 21 தடவை க்கு மேல்.

                           

                                      
 
                                                                        

Monday, 24 February 2014

அஷ்ட கர்மங்களில், மோகனம்

 


 
மோகனம் சித்தியானால் உன்னைகாணும் சகல ஜீவஜந்துகளும்,
மிருங்களும், மனிதர்களும் உன்னை கண்டமாத்திரத்தில் தனது
நிலைமறந்து ஒடுங்கி உன்மீது மோகம் கொள்ளுவர்.
மோகனத்தை சித்தி செய்தவர்களை சகலத்தையும் அவர்கள்
வசமாக்கி விடுவார்கள் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை
எனலாம்  மோகனத்தின் அதிதேவதை அக்கினிபகவான்
 
மோகனம் எட்டு வகை  

1)சர்வ மோகனம்
2)இராஜ மோகனம்
3)புருஷ மோகனம்
4)ஸ்திரி மோகனம்
5)மிருக மோகனம்
6)சொர்ண மோகனம்
7)சத்துரு மோகனம்
8)லோக மோகனம்

                           மோகனம் எட்டுக்கும் மந்திரம்

ஒரு திங்கள்கிழமை நாளில் ஒரு வங்கத்தகட்டில்
நாற்கோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் 'றீங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பூசையில் வைத்து முல்லை பூக்களை
சக்கரத்தை சுற்றி வைத்து எதிரில் நல்லெண்ணை தீபமேற்றி
உடல் மனசுத்தியுடன்மஞ்சள் நிற ஆடை உடுத்தி மாம்பலகையில்

தெற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மனஓர்நிலையுடன்
"ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகா" என்ற மந்திரந்தை
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபித்தால்
இம்மோகனம் எட்டும் சித்தியாகும். 


பாரப்பா வசியமென்ற யெட்டுஞ்சொன்னேன் 
பத்திகொண்டு மோகனத்தைப் பகரக்கேளு
நேரப்பா மோகனந்தானெட்டும் நன்றாய்
 நேர்மையுடன் நின்றாட மந்திரங்கேளு
காரப்பா ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகாவென்று
 கண்ணார செபிக்கிறதோர் வகையைக்கேளு
சாரப்பா நாற்கோணம் நடுவில்விந்து
 தானெழுதி றீங்கென்று சாத்திட்டாயே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
 தன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
போத்தியிந்த மந்திரத்தை தினம்நூறப்பா
 புத்தியுடன் தான்செபித்து நின்றாயானால்
பார்த்திபனே மோகனந்தானெட்டும் நன்றாய்
 பத்தியுடனுன் வசமாய்ப் பதிவதாகும்
கார்த்துநன்றாய்க் கருணைபெறச்சித்தி பெற்றால்
 கண்கண்ட தெல்லாமோகனமாம் பாரே.

பாரடா மோகனத்திற் பதிவாய்நின்று
 பத்தியுடன் தான்செபித்து சுத்தமானால்
நேரடா சகலசெந்து மிருகமெல்லாம்
 நேர்மையுடனுன் முகங்கண்டபோது
வீரடா தானொடுங்கி மோகமாகும்
 வேதாந்த பூரணமே தான்தானானால்
ஆரடா உனக்கு நிகரொருவருண்டோ
 அப்பனே மோகனத்தை யறிந்துதேரே.