உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.
Showing posts with label செய்வினை. Show all posts
Showing posts with label செய்வினை. Show all posts

Friday, 11 April 2014

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் கஜலட்சுமி

அழகு மிகுந்த தேவியாகவும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் குணவதியாகவும், பக்தர்களின் மனக்குறை நீக்கும் அதிர்ஷ்ட தேவதையாகவும் விளங்குபவள் மகாலட்சுமி. சைவம், வைணவம் என இரு பிரிவு பக்தர்களாலும் மகாலட்சுமி கொண்டாடப்படுகிறாள்.
 
பாற்கடலில் திருமகள் தோன்றியபோது, எட்டு திசை யானைகளும் தம் மனைவியரோடு வந்து மகாலட்சுமியை மங்கள நீராடி வழிபட்டன. அதனாலே அவள் கஜலட்சுமி என போற்றப்படுகிறாள். வேதமந்திரமான ஸ்ரீ ஸூக்தம் அவள் யானைகளின் பிளிறல்களை கேட்டு மகிழ்பவள் என்று போற்றுகிறது.

நமது ஜாதகரீதியாக எத்தனை கொடிய ரித்திர யோகமிருந்தாலும்,சிலரின் சாபத்தாலோ,பலரின் வயிற்றெரிச்சலாலோ அல்லது கர்மவினை,செய்வினை மந்திரப்பிரயோகத்தாலோ எது எப்படியிருப்பினும் திட மனதுடன்,தளராத மன உறுதியுடன்,விடா முயற்சியால் இந்த கஜலட்சுமிபூஜை செய்தால் நமது தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது அனுபவ உண்மை.

வளர்பிறை வெள்ளிக்கிழமையும்,திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில் இந்த பூஜையை ஆரம்பித்து தொடர்ச்சியாக 24 வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும்.திருஓணம் வரும் வெள்ளியன்று நீராடி தூய உடை உடுத்தி,குலதெய்வத்தை மானசீகமாக வேண்டிட வேண்டும்.பிறகு விநாயகரை மனதார வேண்டி 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இந்த பூஜை நடைபெற உதவுமாறு வேண்டி வழிபட்டு, தியானிக்கவேண்டும்.

அதன்பிறகு இஷ்ட தெய்வத்தையும் பூஜித்து வழிபட்டு காலையில் சுக்கிர ஓரையில் இந்த தனம் தரும் கஜலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும்.

நுனி வாழையிலையில் நெல்பரப்பி,அதன் மீது மற்றொரு இலை வைத்து பச்சரிசி பரப்பி அதன்மீது புதுமண்கலசம் அல்லது புதுகலசச் சொம்பு வைத்து அதில் நூல் சுற்றி அதன் உள்ளே அஷ்டகந்தம் என்னும் எட்டுவிதமான வாசனைப் பொருட்கள்,
குண்டு மஞ்சள்,வெட்டிவேர்,பன்னீர்,வெள்ளிக்காசு முதலியனவற்றை விட்டு அதன் வாயில் மாவிலை வைத்து புதிய நல்ல தேங்காயை வைத்து,அத்துடன் கலசத்தில் பொட்டு வைத்து,பூவைத்து,சிகப்புப் பட்டு ஆடை சார்த்திவைக்க வேண்டும்.

கலசத்தின் முன்பு நெய்யால் தீபம் ஏற்றிட வேண்டும்.இலையில் தாம்பூலம்,தேங்காய்,பழம்,லட்டு,பாலில் செய்த இனிப்பு வகை ஒன்று, வெண் மொச்சை,சுண்டல் முதலியவற்றைப் படைக்க வேண்டும்.அந்த கலசத்தில் சவுபாக்கிய லட்சுமி எழுந்தருளும்படி வேண்டிட வேண்டும்.


அதன்பிறகு சோடேசபூஜை என்னும் பதினாறுவகை உபச்சாரங்கள் செய்யவும்.(புத்தகக் கடைகளில் சோடேச பூஜை செய்யும் முறை என்ற புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளவும்)சவுபாக்கியமகாலட்சுமியிடம் நமது தரித்திரம்,பணக்கஷ்டம்,பணப் பற்றாக்குறை நீங்கிட வேண்டவேண்டும்.

செல்வத்தை வாரி வழங்கும் ஸ்ரீகஜலட்சுமியை மனதார வேண்டியவாறு
ஓம் ஸ்ரீம் ச் ரீயை நம தனம் ஆகர்ஷய ஆகர்ஷய

என்ற மூல மந்திரத்தை 1008 முறை மெதுவாகவும்,நிதானமாகவும் ஜபிக்க வேண்டும்.
அதன்பிறகு,மல்லிகை இதழ்களால் அல்லது தாமரை இதழ்களால் ஓம்
ஸ்ரீமகாலக்ஷ்மி சவுபாக்கிய தாரண்யை நம
 என்று 108 முறை அர்ச்சிக்க வேண்டும்.அர்ச்சித்தப்பின்பு,தூபதீப நைவேத்தியம் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் இந்த கலசத்தைக் கலைக்காமல் அப்படியே வைத்திருந்து அடுத்தடுத்த வாரங்களில் கலசத்தில் சிறிது நீரும் வாசனைத் திரவியமும் சேர்த்து பூஜை செய்யவேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் வீதம் 24 வெள்ளிக்கிழமைகள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது காலை 6 முதல் 7 மணிக்குள் செய்துவரவேண்டும்.

இந்த பூஜையை தொடர்ந்து செய்யவிடாமல் நமது கர்ம வினைகள் தடுக்கலாம்;அதையும் மீறி பக்தி,வைராக்கியத்தால் தொடர்ந்து செய்து பெரும் செல்வ வளத்தை அடைவீர்களாக!

Tuesday, 1 April 2014

செய்வினை வைப்பவனே அறியாதது

 

பண்டைய தமிழர்கள் ஆதிகாலம் தொடக்கதிலிருந்தே வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம், பூகோள சாஸ்திரம் என்று புகுந்த இடத்தில் எல்லாம் புகுந்து விளையாடிய தமிழனுக்கு

ஆரம்ப காலத்தில் யுத்த நாட்களின் போது எதிரி பாசறைகளில் இந்த அம்பிறியை(ரத்தக்காட்டேறி)அலையவிட்டுஎதிரிகளை கிலிகொள்ளவைத்தான் தமிழன். இப்போது என்ன செய்கிறான்? மலிவு விலையில் ஒரு காணியை வாங்குவதற்கு இந்த அம்பிறியை குறித்த காணியில் ரத்தகாட்டேரியாக அலையவிட்டு அந்த காணியின் விலையை அடிமாட்டு விலைக்கு வாங்க பயன்படுத்துகிறான்.

                                            இந்த செய்வினைகளை விஞ்ஞான செயற்பாடுகளாக ஆரம்ப கால தமிழர்கள் , அதாவது இதன் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களது வழிவந்த சில சிஷ்ய கோடிகளும் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள். தொழில் ரகசியம், தொழில் பாதுகாப்பு போன்ற காரணங்களால்  இதன் உண்மையான பொறிமுறை ரகசியங்களை பின்வந்த தலைமுறைக்கு சொல்லித்தராத காரணத்தால் பின்னாளில் இது வெறும் அனுமானுஷ சக்திகளின் வேலை என்று ஆகிப்போனது

கி.மு 14000ம் ஆண்டுக்கு முன்னர் குமரிக்கண்டத்தில் கபாடபுரம் தலைநகராக இருந்தபோது , பாண்டியனின் அரசவையில் அறிஞராக இருந்த சிறுகூடல் பாணன் என்பவரது குறிப்பேடான "கோன் கருங்காப்பு" அதாவது கோன் என்றால் அரசன் , கருங்காப்பு என்றால் அவனது எல்லைகளை கறுப்பு விஞ்ஞானத்தால் காப்பது என்று பொருள் படும். இந்த குறிப்பில் தான் சில செய்வினை செய்யும் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.மறுபடியும் சொல்கிறேன் , உங்களது நன்மை கருதியும் , பிறர் நன்மை கருதியும் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.

சரி இப்போது அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்வினையின் செயல்முறைக்கு வருவோம், ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய் நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை ரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.

இப்போது ரத்த காட்டெரி என அறியப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர்"அம்பிறி". இந்த அம்பிறிதான் மருவி ரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.

சரி இந்த அம்பிறியை, அதுதாங்க ரத்தகாட்டேறியை கொண்டுவரும் வழிமுறையை பார்க்கலாம். இந்த எலுமிச்சை  அதில கொஞ்சம்,குங்குமத்தில் கொஞ்சம், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள் கொஞ்சம் குங்குமம். அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து கீழ்வரும்


உச்சாடனத்தை 108x3தடவை ஓத வேண்டும்\

ச்ர்ரி யாகி மாத் துகா ஸி
ஸரி ஸிகா மது காதி இஸ் ஸீ
ஓம் மியாகா டது வியா
ஸியா லிகீ தமூ ஸரி
திவ் தகி கிறீம் நது வி கா
அம்றி சிகா சர்ரி யாகி மாத் துகா ஸி
தவா ஓம் மியாகா டது வியா

இந்த உச்சாடனத்தை தொடர்ந்து 324தடவை ஓத வேண்டும். ஓதும் போது அத்தனை சொற்களும் அரை மாத்திரை வடிவில் வரும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஸ்,ஸி சொற்கள் வரும் போது ரெண்டு மாத்திரை வரும்படி பார்த்துக்கொள்ளுதல் அவசியம். இவற்றை சொல்லிக்கொண்டு
 இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குன்க்குமத்தை தடவி தீயில் போடவேண்டும். பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும் கோழியின் இரத்தத்தை பூச வேண்டும். அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில் விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும்.இப்போது செய்வினை முடிந்தது. அந்த செய்வினை பூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.
 
அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், ஒரு பெண்ணின் உருவில், கிழவன் உருவில், கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.
 
இப்போது இந்த ரத்த காட்டேறியின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அதாவது "அம்பிறி' தாக்கத்தை பார்த்துவிடலாம்.


குறிப்பிட்ட அந்த மந்திரத்தை 324தடவை  தமிழின் அரை, மற்றும் இரு மாத்திரை அளவில் உச்சாடனம் செய்யும் போது காற்றலையில் "செரியா" என்றொரு எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது.  இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் .

இந்த "செரியா" எதிர் அலைகள் காற்றில் இருக்கும் போது எலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில் அடிப்படையிலேயே "பிறிம்மி" என்ற ரசாயணம் இருக்கின்றது. குங்குமத்திலும் "ஈகலி" என்ற ரசாயணம் உள்ளது, இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து தீயிலிடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம் "செரியா' எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை அலைக்கு "சொய்" என்று பெயரிட்டுளான் பண்டை தமிழன்.

இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற 'பன்ம" என்கிற செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்கு கோழியின் இரத்தத்தில் இருக்கின்ற "ஆடுடவிக்" என்ற ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது. எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான "சொய்" எதிரலைகள் அந்த பூசணிக்காயின் "பன்ம' செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ரான்ஸ்போர்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.

இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்கவேணுமே! அதுக்கு தான் இந்த விபூதி இருக்கிறது. விபூதியில் இருகின்ற "சரகாம்" என்ற வேதியல் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை தான் அந்த குடும்பத்தின் மீது தெளிக்கவும் அந்த அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது.

இப்போது "சொய்" என்ற வலுவான அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும் ஆட்டம் ஆரம்பமாகின்றது. ரத்த காட்டேரி தயார்! அவனவன் கண்ணுக்கு நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண்போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் ஏதோ ஒன்று தொடர்பில் உச்சா போகும் அளவுக்கு பயம் இருக்கும். அது நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் இளம் மோகினி, கிழவி எதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த "சொய்" எதிரலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த 'சொய்" அலைகளின் பிரதான வேலை.
 
அதிகபட்சமாக இந்த அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்புகளை வலுவிழக்க செய்யக்கூடியது, விளைவு வாயாலும் , மூக்காலும் ரெத்தம் வரும். இப்போது புரிகிறதா செய்வினை ரத்தகாட்டேரி ஒருவனுக்கு அடிப்பது எப்படி என்று.இப்போது ஒரு கேள்வி, அது எப்படி பகலில் அடக்கி வாசிக்கும் இந்த இரத்தகாட்டேரி இரவில் மட்டும் அடிப்பது எவ்வாறு
 
 இரவு என்றால் சாதாரணமகவே அனைவருக்கும் பயம் இருக்கும். எனவே இரவில் இந்த அலைகள் அதிகம் செயல்படும் வகையில் சூத்திரத்தை வகுத்தான். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த சொய் அலைகள் தாக்கம் அடையும் போது தான் இதன் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த சொய் அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்பிறியை" ஒரு இரவில் பயங்கரமாக அலைகின்ற ரத்தகாட்டேரியாக உருவாக்கினான்.
 
இது தான் ரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம். இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் ஒழிந்துகொண்டிருக்கிறது. இதை செய்வினை வைப்பவனே அறியாதது நமது துரதிஷ்டம்.

Thursday, 6 March 2014

அதர்வண வேத வசியம்

 
வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் உண்மையில் செய்வினை வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகள் மற்றும் ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் மன உடல் பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்திரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் ஹிப்னாடிஸத்தை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று ரெய்கி மருத்துவம் நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்த்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் டெலிபதி முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்தமுடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால் எங்கோ இருக்கும் ஒருவருக்கு வித்வ பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்தமுடியாது என்பது வித்வ பிரயோக வல்லுனர்களின் கேள்வி எது எப்படியிருந்தாலும் ஆன்மீக வழியான வித்வ பிரயோகத்திலும் மூலிகைகளின் சக்தியே அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் பயன் படுத்தப்படுகிறது. காதல் வெற்றிக்கு..... காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர் தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி வாய்ந்தது போலவும் யாரை வேண்டுமென்றாலும் வசியம் செய்து விடலாம் என்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது. உண்மையில் வசியம் செய்வதற்க்கு சில விதி முறைகளை ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம் சொல்கிறது அதன்படி...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும். அதே போல பெண்களும். திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது (இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன) காதலில் வெற்றி பெற யட்சினி உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி மதன மேகலா லக்ன பீடம் வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும். மதன மேகலா என்பது விஸ்ரூப யட்சிணி அதாவது நீர், காற்று, மண் தீ போன்ற இயற்கை சக்தியில் அட்சராம்சம் கொண்டது. மதன மேகலா லக்ன பீடம் ஐந்து அங்குல நீளம் நான்கு அங்குல அகலம் கொண்டது இதன் உள்ளே ரதிமன்மத வசிய சக்ரமும் விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடைஏதும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி, ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி மம பந்தம் சித்த பதீம் ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரிபூரண வெற்றியை கொடுத்திருக்கிறது. இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார். மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம்.மதனகாமபூ, வெண்குன்றி மணி,சுழல் வண்டு, ஈப்புலி, நீர் மேல் நெருப்பு போன்றவற்றை அஷ்ட்டாங்க திராவகம் எனப்படும் குறிப்பிட்ட சில எண்ணைகளை சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை மூங்கில் குறுத்தில் காப்பிட்டு வீனாயட்சினி மூலமந்திரத்தை ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி பெண்ணின் உடல் திரவத்தோடு கலந்து உட்கொள்ள கொடுக்க ஆண்களை வசப்படுத்தமுடியும் என்று சொல்லப்படுகிறது. மரமஞ்சள்.கஸ்தூரி,தாழம்பூத்தாள்,கல்மதம்,பாதிரி, வென்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பாற்குரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் உச்சிஸ்ட்ட மதன கன்னிகா அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று யட்சிணி வசிய நிகண்டு என்ற நூல் குறிப்பிடுகிறது. எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் படுத்தும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீர.. ..... ..... கணவன் மனைவி இடையே ஏற்படும் மன வேறுபாடுகள், விருப்பமின்மை, தாம்பத்தியத்தில் ஈடுபாடுஇன்மை, வெறுப்பு ஆகியவற்றை எதிர்மறை சக்த்திகளால் ஏற்படுத்தமுடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. வித்வ பிரயோகம் எனப்படும் பூதபிரேத பைசாச பிரயோகங்கள் துர் தேவதைகள் யட்சிணிகள் மற்றும் பிரம்ம ராட்சசர்களைக்கொண்டு செயல் படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மனோசக்தி யைக்கொண்டு எதிர்மறை பதிவுகளை ஆழ்மனத்தில் ஏற்படுத்துவதன் மூலமாகவே செயல் படுத்தப்படுகின்றன. பொதுவாக கணவன் மனைவிக்குள் பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று முற்சி செய்பவர்கள் மூன்று வழிகளை பயன் படுத்துவதுண்டு. சமாதானமாக இருக்கும் கணவன் அல்லது மனைவியை குறிவைத்து அவர்களின் மனத்தை மாற்றி கணவன் அல்லது மனைவியை பற்றிய சிந்தனைகளை மறக்கசெய்வது அல்லது எதிற்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துவது வித்வேசனம் எனப்படும். ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையே எதிற்மறையான எண்னங்களை ஏற்படுத்தி தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், மற்றும் குழப்பங்கள் அதிகரிக்க செய்வது இதன் அடிப்படையாகும். கணவன் அல்லது மனைவியின் உடல் அணுக்களில் நச்சுத்தண்மையை ஏற்படுத்தி அவர்களுக்குள் தம்பத்திய உறவும் நெருக்கமும் ஏற்படாமல் செய்வது அஸ்ரஸ்வதம் எனப்படும். இதனால் கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவு ஏற்பட்டால் கணவனுக்கோ மனைவிக்கோ உடல் பாதிப்புகள்,சிரமங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்பட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகும் நிலை ஏற்படும். இந்த முறையை பயன்படுத்தும் போது கணவன் மனைவி அல்லது காதலர்களிடையே உடல் நெருக்கம் ஏற்பட்டாலோ, உடல் ஸ்பரிசம் ஏற்பட்டாலோ, கந்த ஸ்பரிசம் ஏற்பட்டாலோ அவர்களுக்கிடையே எதிற்மறை எண்னங்கள் ஏற்பட்டு வெறுப்பும் பகையும் ஏற்படும். இதனால் உடல் நெருக்கத்தை தவிர்த்து ஒருவரை ஒருவர் விட்டு விலகி செல்லும் நிலை ஏற்படும். அடுத்ததாக கணவன் அல்லது மனைவிக்கிடையில் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி மூன்றாம் நபரை பிரவேசிக்க செய்வது இது அந்தராசனம் அல்லது அந்தரபிரவேசம் எனப்படும். ஒழுக்கமான பெண் அல்லது ஆணுக்கு வேற்று ஆண் அல்லது பெண்ணோடு தொடர்புகள் அல்லது உறவுகள் ஏற்பட்டு அதனால் குடும்பத்தில் விரிசலும் பிரிவும் ஏற்பட செய்வது. பொதுவாக எல்லாவித வசியமுறைகளிலும் திலகம்,அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை என்ற ஐந்து வித மூலிகை பொருட்கள்அதிகம் பயன் படுத்தப்படுகின்றன.இதில் திலகம் என்பது நெற்றி அல்லது வகிட்டில் வைக்கப்படும் பொட்டையும், அஞ்சனம் என்பது கண்கள் அல்லது புருவத்தில் பூசப்படும் மையையும், மசிகந்தம் என்பது உடலில் பூசும் வசியபொடியையும், ஔஷதம் என்பது உட்கொள்ளும் மருந்தையும், குளிகை என்பது மருந்து உருண்டைகளையும் குறிக்கும். பாதிப்புகளை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவும் என இரண்டு வழிகளுக்கும் இந்த ஐந்து பொருட்க்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஆண்களை வசியம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் மசிகந்தம் அல்லது ஔஷதம் என்ற இரண்டு வழிகளையே பின்பற்றுகின்றனர். சந்தர்ப்ப வசத்தால் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டாலோ உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மசிகந்தம் முறையில் வசிய மருந்தை உடலில் பூசிக்கொண்டு அந்த ஆனோடு நெருங்கி பழகுகின்றனர். உடலில் பூசப்படும் மூலிகை கலவையின் சக்தி பெண்ணின் ஜீவகாந்த அணுக்கள் மற்றும் மூலிகை கலவையோடு சேர்ந்து ஆணின் வியர்வை துவாரங்கள் வழியாகவும் , உடல் திரவங்கள் வழியாகவும் உடாலுக்குள் ஊடுருவியும், வாசானை நாசி வழியே சுவாசத்தில் கலந்தும் விஷுவல் எனப்படும் காட்சி வடிவிலும்,ஆடிட்டரி எனப்படும் ஒலி வடிவிலும்,கினஸ்தடிக் எனப்படும் உணர்வு வடிவிலும் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆழ்மனதில் பதிந்த பெண்ணின் தோற்றம், நறுமணம்,செயல் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த ஆணின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு வசியம் செய்யப்பட்ட ஆண் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து வசியம் செய்தவர்களின் சிந்தனையிலேயே இருப்பான். அவர்களை தவிர மற்ற அனைத்தும் ஒரு பொருட்டாகவே தெரியாது. வசியத்தை செயல் படுத்தியவர்களை நேரில் பார்த்தாலோ, அவர்களின் குரலை கேட்டாலோ ஒரு வித பயம் அல்லது பதட்டம் ஏற்படும். மற்றவர்களின் கருத்தைவிட வசியத்தை செயல் படுத்தியவர்களின் உத்திரவுக்கு முழுமையாக கட்டுபடுவான். ஔஷதம் எனப்படும் வசிய மருந்துகளை உட்கொள்ள செய்தால் முதலில் உட்கொள்ளுபவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உடலில் தளர்ச்சியும் சோர்வும் அதிகமாகும். வயிற்றில் குத்தல் அல்லது வலி விட்டு விட்டு ஏற்படும், முதுகின் கீழ் புறத்திலும் நடு முதுகிலும் தொடர்ந்து வலி ஏற்படும்.உணவு உட்கொள்ளுவது படிப்படியாக குறையும் நாளடைவில் வசியம் வைத்தவரின் முழு கட்டுப்பாட்டில் அவர்களூக்கு மட்டுமே ஆதரவாக மாறிவிடுவார்கள். உட்கொள்ள கொடுக்கப்படும் மருந்துகள் உடல் திரவங்களை பாதித்து மனத்தின் செயல் இயக்கத்தை மாற்றுவதால் சுய கட்டுபாடு இழந்து ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய தொடர் சிந்தனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய வித்வபிரயோகத்தை செயல்படுத்துபவர்கள் மந்திர யந்திர ஔஷத சக்திகளால் மனமொழி உத்தரவுகளை செலுத்துவதுண்டு. இவ்வாறு மந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 90 நாட்களிலும், யந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 60 நாட்களிலும், ஔஷதங்கள் எனப்படும் மருந்துக்களை பயன் படுத்தினால் 30 நாட்களிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. மாந்த்ரீக சாஸ்திரத்தில் உபதேவதை வழிபாட்டின் மூலமாகவே இத்தகைய பிரயோகங்கள் செயல் படுத்தப்படுகின்றன. உச்சிஸ்டசன்டாளி,உச்சிஸ்டகாளிகா, பந்தினி, மதனமேகலா, வடயட்சிணி. துமாவதி, சங்கதரணி போன்ற யட்சிணி உபாசனைகளை பயன்படுத்தி வசியம், தம்பனம், மோகனம், வித்வேசனம், மாரணம்,உச்சாடனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக உச்சிஸ்ட்ட சண்டாளி மூல மந்திரத்தை 1008 உரு நாற்பத்தி எட்டு நாட்க்கள் ஜெபம் செய்து மந்திர ஸித்தியானதும். கர்னீகரம்,புன்னாகமலர்,ஜபபுஷ்பம்,பாதிரி, பாற்குறண்டி இவற்றை முதல் முறையாக காய் விடும் தென்னை மரத்தின் இளனீரில் சேர்த்தரைத்து புடம்போட்டு உணவில் கலந்து கொடுத்தால் சத்ரு வசியம் ஸ்த்ரீவசியம் புருஷ வசியம் ஏற்படும் என்று ருத்ர ஸ்யாமளா என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. நீலி தாரா என்ற யட்சிணி உபாசனையை 1000 இலுப்பை சமித்தில் பசு நெய் கொண்டு ஹோமம் செய்து சந்தனம், கோரோசனை, கஸ்தூரி,புனுகு,கும்குமபூ,வெள்ளாடனை,ஆகியவற்றை அயகாந்த செந்தூரத்துடன் கலந்து மண்சட்டியின் உட்புறத்தில் பூசி ஒன்பது நாட்க்கள் நிழலில் அதன் பின் அரசு சமித்தில் பசு நெய் தடவி தீயிலிட்டு எறித்து அதன் தீயை மன்சட்டியில் காட்டி கரியாக எடுத்து அதோடு எண்ணை கலந்து உலர்த்தி திலகமாக இட்டால் பதி வசியம் ஏற்படும். காமதேவனான மன்மதனின் ஐந்து வித மலர் அம்புகளான தாமரை, மாம்பூ,அசோகம்,முல்லை,நீலோற்பவம் ஆகியவற்றை மசித்து அத்துடன் வெங்காரம் ,மனோசிலை, உத்தரோணிபூஆகியவற்றை மணிக்கு ஒண்றாக கலந்து வேப்பெண்னை தவிர்த்து ஏதாவது ஒரு எண்னையில் கலந்து மூன்று நாட்க்கள் ஊறவைத்து உச்சிஸ்ட பைரவி மூலமந்திரத்தை மூன்றூ வேளை மூன்று நாட்கள் வளர் பிறையில் உரு ஏற்றி உடல் முழுவதும் தேய்த்து மூன்று நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) உடலில் ஊற விட்டு அதன்பின் ஸ்னானம் செய்தால் மன வேற்றுமையால் பிரிந்த கணவன் மனைவி ஓன்றாக சேர்வார்கள். என்றும்,( மனைவியின் மணம்,ஸ்பரிசம், நெருக்கம் கணவனின் அண்மையில் இருக்க வேண்டும்) மேற்படி கலவையை பனை ஓலையில் தேய்த்து மனைவியின் கூந்தல் ரோமம் மூன்றை பந்தனம் செய்து நன்றாக காய வைத்து விருப்பம் இல்லாத கணவனின் படுக்கையில் வைத்தால் அவனுக்கு மனைவிமீது அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மேற்சொன்ன ஐந்து பூக்களுடன் கன்று ஈனாத பசுவின் கோமியம் ஒரு பலம், சரம் கொன்றை மிளறு, தேவதாரு வேர், இலந்தை வேர்,வெண்டை வேர், வெம்பலி (வெள்ளை கொள்ளுகாடை வேர்) ஆகியவற்றை கலந்து மண்கலயத்தில் வைத்து காலை நேரத்து சூரிய ஒளியில் சூடாக்கி உடலில் தேய்த்து மூன்று நாழிகை கழித்து ஆணுடன் உறவு கொண்டால் அந்த ஆண் எந்த காலத்திலும் அந்த பெண்ணை விட்டு விலக மாட்டான். என்றும் பைரவி தந்த்ரம் என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய மருந்து கலவைகளை பெண்கள் தங்கள் கணவனிடம் பயன் படுத்தினால் அது அவர்களின் குடும்ப வாழ்வில் அதிக நெருக்கத்தையும் இன்பத்தையும் தரும் ஆனால் துரதிருஷ்டவசமாக சில பெண்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது உதவிகரமான அல்லது வசதியான, திருமணமான ஆண்களிடம் பயன் படுத்தும் போது அது அந்த ஆடவனின் குடும்ப வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆண்களின் மனதை மற்றும் முயற்சிகளை தடுக்கவும் நமது பாரம்பர்ய சாஸ்திரங்கள் வழிகளை சொல்லி இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு வேறு யாராவது எதிர்மறை பிரயோகங்களை செலுத்திவிடுவார்கள் என்ற பயம் இருந்தாலோ, எதிர்மறை பிரயோகங்களால் தன் கணவனின் உயிருக்கோ ஆரோக்கியத்திற்க்கோ பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருந்தாலோ வைஜயந்தி யந்திரம் என்னும் அஸ்வரூட ரக்ஷையை வெள்ளி கிழமையும் பஞ்சமி திதியும் சேர்ந்து வரும் நாளில் மாங்கல்யத்தில் கோர்த்து அணிவது பாதுகாப்பை தரும். அஷ்வரூடா என்பவள் பராசக்தியின் பாஸ பானத்தில் இருந்து தோன்றியவள். கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் உரிய தெய்வமாக தேவி மஹாத்மியம் சொல்கிறது. ரக்ஷையில் இருக்கும் அஸ்வரூடா யந்திரம் கணவன் மனைவிக்கிடையே ஜென்ம பந்தம் எனப்படும் மன இணைப்பை அதிக படுத்துவதுடன், பகளாமுகி யந்திரம் கணவன் மனைவி ஒர்ருமையான திருமண பந்தத்திற்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஔஷதம் எனப்படும் மருந்துகள் கொடுக்கப் பட்டிருந்தால் என்ன வகையான மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றை செயல் இழக்க செய்யும் எதிருரை மருந்துகளை ஸ்ரீதேவி கார்த்யாயணி மந்திர பிரயோகத்தால் ஒன்பது வேளைகள் உரு ஏற்றி தேய் பிறை நாட்களில் உட்கொண்டால் செலுத்தப்பட்ட விஷம் உடல் கழிவுகள் வழியாக வெளியேரும். எதிர் மறை சக்திகளால் குடும்பதலைவனின் பொறுப்பின்மை அதிகரித்தாலோ, குடும்பத்தில் குழப்பங்களும் அமைதியின்மையும் நிலவினாலும் கார்த்யாயனி யந்திர பீடத்தை வீட்டில் வைத்து வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பூஜித்து வந்தால் அனைத்து வித ஸாகினி, டாகினி,மோகினி,பில்லி, சூனியம்,வைப்பு,ஏவல் முதலிய துஷ்ட சக்திகளின் பாதிப்புகளை தடுத்து நீக்கிவிடும்.
                     

Thursday, 27 February 2014

செய்வினை, ஏவல், பில்லி, சூனியம்,அழிந்தோட

 

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர்.  ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி.  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு.  பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான்.  சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை.  தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன.  அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார்.  அதன் பின்னரே சக்திபண்டாசூரனைவதம்செய்தாள்
.
மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள்.  அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.  இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர்.  ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்.  அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.
 
 
 
இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.  இதோ அதன் செய்முறை…!
 
 வ.எண்பொருட்கள்அளவு
1.வெண்கடுகு250 கிராம்
2.நாய்க்கடுகு250 கிராம்
3.மருதாணி விதை250 கிராம்
4.சாம்பிராணி250 கிராம்
5.அருகம்புல் பொடி50 கிராம்
6.வில்வ இலை பொடி50 கிராம்
7.வேப்ப இலை பொடி50 கிராம்
 
 
 
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.  எங்கும் தேடி அலைய வேண்டாம்.  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
 
 
 
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
 
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.  ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை.  யார் காலிலும் படக்கூடாது.  மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.