உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Thursday, 3 April 2014

பூஜை அறை ஆகம ரகசியம்

வீட்டிலேயே பூஜை அறை என்ற அமைப்பு முதலில் ஹிந்து மதத்தில் தான் வந்தது. 

அந்த பூஜை அறையை சுத்தமா வச்சுக்கணும்.  போற இடத்திலே கண்ணுல படுற சாமி படங்களை எல்லாம் வாங்கி கொண்டு வந்து அடுக்க கூடாது.   அப்பறம் பாரமரிக்க முடியாது.  ஒட்டடை பிடிக்கும். 

சரி.. வீட்டிலே எந்த மாதிரியான சாமி படங்களை வச்சுக்கலாம்? 

குடும்ப சகிதமா உள்ள சாமிகளைதான் வீட்டிலே வச்சுக்கணும்.   தனித்த முருகனை வீட்டிலே வைக்கிறது தப்பு.  வள்ளி தெய்வானையோடு வையுங்க. 

நெஞ்சை திறந்து காட்டுற ஆஞ்சநேயரை வீட்டிலே வைக்கவே கூடாது. 

சூலத்தால குத்துற காளியம்மன்,  ஆவேசமாக இருக்கிற துர்க்கை அம்மன்,  மண்டையோட்டை  போட்டு இருக்கிற மயான காளி இப்படி துர்குணமா இருக்கிற எந்த சாமி படத்தையும் வீட்டிலே வைக்க வேண்டாம்.

ஹால்ல மார்டன் ஓவியத்தை மாட்டி வைக்கிற மாதிரி லக்ஷ்மி, குபேரன், வெங்காடாசலபதி  படத்தை வைக்க வேண்டாம்.  இவங்க எல்லாம் செல்வம் தருகிற கடவுள்.  அதனால் பூஜை அறையில் தான் வைக்கணும்.  

அப்படியே வச்சாலும் வாசலை பார்த்து வைக்க கூடாது.  உள்பக்கம் பார்த்தபடிதான் வைக்கணும்.  
வீட்டிலே சாமி படங்கள் அந்து பூச்சி அறிச்சி பழசா போச்சு.  புது படம் பிரேம் போட்டு வாங்கி வந்து மாடாலாம்னு நினைக்கிறேன்.  பழைய படத்தை என்ன செய்றது? தூக்கி போட்டுடலாமா? 

நல்ல கதை போங்க.  நேத்து வரை சாமி.  இன்னைக்கு அது வேஸ்ட் பேப்பரா.  அந்த படத்தை புது படம் வாங்கி பிரேம் போடும் போது,  பின்னால வச்சு பிரேம் பண்ணுங்க.  அதுதான் நல்லது. 
 
எங்க அப்பா எனக்கு தெய்வம் மாதிரி.  அவர் இப்போ இல்லை.  அவர் படத்தை பூஜை அறையில் சாமி  படத்தோட மாட்டி வைக்கலாமா?

உங்க அன்பை பாராட்டுறேன்.  ஆனால் இது ஆகம ரீதியா தப்பு. இறந்தவங்க படத்தை தனியாதான் வைக்கணும்.  பூஜை அறையில் வைக்கவே கூடாது.
 
வீட்டிலே செல்வம் தங்க சில யோசனைகள்.

வெள்ளிகிழமை அன்று  மாலை நேரத்தில் ஒரு பாக்கெட்  உப்பு வாங்கி, உப்பு ஜாடியில் கொட்டுற  பழக்கத்தை கொண்டு வாங்க.  வீட்டுல காசு தங்கும்.

காலையில தூங்கி எழுந்ததும் கொல்லைபுற கதவை திறங்க. தூக்கம் என்பது முதேவியாம்.  இரவு  வீட்டிலே இருக்கிற முதேவியை கொல்லை புற வழியா அனுப்பிட்டு,  தெருவாசலை திறந்து மகாலக்ஷ்மியை அழைக்க வேண்டும்.

மாலையில் கொல்லைபுற வாசலை பூட்டிவிட்டு தெரு வாசலை திறந்து விளக்கு ஏற்ற வேண்டும்.

பொதுவா குடும்ப பொண்ணுங்க  வீட்டில் விளக்கேத்தி வச்ச பிறகு வெளியே போக கூடாது.

பிரம்மா ரகசியம். பிறவி ரகசியம்


 
நாம் பிறக்கிறோம்....

எங்கிருந்து வந்தோம் தெரியாது? 

எங்கே போக போகபோகிறோம் அதுவும் தெரியாது.  இடை பட்ட காலத்தில் இது ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் நடிகர்கள்.

யார் பெத்த பொண்ணுக்கோ கணவராக,  யாரோ ஒருவருக்கு மனைவியாக,  பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பனாக, பெற்ற தாய் தந்தையருக்கு மகனாக. மாமனாக, மச்சானாக, சகோதரனாக, சகோதரியாக  இப்படி பல வேடங்களை போடுகிறோம்.

நாடகம் முடிந்ததும் போகிறோம்.  இந்த ரகசியம் அறிந்தது பிரம்மா என்கிறார்கள். அந்த ரகசியத்தை முன் பிறவி என்கிறோம்.

கன்னி தீவு கதை மாதிரி கண்டுபிடிக்க முடியாத ரகசியம் ... முன் பிறவி ரகசியம் என்பதே. அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, அக்கினி நீருற்றை கடந்தது சென்றால்..கிளியின் உடம்புக்குள் இருக்கும் மந்த்திரவாதி உயிர் மாதிரி, பல்வேறு மர்மங்கள் நிறைந்தது முன் பிறவி ரகசியம்.

இதை அகத்தியர் தீர்த்து வைகைக்காமல் இல்லை.  தன் காலத்திலேயே ஓலை சுவடிகளில் இதை பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார்.

இப்போது பிறவி எடுத்திருக்கும் மனிதர்களில் யாருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே ஓலைகளில் எழுத பட்டு இருக்கிறது. 

இது உண்மையே. 

ஆனால் இதை ஒரு தொழிலாக கொண்டு  பலர் செய்யும்  தகிடு தித்தங்களை பற்றியும், இதை வைத்தே ஏமாற்றி பிழைப்பவர்களை பற்றியும் தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன். 

பொதுவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் கர்ம வினை கிரகம் என்கிற ராகு கேது முக்கியமானவர்கள்.  இதற்கு அடுத்த படியாக  குரு முக்கியமானவர். முதலில் ராகு கேது.

இருப்பது ஒன்பது கிரகங்கள்.  இதில்  ராகு கேது தவிர்த்து,  ஏனைய ஏழு கிரகங்களும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர கிரகங்கள் என்று சொல்லபடுகிறது. 

என்றாலும் இந்த ஏழு கிரகங்களும் தேவர்களே. மீதம் இருக்கும் ராகுவும் கேதுவும் அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள்.  இரக்க குணம் குறைந்தவர்கள், துர்சிந்தனை நிறைந்தவர்கள்.

இவர்கள் 1 . 7 இல் இருந்தால் நாக தோஷம் என்றும்,  5 . 9 இல் இருந்தால் பிரம்மகத்தி தோஷம் என்றும் சொல்ல படுகிறது.

அதாவது முன் பிறவியில் பாம்பு புற்றை உடைத்து,  பாம்புகளை அடித்து கொன்ற பாவம் இந்த பிறவியில் நாக தோஷமாக வருகிறது என்பார்கள்.  இந்த நாக தோஷம் என்பது ஜோடி பாம்புகளை கொன்றவர்களுக்கும், ஜோடி பாம்புகளில் ஒன்றை கொன்றவர்களுக்கும் வருகிறது.

அதனால் தான் திருமண வாழ்க்கை அமைய தடை,  மீறி அமையும் வாழ்க்கையில்  குழப்பம், கணவன் மனைவிக்கு இடையே  கருத்து வேறுபாடுகள்,  பிரிவினை, விவகாரத்துகளையும் தந்து விடுகிறது.

அதே சமயம் 5 . 9 இல் இருக்கும் பொது பிரம்மகத்தி தோஷம் என்று சொல்ல பட்டாலும்,  புத்திர சோகத்தை தருகிறது.  காரணம் குட்டி பாம்புகளை கொன்ற குற்றம்.

இப்பிறவில் குழந்தை பிறப்பில் தாமதம், பிறந்த பிள்ளைகளால் கவலை, பெற்றோரை மதிக்காத துர்குணம் கொண்ட பிள்ளைகள்,  பிறந்த பிள்ளைகள் அகால மரணம் என்று புத்திர சோகத்தில் ஆழ்த்துகிறது.

சரி.... அடுத்த தகவலுக்கு வருவோம்.

என்னதான் ரேகை கொண்டு சொன்னாலும்,  ஜாதகம் கொண்டுதான் பலன் சொல்லபடுகிறது.   ஜோதிட சாஸ்த்திரத்தில் குருவும், சூரியனும் சிவனை குறிக்கும் கிரகங்கள்.

இந்த சூரியனோடும், குருவோடும் சனியோ,  ராகுவோ, கேதுவோ பிறப்பு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால்,  அது ஒரு வகையான பிரம்மகத்தி தோஷம்.

அதாவது... முன் பிறவியில் சிவன் சொத்தை அழித்தவர்கள், சிவனடியார்களை  வதைத்தவர்கள்,  சிவ நிந்தனை செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பிறவியில் பல துன்பங்களை சந்திக்க வேண்டி வருமாம்.

மேலும் இந்த பிறவி தொடர்பாக ஒரு தகவலும் உண்டு.

உதாரணமாக பரணி  நட்சத்திரத்தில் ஒருவர் பிறப்பதாக வைத்து கொள்வோம்.   அவரின் ஆரம்ப திசை சுக்கிர திசையாக அமையும்.  சுக்கிர திசை என்பது ௨௦ வருடம் கொண்டது.

ஆனால் அவர் பிறக்கும் போது இருப்பு  திசையாக  5 வருடம் 6 வருடம் அல்லது 10 வருடம்  என்று குறைந்த அளவே தசையாக வருகிறது.

காரணம் என்ன?

முன் பிறவியில் பெற்ற ஜென்மாவில் அவரின் இறுதி காலத்தில் சுக்கிர திசை நடப்பில் இருந்த போது தான் இறந்து போனார்.  சுக்கிர திசையின் மொத்த வருடமான 20 வருடத்தில்,  இறக்கும் போது இருந்த மீதம் என்னவோ, அதையே  இப்பிறவில் மீதமுள்ள திசையாக கொண்டு பிறந்த்திருப்பார் என்பது ஜோதிட ரகசியம்.

நாடி ஜோதிட பிரகாரம் குரு தான் அந்த ஜாதகரை குறிக்கும் கிரகம்.  இப்போது அவர் ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதற்கு முதல் வீட்டில்  சென்ற பிறவியில் குரு இருந்திருப்பார்.  மற்ற கிரகங்கள் மாறாது.

ஒருவர் சென்ற பிறவியில் எந்த குலத்தில் பிறந்தார் என்பதை,  இப்போதைய சந்திரன் இருக்கும் இடத்திற்கு 5 ம் இடமே சொல்லும்.

ஒருவர் மீன ராசியில் பிறந்தால்,  அவர் ராசி படி 5 ம் இடமாக கடகம் வருகிறது,  அந்த வீட்டற்கு உரிய கிரகம் சந்திரன் வருகிறார்.

சந்திரன்  கடல் கடந்த வாணிபத்தை குறிப்பவர்.   அதாவது வியாபாரம் செய்யும் குடும்பம்.   ஆக ஜாதகர் வைசிய குலத்தில் பிறந்திருப்பார்.

அந்த வகையில் கீழ்காணும் வகையில் அட்டவணை அமையும். இது நாடி ஜோதிட விதி.

நீங்கள் பிறந்த ராசிக்கு 5 ம் இடமாக .......

மேஷம்,  தனுசு  - சத்திரிய குலம்.   அதாவது அரச வம்சம், ஜமீன் பரம்பரை, அரச நிர்வாக அதிகாரிகள் போன்ற குலத்தில் பிறந்தவர்.

ரிசபம், கடகம், கும்பம், மீனம், வைசிய குலம்.  அதாவது... வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.

மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம்  பிராமண குலம்.  அதாவது கோவில் பூஜை  மற்றும் புரோகிதம் செய்யும் குலத்தில் பிறந்தவர்.

கன்னி துலாம்  சூத்திர குலம்.

இங்கே சொல்லப்படும் சூத்திர குலம் என்பது, உழைப்பாளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும்.  அவரின் தாய் தந்தையர் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதும் புலனாகிறது.

ஜோதிர் லிங்கங்களாக அருள் புரியும் திருத்தலங்கள்

ஆதியும் அந்தமும் இல்லா சிவபெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்கள் ஏராளம் இருந்தாலும், ஜோதிர் லிங்கங்களாக அருள் புரியும் திருத்தலங்கள் 12 ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க திருத்தலங்கள்


12 ஜோதிர் லிங்கம்

12 ஜோதிர் லிங்கம் திருத்தலங்கள்

ஐயப்பன் அவதரித்த வரலாறு வாபர் தர்கா

 
                                     
               மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.
எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.
ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.
மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.
மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.
மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.
ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

                                                        வாபர் தர்கா
                                  


     ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு
 
வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.
ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.
அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
 

Wednesday, 2 April 2014

இஸ்லாமிய புனிதத்தலம் நாகூர் தர்கா

                                                   நாகூர் தர்கா

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் நாகூர் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய புனிதத்தலம் நாகூர் தர்கா. இது 500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. இது ஹஸ்ரத் சய்த் ஷாகுல் ஹமீத் க்வாதீர் (நாகூர் ஆண்டவர்) என்ற இஸ்லாமிய புனிதரின் கல்லறை ஆகும். இந்த தர்கா ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது மேற்பகுதி தங்க கூரையையும், ஐந்து ஸ்தூபிகளையும் கொண்டு விளங்குகிறது.
 
                 இஸ்லாமிய புனிதரான ஹஸ்ரத் சய்த் ஷாகுல் ஹமீத் க்வாதீர் உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தியாவிற்கு அருகிலுள்ள மானிக்காபூர் என்ற இடத்தில் கி.பி. 1491 - இல் பிறந்தார். உலகம் முழுவதும் சென்று இஸ்லாமிய சமயத்தைப் பரப்பிய இவர் தன் இறுதி நாட்களை நாகூரில் கழித்தார். அப்போது தஞ்சாவூரை ஆண்டுவந்த அச்சுதப்பா நாயக்கன் என்ற மன்னனின் நோயை இவர் குணப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அம்மன்னன் சுமார் 30 ஏக்கர் நிலத்தை அளித்தார். அந்த இடத்தில் தான் தற்போது தர்காவும், பிற கட்டிடங்களும் அமைந்துள்ளன. கி.பி. 1559 - ஆம் ஆண்டு இறைபதம் சேர்ந்த புனிதரின் உடல் இந்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது மகன் மற்றும் மருமகளின் சமாதிகளும் அருகிலேயே உள்ளன. பின்னாளில் தஞ்சாவூரை ஆண்ட துளசி மகாராஜா என்ற மன்னர் இந்த தர்காவின் பராமரிப்பிற்காக 4000 ஏக்கர் நிலத்தை வழங்கினார்.
 
                 அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் அவரால் செய்யப்பட்டு வந்த அதிசயங்கள் அவருடன் நின்றுவிடாமல் இன்றும் தொடர்கிறது. இங்கு ஆண்டுதோறும் 14 நாட்கள் கொண்டாடப்படும் கந்தூரி விழா நாகூர் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இவ்விழாவில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்
 
 
                                           நாகூர் கந்தூரி விழா

தர்கா வரலாறு:

நாகூர் நாயகம் மறைந்ததும் அவரது புதல்வர் தனது மனைவி, மக்களுடன் அங்கு குடித்தனம்
நடத்தி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருந்ததோடு
நாயகத்தின் கஃப்ரை சுற்றி பலகையால் பள்ளி போல் அடைத்தார்கள். அந்தப்பள்ளியே இன்று
அழகிய ஐந்து மினாராக்களை( கோபுரம்) உடையதாய் விளங்குகிறது.
முதல் மினாராவை இப்ராஹீம் கான் என்பவர் ஹிஜ்ரி ஆயிரத்து ஐம்பத்தைந்தாம் வருடம்
கட்டினார். இதற்கு சாகிபு மினாராவென்று பெயர். இரண்டாம் மினாராவை செய்யது மரைக்காயர்
கட்டிக் கொடுத்தார். இம்மினாரா நாயகத்தின் தலைப் பக்கம் இருப்பதால் தலைமாட்டு மினாரா
எனப்படுகிறது. இந்த மினாராவில் இந்து அன்பர் ஒருவர் சின்ன தங்கக் கலசத்தை அமைத்துக்
கொடுத்துள்ளார்.
மூன்றாம் மினாரா( முதுபக்கு மினாரா) மலாக்காவை சேர்ந்த பீர் நெய்னா என்பவராலும்,
நான்காம் மினாரா (ஓட்டு மினாரா) பரங்கிப்பேட்டை நீதிபதி தாவுக்கான் என்பவராலும்,
ஐந்தாம் மினாரா(பெரிய மினாரா) தஞ்சையை ஆண்டுவந்த பிரதாபசிங்கு மன்னனாலும் கட்டிக்
கொடுக்கப்பட்டது. பெரிய மினாரா 131 அடி உயரம் கொண்டதாகும்.
நாகூர் தர்கா ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. சக்கரவர்த்தி சுல்தான் துல்கர்னைன்
கட்டிய முதுபக்கு(1). இந்த ஸ்தலத்தில் தான் நாயகம் மரணித்தார்கள். இந்த ஸ்தலத்தில் உள்ள
அற்புதக்கேணியின் தண்ணீரை புண்ணிய தீர்த்தம் என்று கருதி பக்தர்கள் எடுத்து செல்லுகின்றனர்.
நாயகத்தின் இறந்த உடலை குளிப்பாட்டி யாஹ§சைன் பள்ளி(2).இது முதுபக்குக்கு வெளியில்
தென்புறத்தில் இருக்கின்றது. நாயகத்தின் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் தேங்கி நின்ற சிறிய
குட்டை தான் தர்கா குளம்(3). குட்டை போலிருந்ததை அச்சை சுல்தான் பெருங்குளமாக வெட்டி
தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தான்
.
தர்காவில் இருக்கும் பீர்மண்டபம்(4). திருவிழாக்காலங்களில் பீர் சாயபு என அழைக்கப்படும்
தபோதனர்கள் 3 நாள் உபவாசம் இருந்து நோன்பு திறந்துவிட்டு பீர்மண்டபத்தில் வந்து அமர்வர்.
நாயகம் திருமுடியிறக்கிய கடற்கறை ஓரம் தான் சில்லடி(5) என்ற ஆலயம் இருந்து வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவும் நடந்து வருகிறது.
நாயகம் அவர்கள் 40 நாள் இறைதியானம் இருந்த புன்னிய ஸ்தலம் வாஞ்சூர் பள்ளிவாசல்(6). இது
நாகூரிலிருந்ஹ§ 21/2 மைல் தொலைவில் உள்ளது.
ஹஜ்ரத் ஷாஹ¨ல் ஹமீது பாதுஷா ஆண்டவர்களின் சன்னதி 7 வாயில்கள் கொண்டது. இவை
அனைத்தும் வெள்ளித்தகட்டால் வேயப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கான
குத்துவிளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்நிதிக்குள் எந்த மதத்தினரும் செல்லலாம்.
இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி கடைசி மூன்று வாசல்களை கடக்க மட்டும் பெண்களுக்கு
அனுமதியில்லை. நாகூர் ஆண்டவர், அவரது மகன் முகம்மது யூசுஃப், மருமகள் செய்யிதா சுல்தான்
பீவி அம்மாள் ஆகியோரின் சமாதிகள் உள்ளே அமைந்துள்ளது. நாகூர் ஆண்டவர் இடுப்பில்
கட்டியிருந்த இரும்புச்சங்கிலி, குமிழ்கள் இல்லாத காலணி, அதிசயம் நிகழ்த்திய கொம்புத்
தேங்காய ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அரபி மாதம் ஜமாத்துலாகிறு பிறை 1&ல் தர்காவில் கொடியேற்றத் திருவிழா நடக்கும் பிறை 10ம்
நாள் இரவு நாகையிலிருந்து அதி விமரிசையாக சந்தனக்கூடு புறப்பட்டு வந்து ஆண்டவர்கள்
சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பிறை 11&ல் பீர் ஏகுதல் நடைபெற்று 14&ம்
இரவு இறுதிக்கட்டம் அடையும். இந்த திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் கலந்து
கொள்கின்றனர். நாகூர் சமாதியில் போர்த்தப்படும் சால்வை, மலர்ப் போர்வை பழனியைச்
சேர்ந்த ஒரு இந்துக்குடும்பத்தாரால் இன்றளவும் கொண்டுவரப்படுகிறது. நாகூர் தர்காவை
நாயகத்தின் வாரிசுகளான சுமார் 640 குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர். தர்காவுக்கு வரும்
காணிக்கைகளே இவர்களுக்கு வருமானமாகும்.
அனைத்து மதத்தினருக்கும் அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார் நாகூர் ஆண்டவர்.
                    

கீழக்கரை ஏர்வாடி தர்கா அற்புதங்களும் தர்கா வரலாறும்


கீழக்கரை தர்கா
 
அலை புரளும் கடல் அருகே அருள் நிறைந்து அமைந்துள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு அடக்கமாகி உள்ள முஸ்லிம் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லாவின் அருளால் ஏர்வாடி தர்காவில் அன்றாடம் அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகிறது. இந்த தர்காவுக்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் பெருமளவு இந்துக்க ளும், பிற மதத்தினரும் திரண்டு வருகின்றனர். இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு வந்து குவியும் நோயாளி கள், குறிப்பாக மனநோயாளிகள் பில்லி, சூனியத் தால் பாதிக்கப்பட்டோர், திருமணம் தடைபடுவோர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் என அனைவரும் அதிசயதக்க வகையில் மகானின் அருளால் குறை நீங்கி செல்கின்றனர்.


      மகான் இபுராகீம் ஷகீது வரலாறு

மகான் இபுராகீம் ஷகீது கி.பி.1137ம் ஆண்டு நபிகள் நாயகத்தின் 18ம் வாரிசுகளான செய்யது முகமது-செய்யது பாத்திமா தம்பதியின ரின் புதல்வராக பிறந்தார். அரபு நாட்டில் மதினாவில் மன்னராக வாழ்ந்து வந்தவர் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா. தனது 13வது வயதினிலேயே திருக்குரானை மனதில் பதியம் போட்ட இவர் இறை வனின் நாட்டப்படி கி.பி.1163ல் அரச பதவியை துறந்தார். அதன் பின்னர் அவர் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய மார்க்கத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு ஈராக், ஈரான், பாகிஸ்தான் வழியாக சுமார் 3,000 தொண்டர்களுடன் இந்தியா வந்தார். அவர் தன் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்து மார்க்க பிரசாரம் செய்தார்.
இந்தியாவில் முசிறி துறைமுகத்தை அடைந்த பாதுஷா நாயகம் புன்னைகாயல் சென்றார். அதனை தொடர்ந்து இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிக்கு தன் அமைச்சர்கள், பிரதானிகள் மற்றும் படை பட்டாளத்தோடு வந்தார். ஏர்வாடியில் நடந்த போரில் ஒலியுல்லா வின் மகன் செய்யது அபுதாகீர் உள்பட பலர் மரணம் அடைந்தனர். இதன்பின் மகான் சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா இன்று ஏர்வாடி என்று அழைக்கப்படும் அன்றைய பவுத்திர மாணிக்க பட்டினத்தை தலைநகராக கொண்டு 12½ ஆண்டுகள் அரசாட்சி நடத் தினார். இதன் பின்னர் நடந்த போரில் அவர் தியாக மரணம் அடைந்தார். அவர் மற்றும் உடன் வந்த பலர் தியாக மரணம் அடைந்ததால் அவர்களின் சமாதிகள் தர்கா பகுதியில் உள்ளன. இதில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லாவின் சமாதி (மக்பாரா) பிரதான தர்காவாக உள்ளது. அன்று முதல் இன்று வரை இவரின் அருளால் ஏர்வாடி தர்கா ஆன்மிக அருள்நிறைந்த புண்ணிய பூமியாக உள்ளது.


                              சந்தனக்கூடு

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்த தர்காவில் இந்த ஆண்டு 841வது உரூஸ் எனப்படும் சந் தனக்கூடு திருவிழா  இரவு தொடங்கி அதிகாலை வரை சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் விழா என்பதற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூட்டை தாங்கும் அடித்தளம் ஆசாரி சமூகத்தினரால் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். அடிக்கூடு, நடுக்கூடு, மேல்கூடு ஆகிய கூடுகளை யாதவர்களும், ஆதிதிராவிடர்களும் தர்காவில் இருந்து தூக்கி வந்து அடுக்கடுக்காக வைத்து அலங்கரிப்பார்கள். முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மனமுவந்து  கொண்டு வரும் கடல் நீரை கொண்டு தர்கா சுத்தம் செய்யப்படும்.

சம்பிரதாயப்படி தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதி திராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி சந் தனக்கூடு வழிகாட்டியாக அமைத்து கூடு புறப்பட தயார் நிலையில் வைப்பார்கள். ஏர்வாடியில் இருந்து யானைகள், குதிரைகள் பவனி வர மேள தாளம், ஆடல்பாடல், வான வேடிக்கைகளுடன் ஊர்வலம் தர்காவை நோக்கி வரும். ஏர்வாடியில் இருந்து காட்டுப்பள்ளி தர்கா போகும் வழிவரை யாதவர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை தூக்கி வருவார்கள். அங்கிருந்து தர்கா வரை முத்தரையர் சமூகத்தினர் தூக்கிவருவார்கள். இவ்வாறு அனைத்து மதத்தினரும் ஒன்றாக இந்த விழாவை கொண்டாடுவது காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். தர்காவிற்கு கொண்டு வந்த சந்தன சொம்பை மார்க்க அறிஞர்கள் பாத்தியா ஓதிய பிறகு மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷகீது ஒலியுல்லா மக்பாராவில் (சமாதி) சந்தனம் பூசுவார்கள். சந்தனக்கூடு திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அனைத்து மத பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.

                             

Tuesday, 1 April 2014

செய்வினை வைப்பவனே அறியாதது

 

பண்டைய தமிழர்கள் ஆதிகாலம் தொடக்கதிலிருந்தே வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம், பூகோள சாஸ்திரம் என்று புகுந்த இடத்தில் எல்லாம் புகுந்து விளையாடிய தமிழனுக்கு

ஆரம்ப காலத்தில் யுத்த நாட்களின் போது எதிரி பாசறைகளில் இந்த அம்பிறியை(ரத்தக்காட்டேறி)அலையவிட்டுஎதிரிகளை கிலிகொள்ளவைத்தான் தமிழன். இப்போது என்ன செய்கிறான்? மலிவு விலையில் ஒரு காணியை வாங்குவதற்கு இந்த அம்பிறியை குறித்த காணியில் ரத்தகாட்டேரியாக அலையவிட்டு அந்த காணியின் விலையை அடிமாட்டு விலைக்கு வாங்க பயன்படுத்துகிறான்.

                                            இந்த செய்வினைகளை விஞ்ஞான செயற்பாடுகளாக ஆரம்ப கால தமிழர்கள் , அதாவது இதன் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களது வழிவந்த சில சிஷ்ய கோடிகளும் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள். தொழில் ரகசியம், தொழில் பாதுகாப்பு போன்ற காரணங்களால்  இதன் உண்மையான பொறிமுறை ரகசியங்களை பின்வந்த தலைமுறைக்கு சொல்லித்தராத காரணத்தால் பின்னாளில் இது வெறும் அனுமானுஷ சக்திகளின் வேலை என்று ஆகிப்போனது

கி.மு 14000ம் ஆண்டுக்கு முன்னர் குமரிக்கண்டத்தில் கபாடபுரம் தலைநகராக இருந்தபோது , பாண்டியனின் அரசவையில் அறிஞராக இருந்த சிறுகூடல் பாணன் என்பவரது குறிப்பேடான "கோன் கருங்காப்பு" அதாவது கோன் என்றால் அரசன் , கருங்காப்பு என்றால் அவனது எல்லைகளை கறுப்பு விஞ்ஞானத்தால் காப்பது என்று பொருள் படும். இந்த குறிப்பில் தான் சில செய்வினை செய்யும் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.மறுபடியும் சொல்கிறேன் , உங்களது நன்மை கருதியும் , பிறர் நன்மை கருதியும் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.

சரி இப்போது அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்வினையின் செயல்முறைக்கு வருவோம், ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய் நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை ரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.

இப்போது ரத்த காட்டெரி என அறியப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர்"அம்பிறி". இந்த அம்பிறிதான் மருவி ரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.

சரி இந்த அம்பிறியை, அதுதாங்க ரத்தகாட்டேறியை கொண்டுவரும் வழிமுறையை பார்க்கலாம். இந்த எலுமிச்சை  அதில கொஞ்சம்,குங்குமத்தில் கொஞ்சம், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள் கொஞ்சம் குங்குமம். அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து கீழ்வரும்


உச்சாடனத்தை 108x3தடவை ஓத வேண்டும்\

ச்ர்ரி யாகி மாத் துகா ஸி
ஸரி ஸிகா மது காதி இஸ் ஸீ
ஓம் மியாகா டது வியா
ஸியா லிகீ தமூ ஸரி
திவ் தகி கிறீம் நது வி கா
அம்றி சிகா சர்ரி யாகி மாத் துகா ஸி
தவா ஓம் மியாகா டது வியா

இந்த உச்சாடனத்தை தொடர்ந்து 324தடவை ஓத வேண்டும். ஓதும் போது அத்தனை சொற்களும் அரை மாத்திரை வடிவில் வரும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஸ்,ஸி சொற்கள் வரும் போது ரெண்டு மாத்திரை வரும்படி பார்த்துக்கொள்ளுதல் அவசியம். இவற்றை சொல்லிக்கொண்டு
 இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குன்க்குமத்தை தடவி தீயில் போடவேண்டும். பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும் கோழியின் இரத்தத்தை பூச வேண்டும். அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில் விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும்.இப்போது செய்வினை முடிந்தது. அந்த செய்வினை பூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.
 
அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், ஒரு பெண்ணின் உருவில், கிழவன் உருவில், கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.
 
இப்போது இந்த ரத்த காட்டேறியின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அதாவது "அம்பிறி' தாக்கத்தை பார்த்துவிடலாம்.


குறிப்பிட்ட அந்த மந்திரத்தை 324தடவை  தமிழின் அரை, மற்றும் இரு மாத்திரை அளவில் உச்சாடனம் செய்யும் போது காற்றலையில் "செரியா" என்றொரு எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது.  இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் .

இந்த "செரியா" எதிர் அலைகள் காற்றில் இருக்கும் போது எலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில் அடிப்படையிலேயே "பிறிம்மி" என்ற ரசாயணம் இருக்கின்றது. குங்குமத்திலும் "ஈகலி" என்ற ரசாயணம் உள்ளது, இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து தீயிலிடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம் "செரியா' எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை அலைக்கு "சொய்" என்று பெயரிட்டுளான் பண்டை தமிழன்.

இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற 'பன்ம" என்கிற செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்கு கோழியின் இரத்தத்தில் இருக்கின்ற "ஆடுடவிக்" என்ற ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது. எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான "சொய்" எதிரலைகள் அந்த பூசணிக்காயின் "பன்ம' செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ரான்ஸ்போர்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.

இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்கவேணுமே! அதுக்கு தான் இந்த விபூதி இருக்கிறது. விபூதியில் இருகின்ற "சரகாம்" என்ற வேதியல் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை தான் அந்த குடும்பத்தின் மீது தெளிக்கவும் அந்த அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது.

இப்போது "சொய்" என்ற வலுவான அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும் ஆட்டம் ஆரம்பமாகின்றது. ரத்த காட்டேரி தயார்! அவனவன் கண்ணுக்கு நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண்போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் ஏதோ ஒன்று தொடர்பில் உச்சா போகும் அளவுக்கு பயம் இருக்கும். அது நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் இளம் மோகினி, கிழவி எதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த "சொய்" எதிரலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த 'சொய்" அலைகளின் பிரதான வேலை.
 
அதிகபட்சமாக இந்த அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்புகளை வலுவிழக்க செய்யக்கூடியது, விளைவு வாயாலும் , மூக்காலும் ரெத்தம் வரும். இப்போது புரிகிறதா செய்வினை ரத்தகாட்டேரி ஒருவனுக்கு அடிப்பது எப்படி என்று.இப்போது ஒரு கேள்வி, அது எப்படி பகலில் அடக்கி வாசிக்கும் இந்த இரத்தகாட்டேரி இரவில் மட்டும் அடிப்பது எவ்வாறு
 
 இரவு என்றால் சாதாரணமகவே அனைவருக்கும் பயம் இருக்கும். எனவே இரவில் இந்த அலைகள் அதிகம் செயல்படும் வகையில் சூத்திரத்தை வகுத்தான். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த சொய் அலைகள் தாக்கம் அடையும் போது தான் இதன் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த சொய் அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்பிறியை" ஒரு இரவில் பயங்கரமாக அலைகின்ற ரத்தகாட்டேரியாக உருவாக்கினான்.
 
இது தான் ரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம். இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் ஒழிந்துகொண்டிருக்கிறது. இதை செய்வினை வைப்பவனே அறியாதது நமது துரதிஷ்டம்.