உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Friday, 16 May 2014

சாத்திர மச்ச யோக பலன்கள்

       1.இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
2. நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
4. வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
5.வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
6.வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
7. இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
8. இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
10. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
11. இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
12 இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
13 மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
14. மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
15. மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
16. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
17. மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
18. நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
19. மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
20. மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
21. மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
22. மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
23. வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
24. இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
25. வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
26. இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
27, இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
 28,தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
29. கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
30. கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
31. இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
32. வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
33. மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
34. வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
35. வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
36. வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
37. தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
38. வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
39. வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
40. இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்
41. முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
42. முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
43. முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

Thursday, 8 May 2014

பஞ்சாட்சரம் மூன்று விதம்

மூன்று  வித பஞ்சாட்சரம்
 
                                    ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

                                    சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம

                                    காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ

                       ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

நமசிவய என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

                                 ந – நிலத்தைக் குறிக்கிறது,
                                 ம – நீரைக் குறிக்கிறது,
                                 சி – நெருப்பைக் குறிக்கிறது,
                                 வ – காற்றைக் குறிக்கிறது,
                                 ய – ஆகாயத்தைக் குறிக்கிறது


ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி

ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி

சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி

வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி

 ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி


                               சூட்சும பஞ்சாட்சரம்

சிவய நம என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே


திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே

சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...


                           காரண பஞ்சாட்சரம்

 சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

             “சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
              சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
              சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
             சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

 

Thursday, 24 April 2014

கோயில்களில் செய்யக்கூடாதவை

 
காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்கள்
கோயில்களின் கீழே அதுவும் இந்த கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும்  இது அந்த சக்தியை வீண் செய்யாமல் சக்தியை  பன்மடங்காக்கி வெளிக் கொண்டு வரும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு கிடைக்கச் செய்யும். கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்தியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்தி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித நேர்விசை மின்சார சக்தி சொர்ணாபிஷேகம் இந்த சக்தியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும்.
 
1.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

2.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

3.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

4.பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.

5.பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது.

6.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.

7.மூர்த்திகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.

8.சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

9.வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.

10.பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது

வீடுகளில் செய்யக்கூடாதவை

1.இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக் கூடாது.

2.அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.

3.சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது

4.தன்னுடைய ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது

5.ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.

6.தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.

7.இடது கையினால் ஜலம் அருந்தக்கூடாது

Saturday, 19 April 2014

அர்ச்சனை செய்யக் கூடாதது***



விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.
விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.
 (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் அர்ச்சனைசெய்யலாம்.)
பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.

தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.பரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.

Thursday, 17 April 2014

மோசடி ஆஸ்ரமங்களும் பலரை வாழ வைக்கும் ஆஸ்ரமங்களும்

 
இந்த பதிவு நம்மீல் பலர் ஆன்மீகம் என்ற பெயரில் பொருளை  இழந்து  மன நிம்மதி இழந்து மோசடி ஆஸ்ரம ஏமாற்று ஆன்மீகவாதிகளிடம்  சிக்கி சீரழியும்  அப்பாவி  நல்ல ஏமாரும்  இதயங்கலுக்கு  
 
பலரை வாழ வைக்கும் ஆஸ்ரமங்கள்;
 
நான் என் அனுபவத்தில் பல ஆஸ்ரமங்களை பார்த்து இருக்கிறேன்  அந்த ஆஸ்ரமத்தை நடத்தும் நல்ல இதயங்கள் தங்கள் வாழ்க்கையை முதியோர்,  ஊனமுற்றோர்,அனாதை, அனாதை குழந்தைகள்.என்று தங்கள்
வாழ்நாளை அற்பணித்து நேர்மையான முறையில் (நேர்மை" எங்கு, எவரிடம் காணப்படுகின்றதோ அவருக்கு மாந்தரிடையே என்றும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.) தன் சுய கவுரவம் பார்காமல் தனக்கு ஏற்படும் அவமானங்களையும் பொருட்படுத்தாமல் பிறர் நலமே தன் நலம் என்று வாழ்பவர்கள் மனிதரில் மாணிக்கம். பிறர்   செய்யும் பொருள் உதவி மற்றும்  அன்னதானம்  போன்றவற்றை  இயலாதவர்களுக்கு எந்த சுயநலமும்  இன்றி  கிடைக்க செய்கின்றனர் (இவர்கள்  நடமாடும் தெய்வங்கள் )  
 
 
மோசடி  ஆஸ்ரமங்கள்; ( ஏமாற்றி பிச்சை எடுப்பவர்கள்) 
 
தற்பொழுது திரும்பும் இடங்களில்  எல்லாம் ஆஸ்ரமங்கள் நேற்று தாய்யிடம்
பால் குடி  மறந்தவன்  எல்லாம் இன்று   ஸ்வாமிகள்,  வசிய மை, பாதாள மை, பெண்கள் பின்னால்.வரும் மை, முன்னால் போகும் மை,  தான். என்ன மனதில்
நினைக்கிறானோ அப்படியே இனய தளங்களில் எழுதுவது, பிரச்சனையில் 
உள்ளவர்கள் (எதை தின்றால்  பித்தம் தீரும் என்று இருப்பவர்கள்) இவர்களிடம்  
 தன்  குறைகளை  கூறினால் ஒரு   அரை மணி  நேரத்தில் எனக்கு போன் செய்யுங்கள்
தெய்வங்களிடம்  உத்தரவு  கேட்டு  சொல்கிறேன். சித்தரிடம்  கேட்டு  சொல்கிறேன்
என்று  புருடா விடுவது (இந்த பிரபஞ்சத்தில் தெய்வங்களுக்கும் , சித்தர்களுக்கும் 
எப்பொழுது  பால் குடி  மறந்தவன் நம்மை அழைப்பான் என்று காத்து கிடப்பதாக ஏமாற்றுக்காரர்களுக்கு
 நினைப்பு )  பிறகு தங்களுக்கு தோஸம் உள்ளது அதற்க்கு சில யாகங்கள்
 எங்கள்    ஆஸ்ரமத்தில்  செய்வேண்டும்  அதற்க்கு  இவ்வளவு  செலவாகும்   
 இந்த பணம்  ஆஸ்ரம நிதிக்கு   என்று   புருடா  விடுவது 
(தன்னுடைய  மனைவிக்கும்  பிள்ளைகளுக்கும் சொகுசாக இருப்பதற்க்கு  பிச்சை 
எடுப்பது )    இவர்கள்  ஒரு தர்மகாரியங்களும்  செய்யமாட்டார்கள்  இவர்களுக்கு
தாயத்து  பற்றியும் தெரியாது  எந்திர  தகடுகள் பற்றியும் தெரியாது   கடையில் 
விற்க்கும்  மந்திர தந்திர புஸ்தகங்களை  வாங்கி  வைத்து  கொண்டு கதை
விடுவது மொத்ததில் இவர்கள் நூதன பிச்சைகாரர்கள் . இனய  தளங்களில்
வெளியாகும்  மந்திர தந்திரங்கள்  அனைத்தும் உண்மை அல்ல  உண்மை தெரிந்தவர்கள் புனிதமான மந்திரங்களை  பொதிவில் பகிரமாட்டர்கள்
அஸ்ரமங்களை  நம்பி ஏமாறுவதை விட்டு விட்டு கோவில்களுக்கு
செல்லுங்கள்   உங்கள் கைகலால் அன்னதானம் செய்யுங்கள் மன நிம்மதி  
கிடைக்கும்  இது சத்தியமான  உண்மை.   பொய் கவர்ச்சியாக தான் இருக்கும்
 உண்மை மறைந்தே   இருக்கும்

Sunday, 13 April 2014

பித்ரு தோஷம், பித்ரு சாபம்

நம்மில் பலரது வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது.ஆனால்,ஜோதிடர்கள் பலரிடம் நமது ஜாதகத்தைக் காட்டியிருப்போம்;எல்லோருமே சொல்லி வைத்தாற்போல,உங்களுக்கு அந்த யோகம் இருக்குது;நீங்கள் கோடீஸ்வரன் தான் என்று புகழ்ந்து தள்ளியிருப்பர்.இருப்பினும் நமது கஷ்டங்கள்,சிரமங்கள்,வேதனைகள் நமக்கு மட்டும் தானே தெரியும்?
 
நம்மில் பலர் யாருக்கும் தீமை செய்யாதவராகவே இருக்கிறோம்.நாம் உண்டு;நமது வேலை உண்டு என்றுதான் இருக்கிறோம்.காதலில் கூட ஒரே ஒருத்திகூட வாழவேண்டும் என்றே ஆசைப்படுகிறோம்.நிம்மதியும்,செல்வ வளமும் நமது லட்சியங்களாக இருப்பினும் ,பல கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக்கியிருந்தாலும்,பல அன்னதானங்களை செய்திருந்தாலும்,ஏதாவது ஒரு மந்திரத்தை தினமும் ஜபித்துக்கொண்டிருந்தாலும் வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவே சென்று கொண்டிருக்கிறது.இதற்கான காரணத்தை ஒரு சில திறமையான ஜோதிடர்கள் மட்டுமே கணித்துச் சொல்ல முடியும்.
 
ஒருவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்,அவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்றே அர்த்தம்.இராகு என்பது அப்பாவழி முன்னோர்களைப் பற்றியும்,கேது என்பது அம்மாவழி முன்னோர்களையும் விவரிக்கும் கிரகங்கள் ஆகும்.
 
ஒருவரது பிறந்த ஜாதகத்தில் ராகு ஐந்தாமிடத்தில் இருந்தால்,அவர் தன்னலம் கருதாதவராக இருப்பார்;ஆனால்,இவரது உதவியால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் இவரை சிறிது கூட சீண்டமாட்டார்கள்;அதே ஐந்தாமிடத்தில் கேது இருந்தால்,இவர்கள் தனது குடும்பத்தாரினாலேயே புறக்கணிக்கப்படுபவராக இருப்பார்;இவர் ஊருக்கு உபகாரியாக இருப்பார்;வீட்டில் இவருக்கென்று சிறிதும் மரியாதை இராது.நாம் ஏன் எல்லோருக்கும் நல்லது செய்தும் கூட நமக்கு எவரும் நல்லது ஒன்றுகூட செய்வதில்லை என்ற ஏக்கம் எப்போதும் இவர்களை வாட்டும்.
 
இதுவே லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் ராகு இருந்தால்,இவருக்கு அப்பாவழி முன்னோர்களின் பிள்ளைகள் விரோதிகளாக இருப்பர்;அல்லது அப்பாவழி பூர்வீக சொத்துக்கள் அழிந்து போயிருக்கும்;அல்லது பூர்வீக சொத்து தொடர்பாக வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.எவருக்கும் உரிய பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது;கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமான சொத்துக்கள் இருந்தாலும் இதே சூழ்நிலைதான்!
லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்,அந்த ஜாதகருக்கு அம்மா மற்றும் அப்பாவழி முன்னோர்களின் பித்ரு சாபம் இருப்பதாக அர்த்தம்.