உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.

Wednesday, 26 February 2014

அஷ்டகர்மங்களில் ஐந்தாவது ஆக்ருஷணமாகும்



 
ஆக்ருஷணத்தின் தேவதை வருணன் ஆவார்.
ஆக்ருஷணம் சித்தினால் நாம் நினைத்த எதையும் நம்மை
நோக்கி வரவழைக்கலாம்.
 
ஆக்ருஷணம் எட்டு உட்பிரிவுகளைக் கொண்டது

1)சர்வ ஆக்ருஷணம்
 
2)பூத ஆக்ருஷணம் 

   3)இராஜ ஆக்ருஷணம்

4)புருஷ ஆக்ருஷணம்

5)ஸ்திரி ஆக்ருஷணம்

6)மிருக ஆக்ருஷணம்

7)தெய்வ ஆக்ருஷணம்

8)லோக ஆக்ருஷணம் .

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்
 
ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஒரு தங்க தகட்டில் நவகோணம் போட்டு அதன் நடுவில்ஒரு வட்டம் போடவும் பின்னர்
அவ்வட்ட்த்தினுள் ஓம் என்று எழுதவும். எழுதிய அந்த யந்திரத்தை
பூசையில் வைத்து அதை சுற்றி அரளி மலர்களால் அலங்கரிக்கவும்.

பின்னர் உடல்மனசுத்தியுடன் செம்பட்டு ஆடை உடுத்தி வெள்ளாட்டு

தோலை விரித்து அதன்மீது வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து
கொண்டு மன ஓர்நிலையுடன்

"ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும் நமோபகவதிதேவி டங்டங் சுவாகா"

என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள்
 
செபித்தால் ஆக்ருஷணம் சித்தியாகும்.
 
நோக்கமுடன் உச்சாடனத்தைச் சொன்னேன்மைந்தா
நுண்மையுடன் ஆக்ருஷணத்தி னுண்மைகேளு
பார்க்கமனக் கண்ணாலே நோக்கமாகி
பதிவாக ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும்
நமோபகவதிதேவி டங்டங் சுவாகாவென்று
தீர்க்கமுடனுருவேறக் கருவைக்கேளு
சிவசிவா நவகோணநடுவில்விந்து
மகத்தான விந்துநடு ஓமென்றூணே

உண்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
பேணியந்த மந்திரத்தைத் தினம்நூறப்பா
பிரியமுடன் தினம் நூறுருவேசெய்தால்
காணுமந்த ஆக்கிருஷ்ணந்தான் சித்தியாகும்
கருணையுட னினைத்ததெல்லாங் காணுங்காணும்
வேணுமிந்த ஆக்கிருஷ்ணந்தான் உலகத்தோர்க்கு
வேண்டிமிகச் சொன்னதிந்த விவரம்பாரே.
 
 

                              

 

 

 
 
                    
 
 
 
 

 

Tuesday, 25 February 2014

அஷ்ட கர்மங்களில் நான்காவதாக உச்சாடனம்


 
உச்சாடனம்
 
உச்சாடனம் சித்தியான பின்னர் மனதை புருவ நடுமையத்தில் நிறுத்தி பேய்,மிருகம்.அகாத மனிதர் முதல் எந்தவொரு தீயசக்தியும்
ஓரிடத்திலிருந்து விலக வேண்டுமென எண்ணினாலே அது
அவ்விடத்தை விட்டு விலகி ஓடிவிடும். உச்சான சக்கரத்தை
விட்டில் வைத்தால் அங்குள்ள தீய சக்திகள் ஓடி விடும்.
நோய் உள்ளவர்களுக்கு கட்டினால் அந்நோய் நீங்கி விடும்.
இது இருக்கும் இடத்தில் உள்ள சகல தீயசத்திகளும் விலகி விடும்
 
உச்சாடனம் எட்டுவகை
 
1)சர்வ உச்சாடனம்
 
  2)மிருக உச்சாடனம்


   3)சத்துரு உச்சாடனம்


4)தேவ உச்சாடனம்


5)விஷ உச்சாடனம்


6)ஸ்திரி உச்சாடனம்


 7)வியாதி உச்சாடனம்
 
                                              8) கண்காண உச்சாடனம்

                                                உச்சாடனம் மந்திரம்



 உச்சடனத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்.
இப்போது உச்சாடனம் எட்டுக்குமான மந்திரத்தை
சொல்கிறேன் கேள்,

"ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு தூக்கு தூக்கு டங் டங் சுவாகா"
இம்மந்திரத்தை செபிக்கும் முறையை சொல்கிறேன் கேள்,
உச்சாடன மந்திரத்தை ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்
மனசுத்தியுடன் பச்சைப்பட்டு உடுத்தி நீலக்கம்பளம் விரித்து
அதன்மேல் மேற்கு நோக்கி அமர்ந்து கொண்டுஒரு வெள்ளீயதகட்டில்
அறுகோணம் வரைந்து அதன் நடுவில் ஒரு வட்டம்போட்டு
அவ்வட்டத்தினுள் "டங்" என்று எழுதவும்.


பின்னர் நீ வரைந்த சக்கரத்தை உனக்கு முன்பாக வைத்து அதனை சுற்றி தும்பை பூவை வைத்து புங்க எண்ணெயால் விளக்கேற்றவும்.
பிறகு தேங்காய்,பழம்,பத்தி,சூடம்,சந்தனம் உள்ளிட்ட பூசை
பொருட்களை வைத்து மன ஓர்நிலையுடன் வேறு சிந்தைகள்
இல்லாமல்மேற்சொல்லிய மந்திரத்தை நாளொன்றுக்கு
100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் உச்சாடனம் சித்தியாகும்.



காணவே தம்பனத்தைச் சொன்னேன்மைந்தாகண்காண உச்சாடத்தைக் கருதிக்கேளு
பூணவே உச்சாடனந்தா னெட்டுங்கேளு
பூரணமாய் ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு
தூக்கு தூக்கு டங் டங் சுவாகாவென்று
தோணவே செபிக்கிறதோர் வகையைக்கேளு
துருவமுள்ள அறுகோணம் நடுவேவிந்து
பேணவே விந்தெழுதி விந்துக்குள்ளே
பிலமாக டங்கென்று பிலமாய் நாட்டே.

நாட்டமுடன் சக்கரத்தை முன்னேவைத்து
நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
தேட்டமுள்ள மந்திரத்தைத் தினம்நூறப்பா
சிந்தைமனங் கோணாமலுருவே செய்தால்
வாட்டமென்ன உச்சாடனந்தான் சித்தியாகும்
மகத்தான புருவமதில் மனதைநாட்டி
பூட்டறிந்து வாசியினாற் திறந்துமைந்தா
பொன்னுலகில் நின்று விளையாடுவாயே







                                






                      
 
 





 

 
    

Monday, 24 February 2014

அஷ்ட கர்மங்களில், மோகனம்

 


 
மோகனம் சித்தியானால் உன்னைகாணும் சகல ஜீவஜந்துகளும்,
மிருங்களும், மனிதர்களும் உன்னை கண்டமாத்திரத்தில் தனது
நிலைமறந்து ஒடுங்கி உன்மீது மோகம் கொள்ளுவர்.
மோகனத்தை சித்தி செய்தவர்களை சகலத்தையும் அவர்கள்
வசமாக்கி விடுவார்கள் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை
எனலாம்  மோகனத்தின் அதிதேவதை அக்கினிபகவான்
 
மோகனம் எட்டு வகை  

1)சர்வ மோகனம்
2)இராஜ மோகனம்
3)புருஷ மோகனம்
4)ஸ்திரி மோகனம்
5)மிருக மோகனம்
6)சொர்ண மோகனம்
7)சத்துரு மோகனம்
8)லோக மோகனம்

                           மோகனம் எட்டுக்கும் மந்திரம்

ஒரு திங்கள்கிழமை நாளில் ஒரு வங்கத்தகட்டில்
நாற்கோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் 'றீங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பூசையில் வைத்து முல்லை பூக்களை
சக்கரத்தை சுற்றி வைத்து எதிரில் நல்லெண்ணை தீபமேற்றி
உடல் மனசுத்தியுடன்மஞ்சள் நிற ஆடை உடுத்தி மாம்பலகையில்

தெற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மனஓர்நிலையுடன்
"ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகா" என்ற மந்திரந்தை
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபித்தால்
இம்மோகனம் எட்டும் சித்தியாகும். 


பாரப்பா வசியமென்ற யெட்டுஞ்சொன்னேன் 
பத்திகொண்டு மோகனத்தைப் பகரக்கேளு
நேரப்பா மோகனந்தானெட்டும் நன்றாய்
 நேர்மையுடன் நின்றாட மந்திரங்கேளு
காரப்பா ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகாவென்று
 கண்ணார செபிக்கிறதோர் வகையைக்கேளு
சாரப்பா நாற்கோணம் நடுவில்விந்து
 தானெழுதி றீங்கென்று சாத்திட்டாயே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
 தன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
போத்தியிந்த மந்திரத்தை தினம்நூறப்பா
 புத்தியுடன் தான்செபித்து நின்றாயானால்
பார்த்திபனே மோகனந்தானெட்டும் நன்றாய்
 பத்தியுடனுன் வசமாய்ப் பதிவதாகும்
கார்த்துநன்றாய்க் கருணைபெறச்சித்தி பெற்றால்
 கண்கண்ட தெல்லாமோகனமாம் பாரே.

பாரடா மோகனத்திற் பதிவாய்நின்று
 பத்தியுடன் தான்செபித்து சுத்தமானால்
நேரடா சகலசெந்து மிருகமெல்லாம்
 நேர்மையுடனுன் முகங்கண்டபோது
வீரடா தானொடுங்கி மோகமாகும்
 வேதாந்த பூரணமே தான்தானானால்
ஆரடா உனக்கு நிகரொருவருண்டோ
 அப்பனே மோகனத்தை யறிந்துதேரே.

 
                                              








                             








 

   

 

 
 
 

அஷ்டகர்ம பிரயோகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது மாரணம்

 
மாரணம் 8 வகை


1)சர்வ மாரணம்
2)அரச மாரணம்
3)சத்துரு மாரணம்
4)சர்வபூத மாரணம்
5)சர்வஜீவஜெந்து மாரணம்
6)சர்வவிஷ மாரணம்
7)சர்வதேவ மாரணம்
8)சர்வரிஷி மாரணம் என்பதாகும்.
 
 
 
 
 
மாரணம் எட்டுக்கும் மந்திரம்

ஆமப்பா பேதனத்தை நன்றாய்ச் சொன்னேன்
 அரகரா மாரணத்தினருமை கேளு
தாமப்பா சொல்கிறே மந்திரசித்து
 தனதாக ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங்
பிறீங் பிறீங் பிறீங் சுவாகாவென்று
 ஓமப்பா ஒருமனதாய்ச் செபிக்கக்கேளு
உறுதியுடன் சூலமிட்டு அடியிலேதான்
 நாமப்பா சொல்லுகிறோங் கம்மென்றேதான்
நாட்டமுடன் தானெழுதி நயனம்பாரே.

பாரப்பா நயனமென்ற சூலந்தன்னை
 பத்தியுடன் மானதமாய் பூசைபண்ணி
காரப்பா மந்திரத்தைத் தினம் நூறாக
 கண்ணார உருச்செபித்து கருணையானால்
நேரப்பா மாரணந்தா னிமிஷத்துள்ளே
 நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரே
தேரப்பா மனந்தேறி யறிவில்நின்று
 சிவசிவா மாரணத்தைத் தீர்க்கம் பண்ணே.

தீர்க்கமுடன் மாரணந்தான் சித்தியானால்
 தெளிந்துகொண்டு தன்னுயிர்போல் செகத்தைப்பார்த்து
மார்க்கமுடன் சிவயோக வாழ்வில்நின்று
 மைந்தனே பூரணத்தை தினமும்நோக்கி
ஏர்க்கையுடன் தானிருக்க வேண்டுமானால்
 இடும்பாக மாரணத்தைச் செய்ய வேண்டாம்
ஆர்க்கும்வெகு கொடுமைகளைச் செய்தபேரை
 அப்போதே மாரணிக்க அந்தந்தானே.
 
                               எந்திரம்
 
ஒரு வெள்ளித்தகட்டில் சூலம் வரைத்து அச்சூலத்தின்
அடிமுனையில் கம் என்று எழுதவும்.
 
 
பின்னர் ஒரு சனிக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன்
தூய்மையானஇடத்தில் கருமைநிற ஆடை அணிந்து தெற்கு
நோக்கி அத்திப்பலகையில்அமர்ந்து கொண்டு உன் எதிரில்
மேற்கூறியமாரண ந்திரத்தை வைத்து அதனைச்சுற்றி
கடலை மலர்களை வைத்து அதன் எதிரில் வேப்பெண்ணெய்
ஊற்றி விளக்கேற்றி வைத்து இதர பூசை பொருட்களையும்
வைத்துக்கொண்டு மன ஓர்நிலையோடு
"ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங் பிறீங் சுவாகா"
வென்று நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் செபிக்க
மாரணம் சித்தியாகும்.

மாரணம் சித்தியானால் தனக்கு வேண்டாத மனிதர், துன்பம்
செய்யும் விலங்கு, தீராத நோய்,தீங்கிலைக்கும் துஷ்ட தேவதைகள்,
அரச பதவியில் இருந்து கேடு செய்யும் பாவிகள் என யாவரையும்
அழித்து விடலாம்.
மாரணத்தை சித்தி செய்து விட்டோம் என்பதற்க்காக நல்லவர்க்கு
அதை தவறான வழியில் பயன்படுத்தினால் பெரும் பாவத்திற்க்கும்
 சாபத்திற்க்கும் ஆளாக வேண்டிவரும்.ஆதலால் இம்மாரணத்தை
யாரிடம் பிரயோகிக்க வேண்டுமென்றால் யாவர்க்கும் அதிக கெடுதல்
செய்யும் பாவிகளிடமும், கொடுர விலங்குகளிடமும் பயன்படுத்தி
அவற்றை அழித்து உலக உயிர்களை தன்னுயிர் போல் எண்ணி
அவர்களுக்கு நன்மை செய்வதற்க்காக இதை பயன்படுத்த வேண்டும்.
மேலும் இதை பயன்படுத்து முறைகளை சொல்கிறேன் கேளுங்கள்,
மாரண சித்தி செய்த பின்னர் இந்த எந்திரத்தை வரைந்து 108 உரு
கொடுத்து விலங்குகள், துஷ்டதேவதைகள் நடமாடும் வீடு,
தோட்டங்களில் ஸ்தாபித்து விட்டால் அவ்விடத்தை அவைகள்
 நெருங்காது. அப்படி நெருங்கினாலும் சுருண்டு விழுந்து விடும்,
தீராத நோய்வாய்ப்பட்டவர்க்கு மேற்க்கூறிய யந்திரத்தை

விபூதியில் வரைந்து 108 உருக்கொடுத்து அவ்விபூதியை அவர்கள்
பூசியும் சிறிது உண்டும் வர சொல்லினால் அவர்களின் உடலில்
உள்ள நோய்கள் நீங்கி விடும்.
உடலில் உள்ள விஷத்தன்மைகள் நீங்கவும் இம்மந்திரம் ஓதிய

விபூதியை கொடுக்க சரியாகி விடும்.
உலக உயிர்களுக்கு கேடு செய்யும் பாவிகளை அவர்கள் அழிந்து

போக வேண்டுமென எண்ணி இம்மாரண யந்திரத்தில் அவர்களின்
பெயரை தலைமாற்றி எழுதி அதல் அவர்களின் காலடி மண் அல்லது
முடி ஏதாவதொன்றை வைத்து சுருட்டி அவர்கள் நடமாடும் பகுதி
அல்லது சுடுகட்டிலோ அதை புதைக்க அவர்களுக்கு மூச்சடைக்கும்
உடலெல்லாம் எரியும் நிமிசத்தில் உயிர் பிறிந்து போகும்.
மேலும் சித்தகள் ரிஷிகள் தாங்கள் மறைந்து வைத்துள்ள புதையல் போன்றவற்றிக்கு மந்திரக்கட்டு
போட்டு இருப்பார்கள் அவர்களின் மந்திரக்கட்டை மாரணிக்க செய்து
அவைகளை நாம் அடைந்து விடலாம் இது ரிஷி மாரணமாகும் .
தீமை செய்யும் யாவரையும் அழிக்க வேண்டுமென்றால் உன் மூச்சை இழுத்தடக்கிக்கொண்டு இம்மந்திரத்தை மனதால் 3 முறை
செபித்தவாறு அவனை உற்று நோக்கினால் மதிமயக்கம் ஏற்ப்பட்டு
கிழே விழுந்து விடுவான் பின்னர் விழுந்தவன் எழவே மாட்டான்.
இவையெல்லாம் மாரணத்தின் ஆற்றலாகும் இதை நல்ல வழிக்கு
மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லாவிடில் கொடிய துன்பத்திற்க்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்,
 
 
          
   
 
 
 
                      
 
                          
                                        

Sunday, 23 February 2014

ஜின்,குட்டி சாத்தான் வசிய மந்திரங்கள்

 

 
 

                                         ஜின் வசிய   மந்திரங்கள்

'ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி
சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும்
என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை,
சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா
  '.


என்று நாளென்றுக்கு108 உரு வீதம் நாற்பது நாள் செபிக்க
சித்தியாகும். இப்படி செய்து வர நாற்பதாம் நாள் மேற்படி
தேவதை ஒரு சிறிய மனித ரூபத்துடன் விபூதி பையும்,
பிரம்பும் கொண்டு வரும் வந்து பூசை செய்யும் குளத்தின்
ஓரமாய் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி
ஸ்நானஞ்செய்வது போல் இறங்கும். அந்த சமயத்தில்
பயப்படாமல் சீக்கிரம் மேற்படி பையும், பிரம்பும்
எடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று
கொண்டால் இக்குட்டி சாத்தான் அவ்வளவு சலத்திலிறங்காமல்

விபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும்.
அப்போது நீ என்னிடம் நான் நினைக்கும் போதெல்லாம் வந்து

நான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச்
சிவன்மீதுஆணையிட்டுக் கொடு என்று சொல்ல வேண்டும்.
அது ஆணையிட்டு கொடுத்த பின் விபூதி பையையும்,
பிரம்பையும் கொடுத்து விடவும்.பின்னர் இது நம்முடனே
இருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திரசித்தி பெற்றவரின்
கண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு தெரியாது. நாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புரம் உள்ள
சாத்தானுக்கு காட்டி விட்டு சாப்பிடவும்.அப்படி செய்யாதவரை
குட்டி சாத்தான் கெடுதல் செய்யும்.
                                          
ஜின்
 
   
                               இதன் நன்மை

எந்த தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்று கேட்டாலும்
கொண்டு வந்து கொடுக்கும் அதை பிறர்க்கு கொடுக்கலாம்
நாம் அனுபவிக்ககூடாது.
நாம் சொல்லும் சகல வேலைகளையும் செய்யும்.நம்மை எங்கு
செல்ல வேண்டுமென்றாலும் நொடிப்பொழுதில் நம்மை தூக்கி
செல்லும். ஆனால் எதேனும் வேளையை கொடுத்துக்கொண்டே
இருக்க வேண்டும்

                                  வழிமுறைகள்:

வெள்ளிக்கிழமை இராத்திரி மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது
நதியில் ஸ்நானஞ்செய்து அனுஷ்டானம் முடித்து இடுப்பளவு
தண்ணீரில் நின்று கொண்டு நாற்பத்தெட்டு நாள் கீழ்சொல்லும்
மந்திரத்தை செபிக்கவும்.

செபிப்பவர் தானே சமையல் செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட
வேண்டும். தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து
அதில் படுத்துக்கொள்ள வேண்டும்.
                         
 
                                       (2)ஜின் வசிய   மந்திரங்கள்
                                                     ஜின் மந்திரம்

 ன ப னொ பன் பை ய, பிட் பு டம் மொ புட் டன்க், ன மொ புட் ட ய, மொம மொன ம அஹ் உட், புட் டன்க் க ரி யொ, டம் மும் க ரி யொ, ஸுன்க் கன்க் க ரி யொ, ஒம் ப்ஹ்ர ன்கன்~, ம னீ ம மக்.

(Na Ba No Ho Ban Bai Ya, Pit Bu Tam Mo Put Tang, Na Mo Put Ta Ya, Moma Mona Ma Ah Ut, Put Tang Ka Ri Yo, Tam Mum Ka Ri Yo, Sung Kang Ka Ri Yo, Om Phra Ngan ~, Ma Nee Ma Mak.)

                                    (3)ஜின் வசிய   மந்திரங்கள்



ஜின் மந்திரம்

 

 

 Pஹ்ர ள ந்கன்)நொர்மல்/Bஅஸிக் Kஅத: ஃஒ ளீ Mஅ Kஅ Cஹ, Pஉட் Tஒஹ் ஆஹ் Kஅர் Cய , Mஇ Yஎஒ Pரெ Cஹம்,Kஅ Cஹன் ஆஹ் ள ஃஅர் Mஉன்,Pஉட் Tஒஹ் Sஅ Mஅ ஃஅர் Mஇ, ஓஹ்ம் Pரக் Kஅ Cஹ Mஇ , ஏ ஏ Kஅ Cஹ ள நி, T Pஉட் Tஒஹ் Tரன் ஓஹ்ம் Pரக் ஃஅன்,ஆஹ் Kஅர் Cஹ நி Mஒ ற , Mஅ Mஅ Pஉட் Tஒஹ் Kஅ, Cஹ ள Mஅ ஃஅன் , ஓஹ்ம் Pரக் ஃஅன் Pஉட் Tஒஹ் ஆஹ் ள ஃஅன்,Sஉ Kஒஹ் ஆஹ் ள ஃஅன் , Tஅன் Mஉன் ஆஹ் ள ஃஅன், ஓஹ்ம் Pரக் ஃஅன் ஓஹ்ம் Pரக் Gஅன்

 
(Phra La Ngan)Normal/Basic Katha: Ho Lee Ma Ka Cha, Put Toh Ah Kar Cya , Mi Yeo Pre Cham,Ka Chan Ah La Har Mun,Put Toh Sa Ma Har Mi, Ohm Prak Ka Cha Mi , E E Ka Cha La Ni, T Put Toh Tran Ohm Prak Han,Ah Kar Cha Ni Mo Ra , Ma Ma Put Toh Ka, Cha La Ma Han , Ohm Prak Han P
ut Toh Ah La Han,Su Koh Ah La Han , Tan Mun Ah La Han, Ohm Prak Han Ohm Prak Gan *
ஜின்
 
  
   
 
               
 
                 
 
 

ஆண் பெண் வசியம்,ராஜவசியம்லோக வசியம்,




மந்திரம், மாயவித்தை, வசியம்


இந்துக்கள், பௌத்தர்கள் என்பவர்கள் மத்தியில்  மந்திரம், மாயவித்தை, வசியம் என்பன பிரபல்யம்மடைந்து காணப்படுகின்றன. அதற்காக மற்றைய மதத்தவர்கள் இதனை செய்யவில்லை என்றல்ல.  ஏனையவர்கள் இவற்றிலே நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றனர். இவைகள் மூலம் பல காரியங்கள் செய்து வருகின்றனர். இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் இம்மூன்றும் ஒன்றுல்ல, மூன்றுமே மூவகைப்பட்டவை. எனவே, கீழ்வருகின்ற தலைப்பின் கீழே அவற்றின் ஆராய்ந்து பார்ப்பது நன்று



வசியம்

வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.

1. ராஜவசியம்

தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும்.

2. லோக வசியம்

இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.

3. சர்வ வசியம்

இது      ஆவிகளை வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். ஆவிகளை வசீகரப்படுத்தி செய்யும்  மந்திரம்

4. மிருக வசியம்

இது மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும்.

5. ஆண் பெண் வசியம்

இது தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம் செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினது பாவனைப் பொருட்கள்  ஏதேனும் இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு முறைகளிலே செய்யப்படுகின்றது

1. சாதாரண தரம்                               2. உயர்தரம்



சாதாரண தரம்

இதனைச் செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய், என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால் அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று செலவு குறைந்தாக காணப்படுகின்றது.

உயர்தரம்

இவ்விசயம் செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும் (யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக் கூறி  ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய் எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தல், சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும்.



அசுத்த ஆவிகள்

வசியம் செய்யப்படுகையில்   ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகின்றது. ஆவிகளுடன் பேசுதல் என்பது தெய்வங்களின் ஆவிகளுடன் பேசுதல் என்று கூறுவர். இங்கு தெய்வத்தின் ஆவிகளாக  தெய்வங்களையே குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவதாக செத்த மனித ஆவிகளுடன் பேசுதல் ஆவிகளோடு பேசுதல் எனப்படும்.



ஏவல் பில்லி சூனியம்

ஏவல் பில்லி சூனியம் என்பன ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். இது பின்வரும் மூன்று முறைகளில் செய்யப்படும்.

தெய்வம் எனும் ஆவிகளை ஏவி விடுதல் – உம் - முனி, காளி,

செத்த ஆவிகளை ஏவி விடுதல் –

மிருகங்கள், ஊர்வனவற்றை ஏவி விடுதல்

நாய் – கடிக்கும்படி

மாடு – முட்டும்படி

பாம்பு – கொத்தும்படி

மந்திரம் பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள்

1. பணவிரயம்

2. ஏமாற்றம்

3. மரணம் ஏற்பட வாய்ப்புண்டு

                           
                                                       
                             
                                                            

                                       

 

                   
 
 
         
 
 
 

 


                                        

Saturday, 22 February 2014

ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும்


 
             
முருகப்பெருமான் ப்ரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்டபோது, அறியாமல் விழித்தவரை சிறைக்கு அனுப்பி, “என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்.
ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்து இந்த ஓம்காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப்புலத்தை உண்டாக்குகிறது. நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும்பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய அந்த இயங்கு சக்தியைத்(சூஷ்ம சக்தி) தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின் சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூஷ்ம சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும்.
இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத , காணவும் இயலாத ஒரு சூஷ்மமான அலைவரிசையில்தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூஷ்மமான பிணைப்பினை உருவாக்குகிறது. அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூஷ்மமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டுவிட்டால் அந்த பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும்.
இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது. அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.
இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்து வர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.
இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்!) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும்பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும். நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்!) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும்போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலைவரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாட்கள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.
இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்து செய்யும்பொழுது அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது. வள்ளலார் கூறிய ஆன்மநேய ஒருமைப்பாடு வழிக்கும் இதுதான் மூலம்.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம்புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது.
கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி                                                                                                                             
ம்” என்னும் ப்ரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது சமஸ்கிருத மொழியின் எழுத்துக்களான அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை, மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது. ‘அ’ மற்றும் ‘உ’ எழுத்துக்கள் சேர்ந்து ‘ஓ’ என்று ஒலிக்கப்படுகிறது.