உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்

உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத்
உடலைப்பற்றி கூறுவேன் தேகமது என்னவென்றால் குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.
Showing posts with label வாலை புவனேஷ்வரி. Show all posts
Showing posts with label வாலை புவனேஷ்வரி. Show all posts

Sunday, 16 March 2014

வாலை புவனேஷ்வரி யந்திரம், மந்திரம்


 ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை புவனேஷ்வரி . வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லை புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம்

                                             வாலை யந்திரம்
 
        
இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை நாளில், கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 1008 தடவைகள் செபித்திட வேண்டும்.
 

"ஓம் கிலி சிறி றீங்"
இவ்வாறு செபித்து முடிந்ததும் , தேவை உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டும். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன். அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள் நீங்கிவிடுவார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடும். அத்துடன்  வாலை புவனேஷ்வரி அம்மனின் அருளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.